Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    83.பாரியான
    பாரியான கொடைக்கொண்ட லேதிரு
    வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு
    பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம
    பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
    சீலஞால விளக்கின்ப சீவக
    பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச்
    சீரதாக எடுத்தொன்று மாகவி
    பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை
    சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே
    சேயபாவ கையைக்கொண்டு போயறி
    யாமலேக மரிற்சிந்து வார்சிலர்
    சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ
    ஆருநீர்மை மடிக்கண்க ராநெடு
    வாயினேர்ப டவுற்றன்று மூலமெ
    னாரவார மதத்தந்தி தானுய அருள்மாயன்
    ஆதிநார ணனற்சங்க பாணிய
    னோதுவார்க ளுளத்தன்பன் மாதவ
    னானநான்மு கனற்றந்தை சீதரன் மருகோனே
    வீரசேவ கவுத்தண்ட தேவகு
    மாரஆறி ருபொற்செங்கை நாயக
    வீசுதோகை மயிற்றுங்க வாகன முடையோனே
    வீறுகாவி ரியுட்கொண்ட சேகர
    னானசேவ கனற்சிந்தை மேவிய
    வீரைவாழ்ப ழநித்துங்க வானவர் பெருமாளே.

    - 83 பழநி



    பதம் பிரித்து உரை
    பாரியான கொடை கொண்டலே திரு
    வாழ் விசால தொடை திண் புயா எழு
    பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம


    பாரியான = பாரி வள்ளல் போன்ற கொடைக் கொண்டல் = கொடை மேகமே திரு வாழ் = இலக்குமி வாசம் செய்யும் விசால = பெரியதொடை = மாலையைப் புனைந்த திண் புயா = திண்ணிய புயங்களை உடையவனே எழு பாரும் = ஏழு உலகங்களிலும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக = எட்டியுள்ள புகழைக் கொண்ட நாயகனேஅபிராம = அழகனே.


    பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள்
    சீல ஞால விளக்கே இன்ப சீவக
    பாதசாதன உத்துங்க மானத என ஓதி


    பாவலோர்கள் = பாட வல்ல புலவர்கள் கிளைக்கு = கூட்டத்துக்குஎன்றும் = எப்பொழுதும் வாழ்வு அருளும் = நல் வாழ்வை அளிக்கும்சீல = நல் ஒடுக்கம் வாய்ந்த ஞால் விளக்கே = பூ மண்டல விளக்கேஇன்ப சீவக = இன்பம் தரும் சீவகனே பாகசாதன = இந்திரன் போல் உத்துங்க மானத = உயர்ந்த அரசே என் ஓதி = என்றெல்லாம் கூறி.


    சீரதாக எடுத்து ஒன்று மா கவி
    பாடினாலும் இரக்கம் செ(ய்)யாது உரை
    சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே


    சீரதாக எடுத்து = சீராக எடுத்து அமைந்து ஒன்று மா கவி பாடினலும் =ஒரு அருமையான பாடலைப் பாடினாலும் இரக்கம் செய்யாது =இரங்காமல் உரை சீறுவார் = சீறி உரைப் போர்களுடைய கடையில் சென்று = கடை வாயிலில் சென்று தாம் அயர் உற = தாம் சோர்வு அடையும்படி வீணே = வீணாக.


    சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே
    கமரில் சிந்துவார் சிலர்
    சேயனார் மனதில் சிந்தியார் அருகு உறலாமோ


    சேய = செம்மையான. பா வகையை = பாமாலை வகைகளைகொண்டு போய் = கொண்டு போய் அறியாமலே = அறியாமல். கமரில் சிந்துவார் சிலர் = நிலப் பிளப்பில் (பள்ளத்தில்) கொட்டுவது போல் கொட்டிச் சிந்திடுவார் சிலர் சேயனார் =(இரப்போர்க்குத்) தூரத்தில் நிற்பவர் மனதில் சிந்தியார் =(இரக்கம் காட்ட) மனதில் கூட சிந்திக்க மாட்டார்கள் அருகு உறலாமோ = (இத்தகையோர்கள்) அருகில் சேரலாமா?


    ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு
    வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என
    ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன்


    ஆரு = நிறைந்த நீர் = நீருள்ளதான மை மடுக் கண் = கரிய மடுவில்கரா = முதலையின் நெடு வாயில் = பெரிய வாயில் நேர் படவுற்று =நேராக அகப்பட்டு அன்று = அன்றொரு நாள் மூலம் என = ஆதி மூலமே என்று ஆரவாரம் = பேரொலி செய்த மதத் தந்தி = மத யானையாகிய (கஜேந்திரன்) தான் உய்ய = பிழைக்கும் வண்ணம் அருள் மாயன் = அருளிய மாயவன்.


    ஆதி நாராணன் நல் சங்க பாணியன்
    ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மா தவன்
    ஆன நான் முகன் நல் தந்தை சீதரன் மருகோனே


    ஆதி நாரணன் = ஆதி நாராயணன் நல் = நல்ல சங்க பாணியன் =(பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை ஏந்திய கையன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் = துதிப்போர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும்அன்பன் மாதவன் ஆன = பெரிய தவனாகிய நான் முகன் தந்தை =பிரமனின் தந்தை சீதரன் = இலக்குமியை மார்பில் கொண்ட வன் மருகோனே = மருகனே.


    வீர சேவக உத்தண்டம் தேவ குமார
    ஆறிரு பொன் செம் கை நாயக
    வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே


    வீர சேவக = வீரம், வலிமை உத்தண்டம் = உக்கிரம் தேவ குமார =இவைகளைக் கொண்ட தெய்வக் குமாரனே ஆறிரு பொன் =பன்னிரு அழகிய செம் கை நாயக = செங்கை நாயகனே வீசுதோகை மயில் = வீசும் கலாப மயில் துங்க = விளங்கும் வாகனம் உடையோனே = வாகனத்தை உடையவனே.


    வீறு காவிரி உட்கொண்ட சேகரனான
    சேவகன் நல் சிந்தை மேவிய
    வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே.


    வீறு = விளங்கும் காவிரி உட்கொண்ட = காவிரி நதியைத்தன்னிடத்தே கொண்ட சேகரனான சேவகன் = (கலிசையூர்த்) தலைவனான வலிமை கொண்ட கலிசைக் காவரிச் சேவகன்நல் சிந்தை மேவிய = நல்ல மனத்தில் வீற்றிருக்கும் (பெருமாளே).வீரை வாழ் = வீரையில் வீற்றிருக்கும் பழநிப் (பெருமாளே) = பழனிப் பெருமாளே துங்க வானவர் பெருமாளே = சிறந்த தேவர்கள் பெருமாளே.






    ஒப்புக:
    அ. பாரியான கொடைக் கொண்டலே....
    கொடுக்கில்லாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை....
    ...........................................................................................................................சம்பந்தர் தேவாரம்


    ஆ காவிரி சேவகன் .................................................................. பாடல் 72,73 குறிப்பில் பார்கக


    கலிசை சேவகன் பழனி , கஜேந்திரன்
Working...
X