Announcement

Collapse
No announcement yet.

சன்யாசி உருண்டை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சன்யாசி உருண்டை

    சன்யாசி உருண்டை

    எனது தாய் வழி பட்டி கோவை அருகில் உள்ள சிங்கநல்லூரை சேர்ந்தவர் . அவர் "சன்யாசி உருண்டை " என்ற ஓர் அற்புதமான சிற்றுண்டியை செய்து கொடுப்பார் . இது தமிழ் நாட்டு பிராமணர்கள் இல்லங்களில் "துணுக்கு " என்று செய்யப்படும் உருண்டயைப்போல் இருக்கும். ஆனால் ருசி சற்று வேறுபட்டிருக்கும். எங்கள் குடும்பத்தில் இந்த உருண்டையை செய்யக்கூடியவர்கள் இப்பொழுது இல்லை. ஆக இதை செய்யும் முறை நமது Brahmins net நண்பர்கள் யாருக்காவது தெரியுமானால் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன் .
    நலம் கோரும்
    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு

  • #2
    குணுக்கு

    மாமா, எங்கள் ஆத்தில் குணுக்கு செய்வா, அதன் குறிப்பை இங்கு போட்டிருக்கேன், நீங்க சொல்வதுடன் இது ஒத்து வரதா பாருங்கோ, பதில் போடுங்கோ.

    தேவையானவை :

    அரிசி ஒரு கப்
    கடலை பருப்பு 3 / 4 கப்
    துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
    உப்பு
    கொஞ்சம் வற்றல் மிளகாய்
    பொரிக்க எண்ணெய்

    செய்முறை :

    எல்லாவற்றையும் ஒன்றாக நனைக்கவும்..
    ஒரு அரை மணி ஊரினதும் மிக்சி இல் கொஞ்சம் 'நர நர' வென அரைக்கவும்.
    மாவில் மட்டாக தண்ணீர் விடவும்.
    வாணலி இல் எண்ணெய் வைத்து கை இல் மாவை எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
    பொன்னிறமாக எடுக்கவும்.
    சுவையான 'குணுக்கு' ரெடி.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #3
      Re: சன்யாசி உருண்டை

      அது சரி , நீங்க இதை சமையல் த்ரெட் இல் போடலாமே மாமா ? இங்க போட்டிருக்கிங்க ? அங்கு போட்டால் இன்னும் நிறைய பேர் பார்ப்பாளே?
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #4
        Re: சன்யாசி உருண்டை

        மாமா, நீங்க இத இன்னும் பாக்கலியா ?
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #5
          Re: சன்யாசி உருண்டை

          ஶ்ரீ:
          எனக்கு எப்படி சௌகர்யமோ அப்படி கூப்பிட நீங்க அனுமதிக்கணும்.
          மொட்டையா பேர்சொல்லி கூப்பிட்டு பழக்கம் இல்லை.
          மேடம்னு இல்லாட்டாலும் மாமின்னாவது கூப்பிட அனுமதிங்கோ, இது அடியேன் விண்ணப்பம்.

          எங்காத்துல இந்த இன்டர்நெட் கனக்க்*ஷென் ரொம்ப பாடா படுத்தறது.
          500 கே.பி ஸ்பீட்தான் வரது.
          இதுல நேரடியா டைப் பண்றதுனால, இந்த அப்ளிகேஷன்ல ஆட்டோ ஸேவ்ன்னு ஒரு வசதி இருக்கு
          அது வேற படுத்தறது, வேகமா டைப் பண்ணிண்டிருக்கச்சே நாலு வார்த்தைக்கு ஒருதரம் டைப் ஆறது
          நின்னு போயிடும் ஏன்னா அதுவரைக்கும் டைப் பண்ணினத ஸேவ் பண்றாங்களாமா!

          அத புடுங்கி உட்டுருவேன், ஆனா அது உங்களப்போல இருக்கறவாளுக்கு திடீர்னு கரண்ட் போயிடுத்துன்னா
          அதுவரைக்கும் டைப் பண்ணினது போயிடுத்துன்னா ரொம்ப வருத்தப்படுவேள், அதுக்குத்தான் அப்படியே வைச்சிருக்கேன்.

          அப்பறம்,
          இந்த சன்யாசின்னு எங்கியாவது பார்த்தா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிடுவேன்!
          ஏன்னா - சரி அது எதுக்கு அத உட்டுறுங்கோ.

          அப்பறம் இந்த குணுக்கு விஷயத்துக்கு ப்ரஹ்மண்யன் மாமா அத "துணுக்கு" ன்னு எழுதியிருந்தார்!
          எனக்கு கொஞ்சம் துணுக்கா இருந்துச்சு.

