ஒப்புக
அ. வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம்...
கேசவன் ... வேழ மருப்பை ஒசித்தான்..................................நம்மாழ்வார் (திருவாய் மொழி)
ஆ. சீயுதிர....
தோலெலும்பு சீ நரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
சோரிபிண்ட மாயுருண்டு வடிவான தூலம்).......................திருப்புகழ், தோலெலும்பு
இ. நோயிடு குரம்பை...
கள்ளப்புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே....................................திருவாசகம் -சிவபுராணம்
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொ டிவைபல சுகமாலக்..............திருப்புகழ்,குரம்பைமலசலம்
பல நோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது..............திருப்புகழ், முனையழிந்தது
ஈ. தீ நரிகள் கங்கு காகமிவை.....
எய்ச்சிளைச்ச பேய்க்கும் எய்ச்சிளைச்ச நாய்க்கும்
எய்ச்சிளைச்ச ஈக்கும் இரையாகும்
இக்கடத்தை நீக்கி அக்கடத்து ளாக்கி
இப்படிக்கு மோட்சம் அருள்வாயே)..................................................... திருப்புகழ், மச்சமெச்சு
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
காக்கைக் கேஇரை யாகிக் கழிவரே)............................... திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை
எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்
சரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க
நரியெனக் கென்னும் புன்னாய் என்கெனும் இந் நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே)...................பட்டினத்தார்... பொது
உ. விரக சிங்கி ...
சிங்கி = குளிர்ந்து கொல்லும் விஷம். மாதராசை இந்த நஞ்சுக்கு நிகரானது.
ஊ. கார் கலிசை வந்த சேவகன்...
இவர் அருணகிரியாருடைய இனிய நண்பர். இவர் காவிரிச் சேவகன் என்ற
பெயராலும் அழைக்கப் பெறுகின்றார். முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி
ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர். மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் இவர் ஒருவர். மற்றவர்கள் சோமநாதன், பிரபுட ராஜன்
இவரைப்பற்றி குறிப்பிடும் மற்ற திருப்புகழ் பாடலகள்
கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும் வீர------------------------ தோகைமயிலேக
வீறு கலிசை வரு சேவகனது.. இதயம் மேவும் முதல்வ---------------------------கோல மதிவதனம்
வீறு கலிசைவரு சேவகனது இதயம் ... புகழ்------------------------------- சீற லசடன்வினை காரன்
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு புரிவோனே------------------------ இருகனக மாமேரு
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் ------------------------------------------பாரியான
Bookmarks