Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    65.கதியைவிலக்கு


    கதியைவி லக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷண
    கனதன வெற்பு மேல்மிகு மயலான
    கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய
    கனதன மொத்த மேனியு முகமாறும்
    அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
    அரவபி டித்த தோகையு முலகேழும்
    அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும்
    அபிநவ பத்ம பாதமு மறவேனே
    இரவிகு லத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
    ரணமுக சுத்த வீரிய குணமான
    இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
    இதமொட ளித்த ராகவன் மருகோனே
    பதினொரு ருத்தி ராதிகள் தபனம்வி ளக்கு மாளிகை
    பரிவொடு நிற்கு மீசுர சுரலோக
    பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
    பழநிம லைக்குள் மேவிய பெருமாளே.






    பதம் பிரித்து உரை


    கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
    கன தன வெற்பு மேல் மிகு மயலான


    கதியை = நற் கதியை விலக்கும் மாதர்கள் = அடைய முடியாத வண்ணம் தடுக்கின்ற பொது மகளிர் புதிய இரத்ன பூஷண =புதிய இரத்தின ஆபரணங்கள் அணிந்துள்ள கன தன வெற்பு மேல் = கனத்த கொங்கைகளின் மேல் மிகு மயலான =மிகுதியாக வைத்த மயக்க அறிவால்.


    கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய
    கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும்


    கவலை மனத்தன் ஆகிலும் = கவலை கொண்ட மனத்தை நான் உடையவனாக இருந்த போதிலும் உனது =உன்னுடைய. ப்ரசித்தமாகிய = புகழ் பெற்ற கனதனம் ஒத்த மேனியும் = சிறந்த பொன் போன்ற திருமேனியும் முகம் ஆறும் = ஆறு திருமுகங்களும்.


    அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும்
    அரவு பிடித்த தோகையும் உலகேழும்


    அதி பல வஜ்ர வாகுவும் = அதிக பலம் கொண்ட வைர மணி போன்ற தோள்களையும் அயில் நுனை = கூரியநுனியையுடைய வெற்றி வேல் அதுவும் = வெற்றி வேலையும்அரவு = பாம்பைப் பிடித்துள்ள தோகையும் = மயிலையும் உலகு ஏழும் = ஏழு உலகங்களும்.


    அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
    அபி நவ பத்ம பாதமும் மறவேனே


    அரற்றும் = அதிரும்படி கூவுகின்ற கோழியும் = சேவலையும்வழுத்தி வாழ்வுறும் = துதி செய்து நல் வாழ்வைப் பெறுகின்றஅபிநவ பத்ம = புதிய தாமரை போன்ற பாதமும் = திரு வடிகளையும் மறவேனே = (நான்) மறக்க மாட்டேன்.


    இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு
    ரணமுக சுத்த வீரிய குணமான


    இரவி குலத்து = சூரிய குலத்தைச் சேர்ந்த இராசத மருவி =இராசத குணம் உடைய ( வாலியுடன்) எதிர்த்து வீழ் =எதிர்த்துத் தோற்று நின்ற கடு ரண முக = கடுமையான போர்க்களத்தில் சுத்த வீரிய குணமான = தூய வீரம் வாய்ந்த குணம் படைத்தவனான.


    இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வு உற
    இதமொடு அளித்த ராகவன் மருகோனே


    இளையவனுக்கு = சுக்ரீவனுக்கு நீள் முடி அரசது பெற்று =பெரிய அரசாட்சியைக் கொடுத்து வாழ்வுற = வாழுமாறு இதமுடன் அளித்த = அன்புடன் உதவி புரிந்த ராகவன் மருகோனே = இராமனின் மருகோனே.


    பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை
    பரிவொடு நிற்கும் ஈசுர சுர லோக


    பதினொறு ருத்திராதிகள் = பதினொன்று உருத்திரர்களின்தபனம் விளக்கு மாளிகை = ஒளி திகழும் திருக்கோயிலில்பரிவோடு நிற்கும் ஈசுர = அன்புடன் எழுந்தருளியிருக்கும் ஈசனே சுர லோக = தேவ லோகத்தில் உள்ள.


    பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர்
    பழநி மலைக்குள் மேவிய பெருமாளே.


    பரிமள = வாசனை மிகுந்த கற்பக அடவி = கற்பகக் காட்டில்அரி அளி = வரிகளுடன் கூடிய வண்டுகள் சுற்றும் = சூழ்ந்து மொய்ப்பதால் பூ உதிர் = மலர்கள் உதிரப் பெற்ற பழனி மலைக்குள் மேவிய பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.








    [div5]விளக்கக் குறிப்புகள்


    முருகபெருமானுக்குரிய பன்னிரு அங்கங்களையும் 1திருமேனி, 2,3,4,5,6,7ஆறு திருமுகங்கள், 8 தோள், 9 வேல், 10மயில், 11 கோழி, 12 திருவடி கூறி அவைகளை மறவேன் எனக் கூறுவது அழகானது – செங்கல்வராய பிள்ளை


    அ. மேனியும் முகமாறும் .....
    முகம் ஆறும் ... ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், என்ற ஐந்து திரு முகங்களுடன் அதோ முகமும் சேர்ந்து ஆறு முகங்களாயின.
    ஆ. மயில், பாம்பு, கோழி....
    தோகை - மயில். இது சினையாகு பெயர். மயில் - விந்து. பாம்பு - மூலப் பிருகிருதி. விந்து மூலப் பிருகிருதியை அடக்கும். கோழி என்பது நாத தத்துவம்.
    இ. இளையோனுக்கு நீள் முடி அளித்தது......
    (காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்டமாட்டேன்
    நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்
    கேட்டிலேன் இன்றுகண்டும் கிளிமொழி மாதராளை
    மீட்டிலேன் தலைகள்பத்துங் கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன் )
    --- இராமவதாரம் (மகுட பங்கப் படலம்)
    ஈ. பதினொரு ருத்திராதிகள் .... மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன்[div5]
Working...
X