புரட்டாசி சனிக்கிழமை நிறைய பேர் மாவிளக்கு போடுவார்கள். எங்க அம்மா வீட்டிலும் இந்த வழக்கம் உண்டு. இங்கு அதை செய்யும் முறை பற்றி சொல்கிறேன்.

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
நாட்டு சர்க்கரை 3/4 கப்
விளக்கு ஏற்ற நெய்
ஏலக்காய் 3 -4

செய்முறை:

அரிசியை களைந்து உலர்த்தி, அது நன்கு ஈரம் காயும்முன்பே மிக்சி இல் மாவாக அரைக்கவும்.
(எங்க அம்மா, பாட்டி உரலில் இடிப்பார்கள் )
அந்த மாவு அரைக்கும் போதே ஏலக்காய் போட்டு அரைக்கவும் .
மாவை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, நாட்டு சக்கரை யை போட்டு நன்கு பிசையவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
ஒரு வெள்ளி பேசினில் பிசைந்த மாவிளக்கு மாவை வைத்து நடுவில் குழித்து, நெய் விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றணும்.
விளக்கு மலை ஏறினதும், திரியை எடுத்துவிட்டு, கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து பிரசாதம் ஆக எல்லோருக்கும் தரலாம்.

குறிப்பு: சிலர் வெல்லம் போட்டு செய்வார்கள்.