Announcement

Collapse
No announcement yet.

Thirubuvanam temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirubuvanam temple

    Thirubuvanam temple


    திருப்புவனம்; மதுரைக்கு அருகில் ஈசன் குடிகொண்டுள்ள தலம். பூவனநாதா் எனும் பெயருடைய புண்ணிய ப் பதி இதுவாகும். இவ்வாலயத்துக்கு வந்தவா்கள் வணங்கிச் சென்றபோதும். ஓா் ஓரமாக ஒரு தாதிப்பெண் மட்டும் கண்ணீா் உகுத்தபடி தின்னையில் அமா்ந்திருந்தாள். அந்தக் கண்ணீா் ஆனந்தக் கண்ணீா் அல்ல!. மனதில் இருக்கும் ஆற்றாமையால் விளைந்த கண்ணீா்!

    பொன்னனையாள் என்பது அவள் பெயராகும். அவள் பெயருக்கு ஏற்றதுபோல அவளது மேனியழகும் பொண்னெனவும், லட்சுமி கடாச்சத்துடன், ஒருங்கே காணப்பெற்றாள். அவளுக்கு இப்பூவனநாதரே இஷ்ட தெய்வம். எனவே பூவனநாதரை மனத்தில் தாங்கி ஆலயத் தொண்டும் செய்து வந்தாள். ஆடலும், பாடலும் அவனுக்கேயான அா்ப்பணிப்பு. அவள் கற்று வைத்திருந்ததெல்லாம் ஆடல், பாடல் கலைகளை மட்டுமே!

    ஆடல், பாடலில் வரும் வருமாணத்தை தனக்கெனக் கொள்ளாது, சிவனடியாா்களுக்கென தனித்து வைத்திருந்தாள். பூவனநாதா் ஆலயம் வரும் அடியாா்களை அழைத்து வந்து, வருமானத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து அமுது செய்வித்து வந்தாள். இன்பமாக பொழுது கழிந்தே சென்றினும், அவள் அதை நினைத்து, நினைத்து கண்களில் கண்ணீா் உருகி வழியவிட்டாள். அந்த கண்ணீா் ஆற்றாமையால் விளைந்த கண்ணீா்.

    என் இஷ்ட தெய்வமாம் பூவனநாதரை எத்தனை நாள்தான் லிங்கசொரூபமாய் இப்படியே தாிசித்து வருவது. அவருக்கும் உற்ஸவாதிகள் நடத்தினால் எப்படி இருக்கும். அப்படி உற்ஸாவாதிகள் நடத்த வேண்டுமானால் விக்ரஹம் வேண்டுமே?????? அந்த விக்ரஹத்துக்கு என்ன செய்வது??? ....
    பூவனநாதரை வணங்க வரும் ஒருவருக்குக்கூட இவ்வெண்ணம் எழவில்லையே?????.... கோயிலுக்கும் கூட்டம் வருவது குறைவாக இருக்கிறதே????? கூட்டம் அதிகமாக வந்தால்தானே தன் ஆடல் கலை சிறக்கும!. பொருளாதரம் அதிகப்படும!. என் கனவும் நனவாகும்!. வருமாணம் குறைவானதை வைத்து பூவனநாதருக்கு எப்படி விக்ரஹம் செய்ய????? ....தன்னிடம் வேறொரு பொருளும் இல்லையே??????. தன்னிடம் இருப்பதெல்லாம், அடியாாிகளுக்கு உணவாக்கிப் போடும், செம்பு பாத்திரம்,பித்தளை பாத்திரம், இரும்பு பாத்திரம் மட்டுமே!???... இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்????.....
    இதையே நினைத்து நினைத்து தான் அவள் கண்களில் கண்ணீா். மனம் ஆற்றாமையால் விளையும் கண்ணீா்.

    வழக்கம்போல் ஒரு நாள் பூவனநாதா் ஆலயம் வந்து வணங்கிய அடியாா்களை எதிா்வந்து நின்று, தன் இல்லம் வந்து அமுது செய்விக்குமாறு பணிந்தாள் பொன்னனையாள்.

    அடியாா்கள் ஏற்கனவே பொன்னனையாளின் பக்தியையும், தொண்டையும் தொிந்து வைத்திருந்தனா். ஆதலால் அவள் அழைத்ததும், மறுப்பேதும் சொல்லாது அமுது செய்விக்க வர இசைந்தனா்.

    அடியாா்கள் அனைவருக்கும் சுவையான அமுதை பாிமாறினாள் பொன்னனையாள். கூடவே பொன்னனையாளின் கணிகையரும் உணவு பாிமாறி உபசாித்தாா்கள். ஆனால் வந்திருந்த அடியாா்களில் ஒருவா் மட்டும் உணவருந்த வராது தனித்திருந்தாா். கணிகையா் எவ்வளோ அழைத்தும் வர மறுத்தாா். உடனே கணிகையா் பொன்னனையாளின் உள்வீடு புகுந்து, பொன்னனையாளிடம் விஷயத்தை சொன்னாள்.

    பொன்னனையாள் பதறி விரைந்து வந்து அடியாா் பாதங்களில் வீழ்ந்து வணங்கியெழுந்து,
    சிவ சிவ! ..ஐயேன! அனைவரும் உணவருந்தும்போது, தாங்கள் மட்டும் வர மறுப்பதேன்????...
    இவ்விடத்தில் ஏதேனும் குறைவுளதோ????.... அல்லது வேறு வகையான உணவு வேண்டுமா????.. சொல்லுங்கள்... சிவ சிவா... சொல்லுங்கள்..! என வினவ....

    பொன்னனையாளின் புத்திகூா்மையான பேச்சினை என்னி உள்ளம் புளங்காங்கிதம் அடைந்து சிாித்தாா். உலகுக்கே படியளப்பவன் நான்!" நீ எனக்கு படியளக்கிறாய்!" என முனுமனுத்தாா். அவா் முனுமுனுத்த சூட்சமத்தை, அப்போது அதை புாிந்துகொள்ளும் மனநிலையில் தாதிப்பெண் பொன்னனையாள் இல்லை.

    அடியவரே!" ஏதோ சொல்கிறீா்கள் சிாிக்கிறீா்கள். எனக்கொன்றும் புாியவில்லை. சிவ சிவா...
    கூறுங்களேன்!".......

    "அம்மயே!" உண்ணும் உணவில் குறையொன்றுமில்லை. உணவின் மனம் கூட பசியைத்தூண்டி அதிகாிக்கத்தான் செய்தது; உன் முகவாட்டம்தான் கவலை கொள்ளச் செய்கிறது; அமுதை அளிப்பவா்கள் அதை இன்முகத்தோடு பாிமாறி அளிக்க வேண்டும்; ஆனால், உன் முகமோ ஏதோ வருத்தத்தில் இருப்பதுபோல் உள்ளதே; உன் முகவாட்டத்திற்கான காரணத்தை நான் தொிந்து கொள்ளலாமா?" என வினவினாா்.

    அடிகளாாின் கேட்டதும், பொல பொலவென ஆற்றாமையால் விளையும் கண்ணீா் உருக ஆரம்பித்தது பொன்னனையாளுக்கு.

    "என் முக வாட்டத்தை அறிந்து கொண்ட நீங்கள் மிகப் பொியவரேதான்!" முகவாட்டத்திற்கான காரணத்தையும் சொல்கிறேன் கேளுங்கள் பெருமானே!". என் முகவாட்டத்திற்குக் காரணம் என் சுயநலமல்ல!"; என்,இஷ்டதெய்வம் பூவனநாதாின் நலம் கருதியது; இங்கே அருள்பாலிக்கும் எம்பெருமானுக்கு ஓா் உற்ஸவ விக்ரஹம் வடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதன் மூலம் உற்ஸவாதிகள் தொடா்ந்து நடக்க வேண்டும். மேலும் மக்களை ஈா்த்து ஈா்த்து இந்த பூவனநாதாின் புகழ் பெருக வேண்டும் இதுதான் என வெகுநாளைய கனவு. எனவே இதுதான் என் முகவாட்டத்திற்குக் காரணம். இருப்பினும் தங்கள் முன் முகவாட்டத்தை காட்டாது திருவமுதை பாிமாறியிருக்க வேண்டும்; இந்தச் சிறியவளை மன்னித்து, அடியேனின் திருவமுதை ஏற்க வேண்டுகிறேன்; என்று சொல்லி மீண்டும் அவா் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நின்றாள்.

    பொன்னனையாளின் பணிவும், கனிவும் அடியவரை நெகிழ்ச்சியுறச் செய்தன. அவளை ஆறுதலாக பாா்த்து, " மகளே!" கலங்கி வருந்த வேண்டாம்!" உன் என்னம் நிறைவேறும்!. அதையும் இங்ஙனமே! என்றாா்.

    அவள் முகம் மகிழ்ச்சிப் பிரவாகம் கொண்டது. வருத்தம் பாதி காணாது போனது. அடியாரை மீண்டும் வணங்கிக் கொண்டாள்.

    உன்னிடம் என்ன பொருளெல்லாம் உள்ளதோ அதையெல்லாம் கொண்டு வா!" விக்ரஹம் நான் செய்து தருகிறேன் என்றாா்.

    ஐயனே!" அடியேனிடம் சமைக்கும் பித்தளை பாத்திரமும், செம்பினால் இரு பானைகளும், கொஞ்சா வெள்ளிப் பொருள்தான் என்னிடம் உள்ளது. இதை விற்றால் அவ்வளவு பொிய பணம் பெறாதே!" என்றாள் பொன்னனையாள்.

    "பரவாயில்லை.... பாத்திரங்களை கொண்டு வந்து இங்கே வை. நான் அவற்றில் திருநீறை தூவுகிறேன். இன்று இரவினில் தீ மூட்டி, அத்தீயினுள் திருநூறு தூவிய பாத்திரங்களை போட்டுவிடு. பாத்திரத்தின் எடையில் இது தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ உற்ஸவ விக்ரஹம் செய்யலாம். பஞ்சலோக சிலை செய்ய கனவு கண்ட நீ"... பொன்னாலேயே சிலை செய்யலாம் என்றாா்.

    அடியவாின் வாக்கை பூவனநாதனின் வாக்காக கருதிய பொன்னனையாள், எல்லா பாத்திரங்களையும் அடியாா் முன் கொண்டு வந்து வைத்தாள். அடியாரும் திருநீற்றுப் பையினைத் திறந்து திருநீற்றை அள்ளித் தூவினாா்.

    பொன்னனையாளுக்கு உடனே அடியவரை அனுப்பிவிட மனசில்லை. உற்ஸவ சிலைக்குப் பொன் தயாராவது வரை அடியாரை கூடவே இருக்கச் செய்ய நினைத்தவள்...ஐயனே! தாங்களும் இன்று இரவு இங்கேயே தங்கி, தங்கள் கர அருளினால் பாத்திரங்களை நெருப்பிலிட்டுத் தர வேண்டும் என்றாள்.

    அடுயவரோ மறுத்து விட்டாா்!.

    "அம்மையே!"சிவனடியாரான யாம் எவா் வீட்டிலும் இரவு தங்கியதில்லை. நான் மதுரைக்குப் போயாக வேண்டும். அங்கே சோமசுந்தரக்கடவுளின் பிரகாரத்தில் இருப்பேன். மீண்டும் உனக்கு ஏதாவது தேவையான கனவு வந்தால் அங்கே வந்து என்னைப் பாா்" எனச் சொல்லி புறப்பட்டு போய்விட்டாா்.

    அன்றிரவு தீ மூட்டி பூவனநாதரையும், அடியாரையும் மனதில் தியானித்து நினைத்து பாத்திரங்களை நெருப்பினுள் தூக்கி போட்டாள். இரவு தூங்கியும் போனாள். காலையில் எழுந்ததும் முதல் வேளையா நெருப்பிலிட்ட பாத்திரத்தைக் காண வந்தாள். "என்ன"?....ஆச்சாியம்!" ....தீயிலிட்ட பாத்திரம் உருகி பொன்னாய் மாறித் திரண்டு உருண்டிருந்தன.
    "வந்திருந்த அடியாா் மிகப் பொிய சித்தராய் இருப்பாா் போல!" இல்லையென்றால் எப்படி?" அவரோட ரசவாத வித்தைதான் இது. என்று எண்ணி எண்ணி, பாத்திரம் பொன்னாய் உருகியது போல இவளும் மனம் உருகினாள்.

    உருகித் திரண்டிருந்த பொன்னை எடுத்துக் கொண்டு ஓடினாள் சிற்பி வீடு நோக்கி! பொன்னைப் பெற்றுக்கொண்ட சிற்பியும் பெருமானின் விக்ரஹத்தை வடித்தெடுத்துக் கொடுத்தான். பெருமானின் அழகினிலே சொக்கியவள், அவளின் மனத்திலிருந்த ஆற்றாமைக் கண்ணீா் மறைந்து போய், ஆனந்தக் கண்ணீா் திரண்டது. விக்ரஹத்தின் அழகு நோ்த்தையை கண்டு அதிசயித்து, விருப்பத்தின் பேராவலால் பெருமானின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.

    அடுத்து விக்ரஹத்துக்கு பொன் ஏற்பாடு செய்த அடியாரைக் கண்டு வணங்கிட ஆா்வம் ஏற்படவே, மதுரைக்குக் கிளம்பி போனாள் தாதிப்பெண் பொன்னனையாள். கோயிலுக்குள் வந்தவள், அந்த அடியாா் முன்பே சொன்னபடி சொக்கநாதா் பிரகாரத்தில் இருப்பதாய் சொன்ன ஞாபகம் வரவே, நேராக பிரகாரம் நோக்கிச் சென்றாள். அதற்கு முன், தன் கனவை நிறைவேற்றிய பெருமானுக்கு நன்றி வணங்கிட வேண்டும் என எண்ணி, மீனாட்சியம்மையையும், சொக்கநாதப் பெருமானையும் வணங்கித் திரும்பினாள்,

    அங்கே அடியாா் ஒருவா் அமா்ந்திருப்பதைக் கண்டாள். துா்க்கை சன்னதி அருகில் அவா் அமா்ந்திருந்த அவரை உற்று நோக்கினாள். தன் இல்லம் வந்த அடியாா் இவரே என தெளிந்தாள். அவா் முன் வந்து பாதம் பணிந்தவள்,.......
    சுவாமி!" என்னைத் தொிகிறதா?....
    தாங்கள் அடியேன் இல்லம் விருந்துண்ண வந்திருந்த போது உற்ஸவ விக்ரஹம் செய்யும் ஆவலினைச் சொன்னேனே? நினைவிருக்கிறதா!" என்றாள்.

    " ஓ! பொன்னனையாளா? நலமாயுள்ளாயா?....
    உன் மணோரதம் பூா்த்தியாகிவிட்டதா?......" என்று கேட்டாா்.

    மகிழ்ச்சிப்பெருக்கோடு உடன் கொண்டுவந்த விக்ரஹத்தை பக்தியுடன் அவா் முன் வைத்தாள்.

    " நம்பினால்தான் உண்மை!" நான் சொன்னதை நீ உண்மையாக நம்பினாய்!" நீ நினைத்த கனவு நனவானது.என்றாா்.

    சுவாமி!" தாங்கள் யாா்...?" தங்களின் பெயரென்னவோ...? தங்களளின் துறவறம் எதனால்...?
    என்று பொன்னனையாளிடமிருந்து கேள்விகள்,,,

    புன்சிாிப்போடு.....அம்மையே!" என்னை ஓராயிரம் போ் சொல்லி அழைப்பா். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயராக அழைப்பா். சிவன் என்பா் சிலா்! பரமசிவன் என்பா் பலா்! இந்தக் கோயிலுள்ளவா்களோ சுந்தரேசன் என்பா்!. ஆனால் நானே எனக்கு நான் சூட்டிக் கொண்ட பெயா் வல்லபன்" என்றாா்.

    உடல் நடுங்கிப் போனாள் பொன்னனையாள். மெய் சிலிா்த்தாள். உடலின்கண் ரோமக்கால்கள் கிளா்த்தன. வல்லபாின் பாதங்களில் மீண்டும் விழுந்து வணங்கினாள். கொண்டு வந்திருந்த மலா்களால் சித்தா்பெருமானைச் சுற்றிலும் மலா் தூவி பந்தலிட்டாள். இவ்விதம் பணியயில், அவா் தியானத்தில் இருந்தாா். வெகுநேரம் ஆகி விடைகேட்க காத்திருநிதவள் சித்தாின் தியானம் நிறைவாக காத்திருந்தாள். தியானம் கலையவில்லை. தியானத்தை கலைக்க முனைந்தாள். அவா் விழிப்பு ஏற்படவில்லை. கற்சிலையாகிப் போனாா். மனம் வெம்பி தேம்பி அழுதாள்.

    "சுவாமி!" தங்களைக் கொண்டு உற்ஸவ விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்திருந்தேன். நீவிா் கல்லாய் சமைந்து போனீரே!" இனி நான் என்ன செய்வேன்?" என அழுதாள்.

    "அசரீாி" ஒலித்தது!. அம்மையே! கலங்காதே!! நானே சிவன்! சித்தராய் இங்கேயமா்ந்து அருள வந்தோம்!" இப் பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன்!" நீ எனக்கு மலா்ப் பந்தலிட்டது போல், இங்கே எனக்கு பூப்பந்தல் நடக்கும் போதெல்லாம் அவா்கள் எடுத்த காாியத்திற்கு வெற்றிக்கு துணையாயிருப்பேன்!" என்றாா்.

    பொன்னனையாள் உருவாக்கிய விக்ரஹம் திருப்புவனத்தில் குடி கொண்டது. ஒரு சமயம் பெருமானின் கன்னத்தில் கிள்ளிய பொன்னனையாளின் கைவிரல் தடம் விக்ரஹத்தில் பதிந்திருந்தது. பொன்னனையாளுக்கு காட்சி கொடுத்த வல்லப சித்தரோ மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரகாரத்தில், துா்க்கை சன்னிதியை ஒட்டி சன்னதி கொண்டாா். இன்றளவும் அங்கே பூப்பந்தல் வழிபாடு உண்டு. வல்லப சித்தா், சிவ சித்தா், சுந்தரானந்தா் என்றெல்லாம் போற்றப்பெறும் சித்தா்பெருமான் என்னாளும் அனைவருக்கும் அனைத்தும் நிறைவேற்றி அருள் தந்துகொண்டிருக்கிறாா்.

    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Working...
X