Announcement

Collapse
No announcement yet.

Karuvoorar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karuvoorar sidhar

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(19)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    *கருவூரார் சித்தர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    சோழர் மன்னர்களின் ஐந்து தலைநகரங்களில் ஒன்றான கருவூரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் இவர்.


    ஆரம்ப வயதிலேயே ஆர்வமாக ஞானநூல்களைப் பயின்று வந்தார்.


    கருவூராரின் பெற்றோர்களின் பணியானது, ஊர் ஊராகப் போய் அங்கிருக்கும் கோவில்களின் பஞ்சலோக விக்கிரகங்களைச் செப்பனிட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வாழ்க்கைப் பயணத்தைக் கழித்தனர்.


    ஒரு சமயம் போகர்சித்தர் திருவாடுதுறைக்கு வந்திருந்தார். இதைக் கேள்வுற்ற கருவூரர் திருவாடுதுறை சென்று போகர் சித்தரை முன் வந்து வணங்கி நின்றார்.


    போகர் சித்தர் கருவூரருக்கு அருள் புரிந்து, *"கருவூரா! உன் குலதெய்வமான அம்பாளை நீ தினந்தோறும் வணங்குவாயாக! அவள் உனக்கு வழி காட்டக் காத்திருக்கிறாள்"* என்று உபதேசித்தருளினார்.


    அதன்படியே கருவூராரும் குலதெய்வ அம்பாளை வழிபடத் தொடங்கினார்.


    ஞானியைப் போல ஞான விஷயங்களைத் தெரிந்துணர ஏங்கினார். உள்ளமுருகி அம்பாளை வழிபட்டார். போகர் சொன்ன மாதிரியே கருவூரர் சித்துக்கள் புரியும் ஞானமூர்த்தியாக உயரந்தார்.


    சித்தராய் காட்சியளிக்க ஆரம்பித்தார். பல தலங்களுக்கும் போய் அங்குள்ள சிவாலய சிவலிங்கத் திருமேனிகளைப் பொன்னை உருவாக்கிப் போர்த்தினார்.


    இவரின் பொன்னுருக்கும் ரசவாத வித்தையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனிகள் பார்வைக்கு நேரத்திற்கு ஒரு மாதிரி விசித்திரமாக காட்சி தரும்.


    ஒருமுறை பார்த்தால் செம்பு போல காட்சியளிக்கும். மீண்டும் மற்றொருமுறை பார்க்கும் போது தங்கம் போல ஒளிரும்.


    கருவூரார் காசித் தலத்திற்கும் சென்று அங்கிருக்கும் விசுவநாதர் ஆலயத்தில் தாமிரத்தாலான வேதை செய்து தங்கத்தால் லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.


    திருமாளிகைத் தேவர் ஆலயங்கள் தோறும் சென்று சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார்.


    கருவூராரோ அம்பாள் வழிபாட்டிலேயே மூழ்கியொழுகினார்.


    இவர்களின் இருவருக்குள் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை, நடுவிலிருந்து போகர் தீர்த்து வைப்பராக இருந்து வந்தார்.


    ஒருநாள், திருமாளிகைத் தேவர் வழிபாட்டை முடித்து விட்டு, நிர்மால்யத்தைக் கருவூராருக்கு அன்புடன் கொடுக்க, அதை பணிவோடு ஏற்று உண்ட கருவூராருக்கு உள்ளத்தில் மேலும் ஞானம் பிறந்தது.


    அவரின் கண்களில் சக்தியுமாய், கருத்தில் சிவபெருமானுமாக அம்பிகையின் திருவருள் இடமர்ந்து பொதிந்துணர்ந்தன.


    ஒரு சமயம் வடதேசத்தே ஆண்ட இரணியவர்மன் என்னும் மன்னன் தீர்த்த யார்த்திரை செய்து வந்தான். யாத்திரையில் காணப்பெற்ற பல நதிகளிலும் நீராடி ஈசனைத் தொழுது கொண்டு, பின் தில்லையை வந்தடைந்தான்.


    தில்லையிலுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் தலையை மூழ்கச் செய்த போது..............................


