Announcement

Collapse
No announcement yet.

27 stars & respective bhairavar temples

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 27 stars & respective bhairavar temples

    ஓம் நமசிவாய.
    நட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப்பெறும் ரகசியமும்!!!
    இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு
    ஏற்ப இருபத்தேழு பைரவர்களும், அந்த பைரவரின் கோவில்களும் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. நமது வாழ்க்கை வளமாகவும், நலமாகவும்,நிம்மதியாகவும் இருக்க நாம் விநாயகர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு இவைகளுடன் நமது நட்சத்திரத்துக்குரிய பைரவர்
    வழிபாடு போன்றவைகளை பின்பற்றினாலே போதுமானது. இதற்கு நிரந்தரமாக அசைவம்
    சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்
    எப்படிச் செய்ய வேண்டும்?
    ஒவ்வொரு தமிழ் மாதமும் நமது ஜன்ம நட்சத்திரம் ஒரு நாளன்று
    வரும்;சில சமயம் இரண்டு நாட்களுக்கும் வரும்; அந்த
    நாளில் மாலை ஐந்து மணிக்கு
    மேல் ஏழு மணிக்குள் இந்த
    அபிஷேகத்தைச் செய்து முடிக்க
    வேண்டும்.அந்த நாளில் நமது
    ஊரில் இருக்கும் பழமையான
    சிவாலயத்தில் இருக்கும்
    ஸ்ரீகாலபைரவருக்கு பின்வரும்
    பொருட்களுடன் அபிஷேகம் செய்ய வேண்டும். செய்துவிட்டு, நைவேத்தியத்தை முழுமையாக அங்கே வரும் பக்தர்கள், பக்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு நேராக நமது வீட்டிற்குச் செல்லவேண்டும். இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை
    செய்ய வேண்டும். ஒரு தமிழ்
    மாதத்திற்கு ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் தொடர்ந்து எட்டு
    மாதங்கள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.எட்டாவது(சில சமயம் ஏழாவது) மாதத்தில் வரும்
    ஜன்ம நட்சத்திர நாளில் இந்த
    பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும்
    நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆலயத்துக்குச் சென்று மேற்கூறியவாறு அபிஷேகம்
    செய்து,நைவேத்தியத்தை
    பகிர்ந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு எட்டு தடவை செய்து முடித்த நூறு நாட்களுக்குள் நமது
    ஜாதகப்படி இருக்கும் எந்த ஒரு
    பிரச்னை/கர்மவினை/துயரங்கள்/
    கஷ்டங்களும் விலகி ஒரு மகத்தான சுபிட்சத்தை அடைந்துவிடுவோம்.


    ஸ்ரீகால பைரவருக்குரிய
    அபிஷேகப் பொருட்கள்:


    அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை, பால்,விபூதி,மஞ்சள்பொடி,அரிசிப்பொடி என்ற மாப்பொடி, நல்லெண்ணெய், வில்வம்
    இவைகளுடன் நைவேத்தியமாக ஒரு கிலோ வரையிலான டயமண்டு கல்கண்டு, வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட தயிர்ச்சாதம், வீட்டிலேயே சமைக்கப்பட்ட மிளகு வடை போன்றவைகள்.


    ஓம் நமச்சிவாய.


    27 நட்சத்திர பைரவர்களையும், அவர்கள் அருளும் ஆலயங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்:


    1.அசுபதி/அஸ்வினி=ஞானபைரவர்=பேரூர்


    2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்


    3.கார்த்திகை=அண்ணாமலை
    பைரவர்


    4.ரோகிணி=பிரம்ம
    சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்


    5.மிருகசீரிடம்=க்ஷேத்ர
    பாலர்=க்ஷேத்ரபாலபுரம்


    6.திருவாதிரை=வடுகபைரவர்=வடுகூர்


    7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி


    8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்


    9.ஆயில்யம்=பாதாள
    பைரவர்=காளஹஸ்தி


    10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்


    11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்


    12.உத்திரம்=ஜடாமண்டல
    பைரவர்=சேரன்மகாதேவி


    13.அஸ்தம்=யோகாசன
    பைரவர்=திருப்பத்தூர்


    14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி


    15.சுவாதி=ஜடாமுனி
    பைரவர்=பொற்பனைக்
    கோட்டை


    16.விசாகம்=கோட்டை
    பைரவர்=திருமயம்


    17.அனுஷம்=சொர்ண
    பைரவர்=சிதம்பரம்


    18.கேட்டை=கதாயுத
    பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை


    19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி


    20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்


    21.உத்திராடம்=முத்தலைவேல்
    வடுகர்=கரூர்


    22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன்பட்டி


    23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவபலிபீடம்)


    24.சதயம்=சர்ப்பபைரவர்= சங்கரன்கோவில்


    25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை, தஞ்சை


    26.உத்திரட்டாதி=வெண்கலஓசை
    பைரவர்=சேஞ்ஞலூர்


    27.ரேவதி=சம்ஹாரபைரவர்= தாத்தையங்கார் பேட்டை


    குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில்
    பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர
    பைரவர் வழிபாடு தாராளமாகச்
    செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டுஅபிஷேகம் செய்து
    வழிபாடும் செய்யலாம்.காலத்தை
    இயக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.


    பைரவர் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.


    ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம்
    கால பைரவாய நமஹ.


    ஓம் நமச்சிவாய.
Working...
X