Announcement

Collapse
No announcement yet.

ஏழரைச் சனியில் மூன்று வகை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏழரைச் சனியில் மூன்று வகை!

    ஏழரைச் சனியில் மூன்று வகை!
    ஏழரைச் சனியில் முதல் சுற்றை மங்கு சனி என்பார்கள். இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும். மூன்றாம் சுற்று மரணச் சனி எனப்படும். முதல் சுற்று ஜாதகருக்கு சுபபலனும், அவர் அம்மா, அப்பாவுக்கு தீமையும் தரும். இரண்டாம் சுற்று ஜாதகருக்கு சுபமும் பெற்றோருக்கு கஷ்டமும் கொடுக்கும். மூன்றாம் சுற்று ஜாதகருக்கு பிணி, மூப்பு, துன்பங்கள் தரும்.


    ரட்சிக்கத்தான் தெற்கு பார்க்கிறார்!


    சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும்போது தென்முகக் கடவுள் என்று சொல்லப்படும் தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். அவரது சந்நிதியின் முன்புறம் வடக்கு பார்த்து அமர்ந்து நமசிவாய என்ற ஐந்தெழுத்தைத் தியானிக்க வேண்டும். ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும், தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும் சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. ஆன்மாக்கள் தன்னை நோக்கி சரண் அடைய வருவதால் அவர்களை ரட்சிப்பதற்காக தட்சிணமூர்த்தி தெற்கு பார்த்திருக்கிறார்.
    -- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 14, 2014.
Working...
X