    *தீர்த்தத்தினுள்ளிருந்து.........ஓம்......ஓம்.....ஓம்.....ஓம் எனும் ஓங்காரம் ஒளி கேட்டது.* தீர்த்தத்தினுள் பழையபடியும் தலையை மூழ்க வைத்துக் கண்களைத் திறந்து பார்த்து ஒலியின் நாதத்தைத் தேடினார்.


    அங்கே சிவபெருமான் திருநடனம் நடமாடிக் கொண்டிருந்த நிகழ்வு மன்னரின் கண்களுக்குத் தெரிந்தன.


    அக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் மன்னர். அப்படியே கைகளை தலைமேலாக தூக்கி குவித்து வணங்கிப் பரவசமானார்.


    அரண்மனை திரும்பிய மன்னனின் எண்ணவோட்டமெல்லாம்...........சிவகங்கைத் தீர்த்தத்தில் காணப்பெற்ற நடனத்திருவுருவே கண்களில் நிழலாடி மறைய மறுத்து நடனக் கோலத்தை லயித்தவாறே இருந்தார்.


    வேறேதுச் சிந்தனைக்கும் அவர் மனம் செல்லாது ஈசன் திருநடனக் கோலச் சிந்தனை யோடிருந்தார்.


    மன்னனின் மனதில் அந்தக் காட்சி ஆழமாக வேரூன்றியது. அதைச் செயல்வடிவமாகப் பெற அவர் மனம் ஏங்கியது.


    தன் மனத்தில் பதிந்த அந்தச் சிவபெருமானின் நடனக் கோலழகை அப்படியே ஓவியமாகவரைந்து சுத்தமான பொன்னால் விக்கிரமாக இழைத்து, ஆலயம் வைத்து வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென்று பேரார்வம் கொண்டான்.


    தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சிற்பிகளையெல்லாம் வரவழைத்தான். ஒருமண்டலகாலத்துக்குள் இவ்வடிவத்தை உருவாக்ஙித் தரும்படி அன்புடன் அச்சிற்பிகளைக் கேட்டுக் கொண்டான்.


    எல்லாவகையானவனலிலும், அனுபவத்திலும் முதிர்ந்திருந்த அச்சிற்பிகளால் எவ்வளவோ முயன்றும் அச்சிற்பிகளால் ஓவியத்தால் வரையப்பற்றிருந்த நடனக் கோலச் சிற்பத்தை வடித்தெடுக்க முடியவில்லை.


    ஒவ்வொன்றாக வடித்தெடுத்து வரும்போது பொருத்தும் இணைப்புக்கு இணங்காது, ஏதேனும் ஒருவகையில் விக்கிரகத்தில் குறை ஏற்பட்டு வந்து கொண்டிருந்தது.


    நாட்கள் விரைந்தன. ஒரு மண்டல கால நேரமும் கரைந்தொழிந்து போயிருந்தன. விக்கிரகம் முழுமையடையவில்லை.


    சிலை வடிவம் பெற மறுக்கிறது. இதை எப்படி மன்னரிடம் போய் எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் நம்மை மன்னன் விட்டு வைப்பானா? என.கவலை கொண்டிருந்தனர்.


    விக்கிரகம் செய்யும் விவகாரம் போகரின் சீடர்களுக்கு எப்படியோ எட்டியது. இச்செய்தியினை சீடர்கள் போகரிடம் தெரிவித்தனர்.


    சீடர்கள் சொன்னதைக் கேட்ட போகர், தம் சீடன் கருவூராரை அழைத்து வரும்படி சீடர்களிடம் கூறினார்.


    குரு அழைத்ததும், கருவூரார் உடனே வந்து குருவான போகரை வணங்கிப் பணிந்தார்.


    *கருவூரா?* இவர்கள் காட்டும் இடம் சென்று, அவர்கள் காட்டும் சித்திரத்தை வடித்தெடுத்துக் கொடுத்து வருவாயாக! என்றார்.


    கருவின் கட்டளையை பணித்தே வந்தததினால், என்னவென்றும், ஏதுவென்றும் கேட்காமலே குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து இடம் அகன்று சென்றார்.