          எங்காத்துலயும் எங்கம்மா குணுக்குன்னு சொல்லித்தான் குடுத்திருக்கா.

          அப்பறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்,
          எனக்கு ரொம்ப நன்னா ரசிச்சு சாப்பிடத் தெரியும்,
          ஒரு பிசிக்கல் பேலன்ஸை சின்ன வயசிலேயே முழுங்கியிருக்கேன்.
          உப்பு, புளிப்பு, காரம், ஸ்வீட், கசப்பு, துவர்ப்பு எது துளி (சில மில்லி கிராம்) கூடப் போனாலும்
          குறைஞ்சு போனாலும் கரைக்டா கண்டு புடிச்சுடுவேன். அதுதான் விவஹாரமே.
          அதுமட்டும் இல்லே கலர் அண்டு அப்பியரன்ஸ்ஸை பாரத்த உடனேயே
          இது இந்த டேஸ்ட்லதான் இருக்கும் ன்னு ரொம்ப கரைக்டா சொல்லிடுவேன்.

          இவளோ தெரிஞ்ச எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியாது,
          சட்டுவத்தை எந்தப்பக்கமா புடிக்கணும்னுகூடத் தெரியாது,
          எங்காத்து மாமி தளிகைப்பண்ற உள்ள எட்டிப்பார்த்தா அதாலதான் விரட்டுவா.
          நம்புங்கோ.
          தாஸன்.
          என்.வி.எஸ்
          பின் குறிப்பு:- எனக்கு எப்ப தேர்த்தம் தாஹம் எடுக்கறதுன்னுகூட எனக்கே தெரியாது,
          மாமி கொடுக்கும்போதுதான் தேர்த்தம் சாப்பிடுவேன். எவ்வளவு நாழி ஆனாலும் அவ வந்துதான்
          எனக்கு எதுவா இருந்தாலும்.

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: குணுக்கு

            Originally posted by krishnaamma View Post
            மாமா, எங்கள் ஆத்தில் குணுக்கு செய்வா, அதன் குறிப்பை இங்கு போட்டிருக்கேன், நீங்க சொல்வதுடன் இது ஒத்து வரதா பாருங்கோ, பதில் போடுங்கோ.

            தேவையானவை :

            அரிசி ஒரு கப்
            கடலை பருப்பு 3 / 4 கப்
            துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
            உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
            உப்பு
            கொஞ்சம் வற்றல் மிளகாய்
            பொரிக்க எண்ணெய்

            செய்முறை :

            எல்லாவற்றையும் ஒன்றாக நனைக்கவும்..
            ஒரு அரை மணி ஊரினதும் மிக்சி இல் கொஞ்சம் 'நர நர' வென அரைக்கவும்.
            மாவில் மட்டாக தண்ணீர் விடவும்.
            வாணலி இல் எண்ணெய் வைத்து கை இல் மாவை எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
            பொன்னிறமாக எடுக்கவும்.
            சுவையான 'குணுக்கு' ரெடி.
            அம்மணி
            பதில் எழுத சற்று தாமதமாகிவிட்டது, பொறுத்துக்கொள்ளவும்.
            நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் அநேகமாக "சந்நியாசி உருண்டை" செய்ய உதவும் என நம்புகிறேன்.
            அந்த உருண்டையில் தேங்காய் துருவியது மற்றும் கறிவேப்பிலை, பெருங்காயம் இருக்கும் என நினைப்பு. எனது மனைவியிடம் இந்த முறையில் செய்யச்சொல்லி பார்க்கிறேன் . தாங்கள் கூறியபடி "குணுக்கு" என்பதே சரியான பெயர் நான் எழுதியது தவறு .
            தங்கள் நலம்கொரும்
            ப்ரஹ்மண்யன்,
            பெங்களூரு

            Comment

            • #7
              Re: சன்யாசி உருண்டை

              Originally posted by bmbcAdmin View Post
              ஶ்ரீ:
              எனக்கு எப்படி சௌகர்யமோ அப்படி கூப்பிட நீங்க அனுமதிக்கணும். (மாமா, உங்க சௌகர்யம்போல கூப்பிடுங்கோ )
              மொட்டையா பேர்சொல்லி கூப்பிட்டு பழக்கம் இல்லை.
              மேடம்னு இல்லாட்டாலும் மாமின்னாவது கூப்பிட அனுமதிங்கோ, இது அடியேன் விண்ணப்பம்.

