ஞாபகம் இருக்கா? 30 years back to school time.
"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் .?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
"கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...
அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்
நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்
வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்
ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்
என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்
நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்
போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)
சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்
எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.
விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்படுவோம்
அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை படிப்பவர்கள், அக்காலத்தவராயிருந்தால், உங்களுக்கும் இதே உணர்வுதான்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends