Announcement

Collapse
No announcement yet.

Kulachirai nayanar-4 - nayanmar stories

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kulachirai nayanar-4 - nayanmar stories

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(4) நாயன்மார் சரிதம்.*
    *குலச்சிறை நாயனார்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    புகழ்பெற்று விளங்கும் பாண்டிய நாட்டிலே மணமேற்குடி என்னும் ஓர் ஊர் உண்டு.


    நெற்பயிர்கள் நிறைந்த வயல்களையும் கரும்புப் பயிர்களின் அருகே கமுக மரங்கள் நிறைந்த புறம்புகளையும் கொண்ட வளமை மிகுந்த ஊராகும்.


    அங்கு குலச்சிறையார் என்னும் பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


    அவர் சுந்தர மூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில், *"பெருநம்பி"* என பாராட்டப் பெற்றவர்.


    அவர் சிவபெருமானிடம் திடமான பக்திகொண்டு சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதில் சிறந்தவர்.


    தம்மை வந்தடையும் சிவனடியார்கள், நால்வகைக் குலத்தில், எக்குலத்தவராயினும் அக்குலத்தினின்று நீங்கியவராயினும் நலங்களையுடையவராயினும் தீமைகள் மிகச் செய்பவராயினும் அவர்கள் சிவபெருமானிடத்து அன்பு கொண்டவராயிருந்தால் அவர்களை வணங்கிப் போற்றும் இயல்பை உடையவராகக் குலச்சிறையார் விளங்கினார்.


    அவரிடம் உணவருந்த விரும்பி அடியார்கள் பலராக வந்தாலும் ஒருவராக ழந்தாலும் குலச்சிறையார் அளவு கடந்த அன்போடு அவர்களை எதிர்கொண்டு வரவேற்று நட்புறவாடி இன்னமுது அளிப்பார்.


    விபூதி, உருத்திராட்சம், கோவணம் முதலான சின்னங்கள் தரித்து *"நமசிவாய!"* என்று திருவைந்தெழுத்தை ஓதி நாவால் நம்பிரான் வணங்கும் சிவனடியார்களிடம் அவர் ஒவ்வொரு நாளும் அன்பு பாராட்டி வந்தார்.


    *பாண்டிய மன்னனான நின்றசீர் நெடுமாறனுக்கு* இவர் முதல் அமைச்சராக விளங்கி வந்தார்.


    இவர், பகைவர்களை அழித்து அரச காரியங்களைச் செவ்வனே நடத்தியவர்.


    தமது குறிக்கோளிலிருந்து சிறிதளவும் விலகாது நின்றவர்.


    பாண்டியனின் மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரின் திருத்தொண்டுக்கு அவர் மெய்த் தொண்டராக இருந்தவர்.


    சமணர்களின் பொய்மை நெறி ஒழியவும் தென்னாட்டில் சைவம் தழைத்தோங்கவும் திருஞானசம்பந்த சுவாமிகளின் பொன்னடியை அவர் போற்றி மகிழ்ந்து சிறப்படைந்தார்.


    திருஞானசம்பந்தரிடம் வாதிலே *தோல்வியுற்ற சமணர்களை அவர் வன்கழுவில் ஏற்றுவித்தார்.*


    *பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்.*


    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *பான்பாண்டியன்:*
    சைவத்துக்கு வரும் முன் கூன்பாண்டியன் என்ற பெயரோடு அழைக்கப் பெற்றவன்.


    இவனது இயற்பெயர் *மாறவர்மன் அரிகேசரி.* இவன் காலம் *கி.பி. 640--670.*


    *தோல்வியுற்ற சமணர்கள்:*
    சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் என்பனவற்றில் புனல் வாதத்தில், *"இப்புனல் வாதத்திலும் தோல்வியுற்றோமானால் இவ்வேந்தனே எங்களை வெங்கழுவேற்றுவான்"* என்று வாது கூறித் தோற்றார்கள். அதில் தோல்வியுற்றுக் *கழுவேறிய சமண குருமார் எண்ணாயிரமாவர்.*


    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X