Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    58. அருத்தி வாழ்வொடு


    அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும்
    அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும்
    தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன்
    தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே
    எருத்தி லேறிய இறைவர் செவிபுக வுபதேசம்
    இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம்
    பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
    பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே.

    -பழநி



    பதம் பிரித்து உரை


    அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
    அடுத்த பேர்களும் இதம் உறு மகவொடு வளநாடும்


    அருத்தி வாழ்வொடு = ஆசையுடன் கூடிய வாழ்க்கையும்தனகிய = உள்ளத்லில் களிப்பைத் தரும் மனைவியும் =மனைவியும் உறவோரும் = சுற்றத்தார்களும் அடுத்த பேர்களும் = தம்மிடம் நட்பு கொள்பவர்களும் இதம் மிகு =இன்பத்தைத் தருகின்ற மகவொடு = குழந்தையும் வள நாடும்= வளப்பமுள்ள நாடும்.


    தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன் தனை
    பராவியும் வழிபடு தொழிலது தருவாயே


    தரித்த ஊரும் = இருப்பிடமாகக் கொண்ட ஊரும் மெய் என=நிலையானது என்று நினையாது = எண்ணம் கொள்ளாமல் உன்தனைப் பராவியும் = உன்னைப் போற்றி வழிபடும்தொழிலை = வழிபடும் பணியை தருவாயே = தந்து அருளுக.


    எருத்தில் ஏறிய இறைவர் செவி புக
    இசைத்த நாவின இதண் உறு குற மகள் இரு பாதம்


    எருத்தில் ஏறிய = இடப வாகனத்தில் ஏறும். இறையவர் =இறைவராகிய சிவபெருமானது. செவி புக = காதுகளில் புகும்படி. உபதேசம் இசைத்த = உபதேசப் பொருளைச் சொல்லி அருளிய நாவின = திரு நாவை உடையவனே இதண் உறு= பரண் மிசை இருந்த குற மகள் இரு பாதம் = குறப் பெண்ணான வள்ளியின் இரு பாதங்களை.


    பரித்த சேகர மகபதி தர வரு(ம்) தெய்வ யானை
    பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே.


    பரித்த சேகர = தாங்கித் திருமுடியில் அணிந்து கொண்டவரே. மகபதி = வேள்வி நாயகனாகிய இந்திரன் தர வரு தெய்வ யானை = தர வந்த தேவசேனையை பதி கொள் =நாயகனாகக் கொண்டவனே ஆறிரு புய = பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே பழநியில் உறை பெருமாளே =பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே.






    ஒப்புக:


    குறமகள் இருபாதம் தரித்த சேகர.........
    • பணியா வென வள்ளிபதம் பணியுந்
    தணியா அதிமோக தயாபரனே ...............................................................கந்தர் அனுபூதி






    • வள்ளி பதம் பணியும்வேளைச் சுரபூபதி மேருவையே) ..........................கந்தர் அனுபூதி
Working...
X