    சிறிது தூரம் தள்ளி நடந்து வந்த பிறகுதான் கருவூரார் யோசனை செய்தார்.


    சிலையை எப்படி வடிப்பது?


    எந்த அமைப்பில் உருவாக்குவது?


    முடிய முடியாததை நம்மைக் கொண்டு முடித்து வரச் சொன்னது எதனால்?


    நம்மாலும் அது முடியுமா?


    தம்மைத்தானே கேள்வியைத் தொடுத்துக் கொண்டு உணரப்பெறும் சித்தத்தோடு நடந்தார்.............


    *மன்னன் நினைத்த நடனக் கோல சிற்பம் நாளை வார்த்து வ(ள)ரும்.*


    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(20)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *கருவூரார் சித்தர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    குருவான போகர் சித்தர் தன் சீடரான கருவூராரிடம், நீ சென்று மன்னனின் ஓவிய நகலுக்குண்டான சிற்பத்தை வடிவத்தெடுத்துக் கொடுத்து வா!" என ஆணையிட்டார்.


    மன்னர் ஏற்கனவே ஏற்பாடு செய்த சிற்பிகளால் விக்கிரகம் வார்த்தெடுக்க முனைந்திருந்த அச்சிற்பிகளால் சிற்பத்தை வடித்தெடுக்க முடியாமல், விக்கிரகத்தின் பொழிவு மருகி ஒழுகி குறை குறையாக வரவே, கடைசி நாளான 48-வது நாளான இன்றுடன் தவனைக் காலம் முடியவே....என்ன செய்வதென தெரியாமல் பயந்து விழித்தனர்.


    அந்த வேளையில் அந்த சிற்பிகளின் முன் வந்த கருவூரார் *" கவலைப் படாதீர்கள்"* விக்கிரகத்தை நான் உருவாக்கித் தருகிறேன் என்றார்.


    கருவூராரைப் பார்த்த அச் சிற்பிகள் எல்லோருமாகச் சேர்ந்து...கை தேர்ந்த எங்களால் இவ்வுருவச் சிற்பத்தைப் புணைவதில் குறைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது!,.....அப்படியிருக்க உங்களால் சிற்பத்தை எப்படி உருவாக்குவீர்கள்?" என்றனர்.


    சிலையை உருப்பெருக்க முடியவில்லையே என்று கலக்க பயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்......உங்கள் கலக்கத்தை விட்டொழியுங்கள். அதுவும் அவ்வுருவச் சிற்பத்தை ஒரு மணி நேரத்தில் முடித்துத் தருகிறேன். எனச் சொல்லி தைரியமூட்டி விட்டு விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை ச் சாத்திக் கொண்டார்.


    ஒரு மணி நேரம் கூட கடக்கவில்லை. கதவு திறந்தது. வெளியே கருவூரார் வந்தார். சிற்பிகளைப் பார்த்து *"விக்கிரகம் முழுமை பெற்று விட்டது"* போய்ப் பாருங்கள். எனச் சொன்னார் கருவூரார்.


    சிற்பிகள் கூடத்திற்குள் உள் வந்து பார்த்தனர். சிற்பிகள் அத்தனை பேரும் வியந்து திகைப்பிலாழ்ந்தனர். மன்னனின் ஓவியத்திலுள்ள ஆடல் வல்லானின் நடனக் கோலம், அப்படியே உருவச்சிலையிலும் விக்கிரகமாக பிரதியாயிருந்தது.


    வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கிப் பணிந்தெழுந்தனர். அதோடு மட்டுமல்லாது.....தங்களை அலட்சியப்படுத்தியமைக்கு மன்னிப்பும் கேட்டனர்.


    அச் சிற்பிகளுடன் இரவுப் பொழுதை அவர்களுடன் பேசி உறவாடிவிட்டு, மேலும் பல சிற்ப சாஸ்திர நுணுக்கங்களையும் அவர்களைனைவருக்கும் உபதேசித்துவிட்டு பின்பு மடம் ஒன்றைத் தேடிப் போனார்.


