நம் சமையலில் முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் ஆமாம். இன்றய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )