ராம நாம ஜெப மகிமை.


ஒரு ராஜா அவனுடைய மந்திரியோடு காட்டில் வேட்டையாட போனான். மந்திரி சிறந்த ராம பக்தன்.


எப்போதும் அவன் ராமநாமம் உச்சரித்துக்கொண்டிருப்பவன். ரொம்ப கெட்டிக்கார மதியூகி என்பதால் ராஜாவுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டு
பதில் பெறுவதில் இன்பம். காட்டில் வேட்டையாட வெகு தூரம் போனதில் ராஜா களைத்து போனான். பசி காதடைத்தது. களைப்பு தீர ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர். மந்திரி சற்று வயதானவன் கூட. கிளம்பு நாம் இருவரும் எங்காவது உணவு தேடுவோம் என்றான் ராஜா.
இல்லை ராஜா நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன் என்றார் மந்திரி.


நீ என்ன செய்வாய் நான் வரும்வரையில்.


பேசாமல் ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பேன்.


ராஜா சிரித்தான்.


ராம ஜபம் உணவு கொண்டு தருமா? கஷ்டப்பட்டு உழைத்தால், முயற்சி எடுத்தால் மட்டுமே உணவு கிடைக்கும். புரிந்து கொள். நீ ரொம்ப களைத்திருக்கிறாய். ஆகவே இங்கேயே இரு. நான் போய் அருகில் எதாவது வீடு இருக்கிறதா என்று பார்த்து உணவு சேகரித்து வருகிறேன் என்று ராஜா கிளம்பிவிட்டான்.


மந்திரிக்கு தனிமையில் ஆரண்யத்தில் ராமநாம ஜபம் பண்ண நேரம் கிடைத்ததே வரப்ரசாதம் என கருதி சந்தோஷமாய் ஜெபத்தில் ஈடுபட்டான்.


சுற்றி அலைந்து ஒரு வீட்டை எங்கோ கண்டுபிடித்து ராஜா கதவை தட்டினான். வீட்டில் இருந்தவர்கள் ராஜாவை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்று அவனுக்கு அவர்களால் முடிந்தவரை விருந்து வைத்தனர். ராஜாவும் உண்டு பசியாறி மந்திரிக்கும் உணவு பொட்டலம் கொண்டுவந்தான்.


இப்போது புரிகிறதா. என் உழைப்பும் முயற்சியும் தான் உணவு தந்தது. உன் ராம நாம ஜபம் என்ன பலன் தந்தது? என்றான் ராஜா.


அவனை ஏற இறங்க பார்த்து மந்திரி அமைதியாக சொன்னான்:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நீ ஒரு பெரிய ராஜா, உணவுக்காக அலைந்து தேடி ஒரு எழை குடும்பத்திடம் பிச்சையெடுத்து உண்டு பசியாறினாய். என்னைப் பார் இருந்த இடத்திலேயே நான் செய்த ராமநாம ஜெபம், ஒரு ராஜாவின் கையால் எனக்கு உணவு கொண்டு வந்து தந்தது. இப்போது புரிகிறதா ராம நாம ஜெப மகிமை என்றாuர்.


ராஜா மந்திரியை பக்தியோடு நோக்கினான்.


SRI RAMA JAYAM