    இவ்வளவான நிகழ்வேதும் தெரியாத மன்னன், மண்டலக் கெடு முடிந்ததை கணக்கிட்டு சிலையைக் காண தன் பரிவாரங்களை கூட்டிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கும் ஆட்டங்களுடன் சிற்பக்கூடம் வந்து சேர்ந்தான்.


    கூடம் புகுந்து பார்த்த மன்னனும் விக்கிரகத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டாலும் பிரமித்துப் போனான். ஓவியத்தைக் கொடுத்து சிற்பம் வடிக்கச் சொன்னால் , ஓவியத்திலுள்ளதைக் காட்டிலும் மேன்மையான சிற்பம் அமைந்துள்ளதே! எனக்கூறி கூறி மேலும் மகிந்தான். சிற்பத்தின் முன்பாக அப்படியே கைகளைத்தூக்கி குவித்து விழுந்து வணங்கினான்.


    சிற்பிகளுக்குண்டான சன்மானத்தைக் கொக்க சிலை செய்த சிற்பிகளை அரண்மனைக்கு வந்து சேருமாறு கூறிவிட்டு, தன் பரிவாரங்களைத் திருப்பி அவனும் அரண்மனை வந்தடைந்தான்.


    அரண்மனையில் சிற்பிகளுக்கு சன்மானத்தைக் கொடுக்கும் போது, அதை தடுத்துக் குறிக்கிட்ட மந்திரி.......................


    "மன்னா! *பொன்னைச் சோதித்த பின்* இவர்களின் சன்மானத்தைக் கொடுக்கலாமே!...... என்றான்.


    அதைக் கேட்ட மன்னனும் கொடுக்க இருந்த சன்மானத்தை நிறுத்தி வைத்து..... *சிற்பிகளே!* விக்கிரகம் வார்க்கும்போது பிதறியத் தங்கத்துகள்கள் மீதமாகியிருக்குமே! அந்தத் துகள்கள் எங்கே என மன்னன் கேட்டார்.


    ஏற்கனவே கூடத்தில் எடுத்து வைத்திருந்த பிதறியத் தங்கத் துகள்களை மன்னனிடம் கொடுத்தனர்.


    தங்கத் துகள்களை எடுத்துச் சென்ற மந்திரி, அதை த் தரம் சோதித்துப் பார்த்து விட்டு ஓடோடி வந்து மன்னனின் காதில் விஷயத்தைக் கூறினான்.


    மன்னன் இருக்கையை சட்டென விட்டெழுந்தான். கண்களும் கோபத்தை உமிழ்ந்தன...............
    *சுத்தத் தங்கத்தில் உருக்கச் சொன்னால் அதில் செம்பையும் சேர்த்து இணைத்திருக்கிறீர்களே!* என வெகுண்டான்.


    மன்னா!... மன்னா!!....சிற்பிகள் அத்தனை பேரும் மன்னனின் காலில் விழுந்தார்கள். அழுதார்கள்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(21)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *கருவூரார் சித்தர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    தூயத் தங்கத்தை முறையான செயலில் செய்யாது மாற்றுச் செய்திருக்கிறீர்களே என்று சிற்பிகளைப் பார்த்துக் கோபப்பட்டார் மன்னர் பெருமான்.


    சிற்பிகள் அனைவரும் மன்னிக்க வேண்டும் எனக்கூறி மன்னர் காலில் விழுந்தார்கள்.


    மன்னா சிற்பத்தை உருவாக்க நாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்து முயச்சித்தோம். அது கூடி வரவில்லை. அனுதினமும் பூஜை புணர்மானம் செய்துதான் விக்கிரகக் குடிலுக்குச் செல்வோம். ஆயினும் உருப்பெறுவதில் குறைகளே தொடர்ந்த வண்ணம் இருந்தன. இப்படியே மண்டலநாளான 47 வது நாள் வரையும் வடிவம் பெறவில்லை.


    மண்டல நாளான 48- வது நாள் விடிந்தது. நாங்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்தோம். அப்போதுதான்.......