              எங்காத்துல இந்த இன்டர்நெட் கனக்க்*ஷென் ரொம்ப பாடா படுத்தறது.
              500 கே.பி ஸ்பீட்தான் வரது.
              இதுல நேரடியா டைப் பண்றதுனால, இந்த அப்ளிகேஷன்ல ஆட்டோ ஸேவ்ன்னு ஒரு வசதி இருக்கு
              அது வேற படுத்தறது, வேகமா டைப் பண்ணிண்டிருக்கச்சே நாலு வார்த்தைக்கு ஒருதரம் டைப் ஆறது
              நின்னு போயிடும் ஏன்னா அதுவரைக்கும் டைப் பண்ணினத ஸேவ் பண்றாங்களாமா!

              அத புடுங்கி உட்டுருவேன், ஆனா அது உங்களப்போல இருக்கறவாளுக்கு திடீர்னு கரண்ட் போயிடுத்துன்னா
              அதுவரைக்கும் டைப் பண்ணினது போயிடுத்துன்னா ரொம்ப வருத்தப்படுவேள், அதுக்குத்தான் அப்படியே வைச்சிருக்கேன்.

              அப்பறம்,
              இந்த சன்யாசின்னு எங்கியாவது பார்த்தா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிடுவேன்!
              ஏன்னா - சரி அது எதுக்கு அத உட்டுறுங்கோ.

              அப்பறம் இந்த குணுக்கு விஷயத்துக்கு ப்ரஹ்மண்யன் மாமா அத "துணுக்கு" ன்னு எழுதியிருந்தார்!
              எனக்கு கொஞ்சம் துணுக்கா இருந்துச்சு.

              எங்காத்துலயும் எங்கம்மா குணுக்குன்னு சொல்லித்தான் குடுத்திருக்கா.

              அப்பறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்,
              எனக்கு ரொம்ப நன்னா ரசிச்சு சாப்பிடத் தெரியும்,
              ஒரு பிசிக்கல் பேலன்ஸை சின்ன வயசிலேயே முழுங்கியிருக்கேன்
              .

              உப்பு, புளிப்பு, காரம், ஸ்வீட், கசப்பு, துவர்ப்பு எது துளி (சில மில்லி கிராம்) கூடப் போனாலும்
              குறைஞ்சு போனாலும் கரைக்டா கண்டு புடிச்சுடுவேன். அதுதான் விவஹாரமே.
              அதுமட்டும் இல்லே கலர் அண்டு அப்பியரன்ஸ்ஸை பாரத்த உடனேயே
              இது இந்த டேஸ்ட்லதான் இருக்கும் ன்னு ரொம்ப கரைக்டா சொல்லிடுவேன்.

              இவளோ தெரிஞ்ச எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியாது,
              சட்டுவத்தை எந்தப்பக்கமா புடிக்கணும்னுகூடத் தெரியாது,
              எங்காத்து மாமி தளிகைப்பண்ற உள்ள எட்டிப்பார்த்தா அதாலதான் விரட்டுவா.
              நம்புங்கோ.
              தாஸன்.
              என்.வி.எஸ்
              பின் குறிப்பு:- எனக்கு எப்ப தேர்த்தம் தாஹம் எடுக்கறதுன்னுகூட எனக்கே தெரியாது,
              மாமி கொடுக்கும்போதுதான் தேர்த்தம் சாப்பிடுவேன். எவ்வளவு நாழி ஆனாலும் அவ வந்துதான்
              எனக்கு எதுவா இருந்தாலும்.

              சூப்பர் மாமா நீங்க ரொம்ப லக்கி
              நான் சில நாட்களாக இங்கு வரலை, அதுதான் உங்களுக்கு பதில் போட முடியலை, மன்னிக்கவும்.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #8
                Re: குணுக்கு

                Originally posted by Brahmanyan View Post
                அம்மணி
                பதில் எழுத சற்று தாமதமாகிவிட்டது, பொறுத்துக்கொள்ளவும்.
                நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் அநேகமாக "சந்நியாசி உருண்டை" செய்ய உதவும் என நம்புகிறேன்.
                அந்த உருண்டையில் தேங்காய் துருவியது மற்றும் கறிவேப்பிலை, பெருங்காயம் இருக்கும் என நினைப்பு. எனது மனைவியிடம் இந்த முறையில் செய்யச்சொல்லி பார்க்கிறேன் . தாங்கள் கூறியபடி "குணுக்கு" என்பதே சரியான பெயர் நான் எழுதியது தவறு .
                தங்கள் நலம்கொரும்
                ப்ரஹ்மண்யன்,
                பெங்களூரு
                நன்றி மாமா, நானும் பதில் போட சற்று தாமதமாகி விட்டது மன்னிக்கணும் . நீங்க தேடியது இதுவானால் எனக்கு ரொம்ப சந்தோஷமே ஆமாம் இதில் தேங்காய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போடலாம்
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                Working...
                X