79.திடமிலி
திடமிலிசற் குணமிலிநற்
றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற்
செபமிலிசொர்க் கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற்
கியல்பிலிநற் றழிழ்பாட
இருபதமுற் றிருவினையற்
றியல்கதியைப் பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக்
கிளைமடியப் பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக்
கிதழ்மலர்கொக் கிறகோடே
படர்சடையிற் புனைநடனப்
பரமர்தமக் கொருபாலா
பலவயலிற் றரளநிறைப்
பழநிமலைப் பெருமாளே.

- 79 பழநி


Pdiv6]பதம் பிரித்தல்


திடம் இலி சற் குணம் இலி
நல் திறம் இலி அற்புதமான


திடம் இலி = நிலையான புத்தி இல்லாதவன்
சற் குணம் இலி = நல்ல குணம் இல்லாதவன்
நல் திறம் இலி = நல்ல திறமை அற்றவன்
அற்புதமான = அற்புதச் செயல்களை
செயல் இலி = செய்ய முடியாதவன்


செயல் இலி மெய் தவம் இலி
நல் செபம் இலி சொர்க்கமும் மீதே


மெய்த் தவம் = உண்மையான தவச் செயல்களில்
இலி = ஈடுபடாதவன்
நல் செபம் = தோத்திரப் பாடல்களை ஜபம் செய்து
இலி = இறைவனை வணங்காதவன்
சொர்க்கமும் மீதே = சொர்க்கத்தில்


இடம் இலி கை கொடை இலி
சொற்கு இயல்பு இலி நல் தமிழ் பாட


இடம் இலி = இடம் பெறத் தகாதவன்
கைக் கொடை இலி = பிறருக்கு ஈகை செய்யாதவன்
சொற்கு இயல்பு இலி = நல்ல சொற்களைப் பேச முடியாதவன்நல் தமிழ் பாட = இனிமையான தமிழில் பாக்களைப் பாடமுடியாதவன்


இரு பதம் உற்று இரு வினை
அற்று இயல் கதியை பெற வேணும்


இரு பதமும் = (உனது) இரண்டு திருவடிகளையும்
உற்று = அடைந்து
இரு வினை அற்று = (என்) கொடிய வினைகளை நீக்கி
இயல் கதியைப் = (நான்) நல்ல கதியைப்
பெற வேணும் = பெற வேண்டுகின்றேன்.


கெடு மதி உற்றிடும் அசுர
கிளை மடிய பொரும் வேலா


கெடு மதி உற்றிடும் = கெட்ட புத்தியால்
அசுரக் கிளை மடிய = அசுரர்களும் அவர்களுடைய
சுற்றத்தார்களும் இறந்து பட
பொரும் வேலா = சண்டை செய்த வேலாயுதனே


கிரண குறை பிறை அறுகு
அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே


கிரண குறைப் பிறை = குறைபட்ட ஒளி உடைய பிறைச்
சந்திரனையும்
அறுகு = அறுகம் புல்லையும்
அக்கு = உத்திராட்சத்தையும்
இதழ் மலர் = கொன்றை மலரையும்
கொக்கு இறகோடே = கொக்கின் இறகையும்


படர் சடையில் புனை
நடன பரமர் தமக்கு ஒரு பாலா

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
படர் சடையில் = பரந்த சடையில்
புனை = அணிந்த
நடனப் பரமர் தமக்கு = நடனம் செய்யும் சிவ பெருமானுக்கு
ஒரு = ஒப்பற்ற.
பாலா = புதல்வனே.


பல வயலில் தரள(ம்) நிறை
பழனி மலை பெருமாளே.


பல வயலில் = பல வயல்களில்
தரளம் நிறை = முத்துக்கள் நிறைந்துள்ள
பழநி மலைப் பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே[/div6]