    அம்பலவாணனின் அடியார் ஒருவர் வந்து, விக்கிரகத்தைத் தானே உருவாக்கித் தருகிறேன் எனச் சொல்லி ஒரு மணி காலப் பொழுதுக்குள்ளும் இதனை உருவாக்கிக் கொடுத்துச் சென்று விட்டார். அவர் உருவாக்கியதுதான் இந்த விக்கிரகமும் அதில் பிதறிய தங்கத்துகள்தான் இது!வேறெதுவும் நாங்கள் கண்கூடாகப் பார்க்கவில்லை. இதுதான் நடந்தது மன்னா!என்று பயந்து நடுங்கியபடியே சிற்பிகள் கூறினார்கள்.


    *"யாரவன்! அந்த அடியான் எங்கிருக்கிறான்!, அவன் எங்கிருந்தாலும்,சென்று அவனை இழுத்து வாருங்கள்!* என அரண்மனைச் சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.


    அவ்வளவுதான் படைவீர்கள் பலரும் நாலா திசைகளிலும் தேடி கருவூராரைக் கண்டு பிடித்து அரண்மனைக்கு இழுத்து வந்தார்கள்.


    கருவூராரை,மன்னன் மேலும் கீழுவுமாக எகத்தாளமாகப் பார்த்தான். எந்த தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துச் சொல்கிறேன். எனக்கு யோசனை புலப்படும் வரை இவனை சிறைக்குள்ளேயே வைத்திருங்கள் எனக் கூறிவிட்டு அரண்மனை உள்புகுந்து சென்றான் மன்னன்.


    அரண்மனைக்குள்ளிருந்தவாறாக நடராஜ விக்கிரகத்தையே மாறி மாறி உற்று பார்த்தான் மன்னன். அந்த நிகழ்வில் நடராஜத் திருமேனி முன் ஓர் உருவம் பிரசன்னமாகி நின்றிருப்பதைக் கண்டு வியந்து நிர்ந்து நோக்க..............


    அவர் முன்னால் போகர் சித்தர் நின்று கொண்டிருந்தார். அவர்க்குப் பின்புறம் ஐந்து சீடர்களும் நின்று கொண்டிருந்தனர். அவ்வைர்வில் ஒருவரிடம் துலாக் கோல் ( தராசு) ஒன்றும் மற்ற நால்வர் சீடர்கள் தலையில் தங்கப் பொதியுடன் தாங்கி நின்றிருந்தனர்.


    போகரையும், அவர்தம் சீடர்களையும் பார்த்த மன்னன், அவர்களைப் பார்த்து எழுந்து நின்று கைகளைக் குவித்து வணங்கினான்.


    மன்னா! நீ சிறையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன். என்னுடைய சீடன்.. இவ்விதம் செயல்படுவதுதான் உன்னுடைய ஆட்சி முறையோ?", சுத்தமான தனித்தங்கத்தில் விக்கிரகம் இழைக்க முடியாதென்பது உனக்குத் தெரியாதா? நான்தான் சிறுவளவு செம்பைக் கலக்கச் சொல்லியிருந்தேன். அதற்கான காரணங்களும் உள்ளன.


    *அறிதாதும் தெரியாதுமான ஆயினேன் நானே!"* சுவாமி! தாங்களே விளக்கியருளுங்கள் சுவாமி!!....என்றான் மன்னன்.


    தூய்மைத் தங்கத்தில் விக்கிரகம் செய்தோமானால் அதிலிருந்து வெளிப்படும் ஒளியினை, அதனைப் பலமுறைகள் திரும்பத் திரும்பக் காணப்பெறுவோமின், பார்ப்பவரின் கண்களைக் குருட்டு நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த விஞ்ஞானம் உனக்குத் தெரியாமலா போய் விட்டது!, இது போக மற்றொரு காரணத்தையும் கேள்......செம்பு இணையாத தங்கத்தில் விக்கிரகம் செய்தோமானால் அதை பார்ப்பவரின் மனநிலையில், அதன் மீது அளவில்லா ஆசையுண்டாகும். அதனால் அத்தெய்வத் திருமேனியின் மீது பக்தி மார்க்கம் குறைந்து போகும். மாறாக, அந்த தங்கத்திற்குண்டான பக்திதான் மேலோங்கும்! அதிலும் ஒருசிலர் அத்தங்கத்தின் மீது களவுக் கண் பதிப்பார்கள்! எனவேதான் என் மாணவனான கருவூரானை பலவித மூலிகைச் சாறுகளுடன் தங்கத்தையும் செம்பையும் இணைத்தான். இதை அறியாது கேட்காது அவனை சிறைபடுத்தி விட்டாயே! என்றார் போகர்.


