77.தமருமமரும்
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.

-77 பழநிபதம் பிரித்து உரை
தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாக
தமரும் = சுற்றத்தாரும் அமரும் = உள்ள. மனையும் = இல் வாழ்வும்
இனிய தனமும் = இனிமை தரும் பொருட் செல்வமும் அரசும் =ஆட்சியும் அயலாக = (என்னை) விட்டு விலகும்படி.


தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தறுகண் = கடுமை கொண்ட மறலி = யமன். முறுகு கயிறு = திண்மை கொண்ட பாசக் கயிற்றை தலையை வளைய = (என்) தலையைச் சுற்றி எறியாதே = எறியாதவாறு.


கமல விமல மரகத மணி
கனக மருவும் இரு பாதம்


கமல = தாமரை போன்றதும் விமல = சுத்தமானதும் மரகத மணி =மரகதம், மணி இவைகளைப் போன்றதும் கனக = பொன் போன்றதும் மருவும் இரு பாதம் = அருமை வாய்ந்த (உனது)இரண்டு திருவடிகளை.


கருத அருளி எனது தனிமை
கழிய அறிவு தர வேணும்


கருத = தியானிக்க அருளி = எனக்கு அருள் செய்து எனது தனிமை =என்னுடைய திக்கற்ற நிலைமை கழிய = நீங்கும் வண்ணம்அறிவு தரவேணும் = அறிவைத் தந்து அருள வேண்டும்.


குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே


குமர = குமரனே சமர குருக = போர் வல்ல முருகனே பரம =பரமனே குலவு = விளங்கும் பழநி மலையோனே = பழனி மலையில் வீற்றிருப்பவனே.


கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா


கொடிய பகடு = கொடிய மத யானையை முடிய முடுகி = முடுகிஎதிர் வரும்படி செய்த குறவர் சிறுமி மணவாளா = குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே.


அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்து அருள்வோனே


அமரர் இடரும் = தேவர்களின் துன்பங்களும் அவுணர் உடலும் =அசுரர் களுடைய உடல்களும் அழிய = அழியும்படி அமர் செய்துஅருள்வோனே = போர் செய்து அருளியவனே.


அறமும் நிறமும் மயிலும் அயிலும்
அழகும் உடைய பெருமாளே.


அறமும் = அறமும் நிறமும் = செந்நிறமும் மயிலும் = மயிலும் அயிலும் = வேலும் அழகும் = அழகும் உடைய பெருமாளே = உடைய பெருமாளே.