Announcement

Collapse
No announcement yet.

Remedy for back pain - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Remedy for back pain - Periyavaa

    முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips


    பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!


    நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!


    "நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை... வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்"


    முகத்தில் வேதனை தெரிந்தது.


    " முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவஸர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "ஸனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட ஸெரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]


    அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதி-ன்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மொளகு ரஸம், பெரண்ட தொகையல் பண்ணி ஸாப்டு..! என்ன?"


    "கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்"


    மூணு மாஸம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.


    வலி போய்விட்டதாம்.!


    எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரஸம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன ஸிம்பிள் வைத்யம் கை மேல் பலன்!


    பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...


    வீடுகள்ள, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......


    1. நல்லெண்ணெய் - வெளக்கேத்த, ஸமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;


    2. வெளக்கெண்ணெய் - வர்ஷத்ல ரெண்டு தரம், காலேல வெறும் வயத்துல குடிச்சா..... வயறு ஸெரியா இருக்கும். வயத்துவலி இருந்தா, கொஞ்சம் வெளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா ஸெரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.


    3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனோமும் கை,கால், முட்டிகள்ள தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.


    [பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]


    தெனோமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்ரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.


    அந்த காலங்கள்ள, வெளிலேர்ந்து வந்தா... குடிசைவாஸிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிக்கிண்டுதான் வீட்டுக்குள்ளியே நொழைவா!


    இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான் கெடக்கு! பின்ன...ஏன் வ்யாதி வராது?......
Working...
X