90.வரதாமணி
வரதா மணிநீ யெனவோரில்
வருகா தெதுதா னதில்வாரா
திரதா திகளால் நவலோக
மிடவே கரியா மிதிலேது
சரதா மறையோ தயன்மாலும்
சகலா கமநூ லறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.

- 90 பழநி


துதித்தால் வரும் பேறு இத்திருப்புகழில் சொல்லப்படுகிறதுபதம் பிரித்து உரை


வரதா மணி நீ என ஓரில்
வருகா(த)து எது தான் அதில் வராது


வரதா= வேண்டுவோர் வேண்டுகின்ற வரங்களை அளிப்பவனே மணி நீ = (கண்) மணியே என ஓரில் = என்று துதித்து ஆராய்ந்து பார்த்தால் வருகாதது எது = கை கூடாதது எது உண்டு? எது தான் அதில் வாராது = எந்தக் காரியம் தான் அங்ஙனம் துதித்தால் கை கூடாது?


இரத ஆதிகளால் நவ லோகம்
இடவே கரியா(கு)ம் இதில் ஏது


இரத ஆதிகளால் = இரசவாதம் முதலியவைகளால் நவலோகம்இடவே = ஒன்பது உலோகங்களை இட்ட கூட்டுறவால்கரியாகும் இதில் ஏது = (இறுதியில்) கரியாவதன்றி வரும் பயன்என்ன? (ஒன்றுமில்லை அல்லவா)


சரதா மறை ஓதும் அயன் மாலும்
சகல ஆகம நூல் அறியாத


சரதா = மெய்யனே மறை ஓதும் = வேதம் ஓதுகின்ற அயன் = பிரமனும்மாலும் = திருமாலும் சகல ஆகம = எல்லா ஆகமங்களும் நூல் = மற்ற ஞான நூல்களும் அறியாத = கண்டறியாத


பர தேவதையாள் தரு சேயே
பழனா புரி வாழ் பெருமாளே.


பர தேவதையாள் = பர தேவதையாகிய பார்வதி தரு சேயே =அருளிய குழந்தையே பழனா புரி வாழ் பெருமாளே = பழனி நகரில் வாழ்கின்ற பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


அ. வருகா தெதுதா னதில் வாராது....
வருகா(த)து எது? எது தான் அதில் வராது? எனப் பிரிக்கவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆ. ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்.


இ. நவ லோகங்கள்.... பொன், செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா(கலப்பு உலோகம்) , துத்தநாகம், வெண்கலம்.