    சுவாமி! இனி நான் என்ன செய்ய வேண்டும்? மன்னன் கேட்க..............


    செய்தன செய்தனதான்! போகட்டும். இதோ பெற்றுக் கொள் நீ தந்த மாற்றுத் தங்கத்தை!" நீ தந்த அளவே தந்து விடுகிறோம்!" என போகர் சொல்லவும்........


    அவ்வைந்து சீடர்களில் ஒருவனாவன், துலாக்கோலை விட்டத்தில் தொங்கச்செய்து ஒரு தட்டில் நடராசத் திருமேனியை தூக்கியெடுத்து வைத்தான்.


    கூடவேயிருந்த மற்ற நான்கு சீடர்களும் தலைச்சுமையில் தாங்கி வந்திருந்த தங்கத்தை மற்றொரு தட்டில் ஒருவர் பின் ஒருவராக கொட்டினார்கள்.


    கொட்டக் கொட்ட தங்கம் தங்கம் தாங்கிய தட்டு தாழ்ந்து போயிற்று! நடராசத் திருமேனியிருந்த தட்டு மேலே வந்தது.


    மன்னா!," உயர்ந்தன எது?"........ தாழ்ந்தன எது?"........நீ யே பார்..உன் தங்கத்தை நீயே எடுத்துக் கொள்!, ....என் மாணவன் உருவாக்கிய நடராசப் பெருமானை நாம் எடுத்துச் செல்கிறோம் என்று சொன்னதோடு, தட்டிலிருந்த நடராசத் திருவுருவத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ப் புறப்பட ஆயத்தமானார்.


    அவ்வளவுதான்.....மன்னர் தடாலென போகரின் கால்களில் முன் வீழ்ந்தார். மேலும் சுவாமி! அடியேனை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும்!", அனைத்தையும் புரியாது தவறு செய்து விட்டேன்!. தங்களின் மாணவனான கருவூராரின் பெருமைகளை உணரப் பெறாமல் அறிவிழந்து நடந்து கொண்டேன்! பிழை பொறுப்பீர் சுவாமியே!..பிழை பொறுப்பீராக!!...மன்னரின் கண்களில் கண்ணீரருவி வழிய மன்றாடினார்.


    போகரின் மனம் கனிந்தது.


    மன்னனே! நடராசத் திருவுருவை உனக்கேத் தருகிறேன்!", இந்தா வாங்கிக் கொள்....எனக்கு என் மாணவனைத் திருப்பிக் கொடு!"


    உடனே தன் சேவகர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான் மன்னன். கருவூராரை மரியாதை செய்து அழைத்து வாருங்கள்!


    கருவூராரை சிறை வைத்த இடத்திற்கு, ஓடோடிப் போனார்கள் சேவகர்கள்!


    *போன வேகத்திலேயே சேவகர்கள் திரும்பி ஓடி வந்தார்கள்.*


    *ஏன் ஓடி வருகிறீர்கள்!" கருவூராரை எங்கே? மன்னன் படபடத்தான்.*


    *பதறினான்!*


    *பயத்தில் அலறினான்!*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(22)*
    ☘ *சிவமய அருளான சித்தர்கள்.* ☘
    *********************************************
    ☘ *கருவூரார் சித்தர்.* ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    மன்னனின் சேவகர்கள் ஓடிச் சென்ற வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள்.


    மன்னா! அங்கே கருவூராராரைக் காணேம்!". நடுங்கியபடியே பதில் கூறினார்கள் காவலர்கள்.


    மன்னனர் கையை உயர்த்தி ஏதோ கூற முற்பட்டார் அதற்குள் போகர் குறுக்கிட்டார்...........


    *"என் மாணவன் என் உத்தரவு பெறாமல் எங்கும் செல்ல மாட்டான்"* *சிறைக்குள்தான் இருப்பான்* எனச் சொன்னதோடு கருவூரார் அடைக்கப்பட்டிருந்த சிறையைப் பார்த்து *"கருவூரா!* என குரல் கொடுத்தார்.


    *குருநாதா!* நான் இங்கேதான் இருக்கிறேன். சிறைக்குள்ளிருந்து கருவூராரின் குரல் மட்டுமே வந்தது. கருவூராரை காணோம்.


    சிறையின் முன் பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நின்றனர்.


    *கருவூரா!* எல்லோருக்கும் தெரியும்படியாக வெளியே வருவாயாக! என்றார் போகர்.


    அனைவரின் கண்களுக்குப் புலப்படும்படியாக கருவூரார் வெளியே வந்தார். *"சித்தர்களின் ஜோதி மகிமையின் சக்தி இது.*


    உலகத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் என் சீடன் கருவூரான்.


    மக்கள் அவன் வாயிலாக இறைவனை உணர்ந்து கொள்வார்கள் என்று போகர் போகர் நடராஜப் பெருமானை மன்னனிடத்தில் ஒப்படைத்து, மேலும் கோயில் அமையப் பெற வேண்டிய முறையையும், அங்கே நடராஜப் பெருமானை நிறுவப் பெறும் முறைகளையும் அவற்றுக்கான பூஜை முறைகளையும் மன்னருக்குச் சொல்லி விட்டுக் கருவூராரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்து போனார்.


    ஒரு சமயம் தஞ்சை மன்னன் சிவபாத சேகரர் தஞ்சையில் மிகப் பெரிய கோவிலைக் கட்டினான். முடிவில் கருவறைக்குள் சிவலிங்கத்தை நிர்மாணிக்க முடியாமல் கவலைப் பட்டான். சிவலிங்கத்தை நிர்மானிக்க முடியாத செயலை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக் கதறியழுதான்.


    கருவூரார் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, கங்கை கொண்ட சோனேஸ்வரம் என்னும் திருத்தலத்தில் இருந்த போது, ஒரு காகம் ஒன்று ஒரு ஓலைச் சுவடியை அவர் முன் போட்டது. கருவூரார் அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்தார் ..............


    *கருவூரா!" ......"உடனே வா!.....*என எழுதப் பட்டிருந்தது.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(23)*
    *சிவமய அருளான சித்தர்கள்.*
    *********************************************
    *கருவூரார் சித்தர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    கருவூரார் இறைவனை மனமுருகி வேண்டவும்.............


    *அவ்வளவுதான்......*


    அந்த உச்சிவெயில் சூரியன் தகதகக்கும் நேரத்தில், திடீரென வானம் கப்பி கும்மிருட்டானது.


    மேகங்களை யாவும் கருமை படலத்தை வாங்கிக் கொண்டு தங்கள் மீது போர்த்திக் கொண்டன.


    அம்மேகக் கூட்டங்களை அந்த நிலையில் பார்க்கும் போது , வர்னம் பூசுபவனை அழைத்துப் போய் அவன் கையில் கருமைநிற மையைக் கொடுத்து பூசச் செய்தது போலிருந்தது.


    அதனால் பூமிக்கு வெளிச்சம் தடைபட்டுப் போனது. அதோடு அம்மேகங்கள் யாவும் சும்மாயிராது, கலைந்து குலைந்து இடம் நகர்ந்தன. இடம் பெயரப்படும் போது அம்மேகங்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டன.


    அந்தச் சண்டையில் செவிப்பாறைகள் பிளந்து போகும் அளவுக்கு பேரொலியான இடியதிர்வுகள் பூமிக்கு வந்து எதிரொலித்தன. அப்பேரொலிகளுக்கு இணையாக மின்னலொளி பிறந்து பளீரென ஒளிர்ந்து ஒளிர்ந்து மறைந்தன. அவ்வொளியில் இருள் நீங்கவும் மறுபடியும் இருள் கவ்வவுமுமாக இருந்தன. கணமழை பிடித்துப் பெய்தது.


    தாழிடப்பட்டிருக்கின்ற ஆலயக் கதவுகள், தாமாகவே திறந்தன. மணிமண்டபத்திலிருந்த ஆலயத்தின் மணிகள் தன்னாலே சுழன்று கணீரென்று கணீரென்றது.


    இந்நிகழ்வுகளை கண்ட ஊர்மக்கள் கருவூராரை நம்பாது இதெல்லாம் இவரோட சித்து விளையாட்டு எனச் சொல்லி மறுபடியும் கேலி பேசினர். இதைக் கண்டு வருந்திய கருவூரார் எதுவும் பேசாமல் அந்த ஊரை விட்டு அகழ்ந்து போனார்.


    பல தலங்களுக்கும் சென்று தரிசித்து திருக்குருகூர் என்னும் திருத்தலத்தை அடைந்தார். அவ்வூர் பக்தர்கள் கூட்டம் கருவூராரை மாலைகள் அணிவித்து வரவேற்றார்கள்.


    "என்னை ஏன் என்னை வரவேற்கிறீர்கள்? என கருவூராரிடம் அவர் கேட்க, அதற்கு அம்மக்கள்........"சுவாமி!, எம்பெருமான் எங்கள் கனவில் வந்து இப்படிச் செய்யச் சொல்லி ஆணையிட்டார்.


    ஏற்கனவே வருந்தத்திலிருந்த கருவூராரின் மனம், இப்போது ஆனந்தமானது. இறைவனின் கருணையை என்னி வியந்து பயணத்தைத் தொடர்ந்தார்.


    ஒருநாள், விஷ்ணுவின் ஆலயத்தை அடைந்து அங்குள்ள பெருமாளைக் கூவியழைத்தார். கூவியழைத்ததற்கு பெருமாள் வரவில்லை.


    உடனே அக்கோவிலில் பூஜை இல்லாமல் இருக்கக் கடவது என்று கருவூரார் சபித்து விட்டுச் சென்று திருக்குற்றாலத்துக்கு வந்து சேர்ந்து, அங்குள்ள பொதிகையில் தங்கியிருந்தார்.


    பின், திருநெல்வேலி சென்று கோயிலுக்குள் நுழைந்து *"நெல்லையப்பா! நெல்லையப்பா!!* என்று பலமுறை கூவினார். எவ்வித பதில் சமிக்ஞையும் உணரக் கிடைக்கவில்லை.


    "ஓ ஹோ!" இங்கும் சுவாமி இல்லையா?.....இங்கு நல்லவர்கள் யாரும் இல்லையோ? அதனால்தான் கூக்குரலிக்கு பதிலில்லையோ?" *நல்லவர்கள் இல்லா இவ்விடம் எருக்கஞ் செடிகளே முளைக்கக்கக் கடவன!"* எனச் சொல்லி முடித்து அவ்விடத்தை விட்டு அவர் வெளியேற, அதற்கு முன்னதாகவே எருக்குகள் முளைத்து உயர்ந்திருந்தது.


    அவ்விடம் அகன்று திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் வழியிலுள்ள மானூரை அடையும் பொழுது, இறைவன் நெல்லையப்பர் அவரை முன் காட்சி தந்தார். பின் அடியொன்றுக்கு ஒரு பொன் கொடுத்து திருநெல்வேலிக்கு வரச் செய்து அங்கே காட்சி தந்தார்.


    இச்சம்பவத்தால் அங்கு முளைத்தெழுந்திருந்த எருக்குகள் தகாத பூண்டுகளாகி ஒழிந்தன. *"செந்நெல் இங்கு,எருக்கு அங்கு"* எனக்கூற ஆலயம் செழித்தோங்கியது. அதன்பின் கருவூரார் தமது யாத்திரையை மீண்டும் தொடர்ந்தார்.
Working...
X