அரச மரப்ரதக்க்ஷிநம்.
சநிகிழமைஅந்று அரச மரத்தடியில்உட்கார்ந்து ஆரண்யகம் ஆராவதுப்ரச்நம் பாராயணம் அளவில்லாபுண்ணியம் தரும்.


அரச மரமும்வேப்ப மரமும் நந்கு வளர்ந்தபிறகு ஒரு நல்ல நாளில் யஜமாநந்ஸ்நாநம் முதலிய நித்ய கர்மாக்களைமுடித்து கொண்டு அரச வேப்பமரம் சமீபம் வந்து தோரணம்கட்டி, கோலம்


போட்டுமரத்திற்கு கிழக்கே தோரணதோடுமண்டபம் அமைத்து வேதம் கற்றப்ராஹ்மணர்களை அழைத்து தக்ஷிணைதாம்பூலத்துடந் அநுக்ஞை
விக்நேஸ்வரபூஜை, சங்கல்பம்,செய்து


புண்யாஹாவசநம்செய்து, எல்லாஇடங்கலளிலும் ப்ரோக்ஷித்து, வெள்ளிதகட்டில் அரச மர ப்ரதிமைசெய்து பஞ்சகவ்யத்தால் சுத்தம்செய்ய வேண்டும்.
ஸ்தண்டிலம்அமைக்கவும்.பூமியில் கோலம்போட்டு அதந் மேல் பழைய பேப்பர்போட்டு அதந் மேல் நெல் அல்லதுகோதுமை போட்டு அதந் மேல் வாழைஇலை போட்டு அதந் மேல் அரசிபோட்டு அதநில் அஷ்ட தளம்வரைந்து அதந் மேல் மூந்றுகலசங்கள் வைக்க வேண்டும்.வடக்கேநாராயணருக்கும் அதந் தெற்கில்அரசமரத்திற்கும் அதந் தெற்கேப்ருஹ்மாவிற்கும் கலசங்கள்வைக்க வேண்டும்.கிழக்கு முதல் எட்டுதிக்கு பாலகர்களுக்கும் 8கலசமும் வைக்கலாம்.ப்ருஹ்மாகலசத்திற்கு ருக்குகளால்ஆவாஹநம், அரசமர கலசத்தில் அரச மர வெள்ளிப்ரதிமையும் வைத்து அசுவத்தநாராயணரை ஆவாஹநம் செய்து நாராயண கலசத்தில் விஷ்ணுகாயத்ரியால் ஆவாஹநம் செய்யவும்.அஷ்ட திக் பாலகர்களைஅஷ்ட திக் பாலக மந்திரங்களால்ஆவாஹநம் செய்யவும்.
ப்ராணப்ரதிஷ்டைசெய்யவும்.புருஷ ஸுக்த விதாநப்படிபூஜை.


ஜபம்.:-நாராயண காயத்ரி-108;வருண,ப்ருஹ்ம,விஷ்ணு.ருத்திர ஸூக்தங்கள்,நமகம்,சமகம்,புருஷ ,ஸ்ரீ் ஸூக்தங்கள்பஞ்ச சாந்தி சொல்ல வேண்டும்..


யஜமாநர்ஸூத்ரப்படி அக்நி ப்ரதிஷ்டை,முகாந்தம் வரைசெய்து, நாராயண காயத்ரிமந்திரத்தால் தநி தநியாகபாயஸம், நெய்,அரச சமித்திநாலும்108 ஹோமம்செய்ய வேண்டும்.


பிறகுதநியாக புருஷ ஸூக்தத்திநாலும்,ஸ்ரீ் ஸூக்தத்திநாலும்ஒவ்வொரு ருக்நாலேயும்பாயசத்திநால் ஹோமம்., ஸ்விஷ்டக்ருத்,ஜயாதி ஹோமம் ;

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
புநர்பூஜை;; கலசம்யதாஸ்தாநம்;எல்லாகலச ஜலத்திநாலும் அரசமரத்திற்கும்,யஜமாநநக்கும்ஸ்நாநம்;ப்ரோக்ஷணம்;


பிறகுயஜமாநந் அரச மரத்திற்கு புருஷஸூக்த விதாநப்படி பூஜை செய்யவேண்டும்..ப்ரதக்ஷிணம்;ஆசார்ய,ருத்விக் ஸம்பாவநை ; வீட்டிற்குவந்து ப்ராஹ்மண போஜநம்.; யஜமாநந் போஜநம்.;ப்ராஹ்மணர்கள்ஆசீர்வாதம்..


அரச மரம்உபநயநம் செய்ய:--வியாசர் கூறிய படி,உத்திராயணம்,சுக்ல பக்ஷம்;தாரா பலம்,சந்திர பலம்,பொருத்தத்துடந்கூடிய ஒரு நாளில் அநுக்ஞை;விக்நேச்வர பூஜை,ஸங்கல்பம்,புண்யாஹாவசநம்;


புண்யாஹாவசநதீர்த்த ப்ரோக்ஷணம் பூணலுக்கும்மற்ற உபகரணங்களுக்கும்;நாந்தி,உத்ராங்க புண்யாஹவசநம்;மந்திரமில்லாமல்ப்ரதிஸர பந்தநம்;பூணல் அணிவித்தல்;


அரச மரத்திந்கிழக்கில் உல்லேகநம் முதல்,பூர்வதந்திரம்,பலாச சமித்,மேகலை;மாந்தோல்,பலாச தண்டம் தயார்செய்து வைத்து க்கொண்டுமுகாந்தம் வரை செய்து ,பலாச சமித்தை நெய்யில்நநைத்து ,மந்திரமில்லாமல் மாந்தோல் பலாச சமித்தை மரத்திந்மேல் சாய்த்து வைத்து ,பிறகு மந்திரத்தால்பூஜிக்க வேண்டும்.வ்யஸ்தமாநவ்யாஹ்ருதி (தநிதநியாகவும்சேர்த்தும்)முதல் 12மந்திரங்களால்ஹோமம் செய்து யோகாதி ப்ரதாநஹோமம், ஜயாதிஹோமமும் செய்ய வேண்டும்.


காயத்ரிஉபதேசத்திற்கு ஸங்கல்பம்.ப்ராஹ்மணர்களுக்குதக்ஷிணை தாம்பூலம் கொடுத்து,ப்ரஹ்ம யக்ஞ ப்ரஹாரம்காயத்ரியை அரச மரத்தை பார்த்துசொல்ல வேண்டும்.ப்ராஹ்மண போஜநம்.தக்ஷிணை.ஆசீர்வாதம்.


பிறகுஒரு நாள் அரச மர விவாஹம் செய்யவேண்டும்.
வைகாசி,கார்த்திகை,மார்கழி,மாசி இவைகளில் ஏதோஒரு மாதத்தில் சுக்ல பக்ஷத்தில்வேப்ப மரத்திற்கும்,அரச மரத்திற்கும்விவாஹம் செய்து வைக்க வேண்டும்.யஜமாநநுக்கு சந்திரபலம் தாரா பலம் உள்ள நாளாகஇருக்க வேண்டும்.


அரசமரத்திற்கு மேற்கே மண்டலம்அமைத்து அதந் மத்தியில் வேதிதயார் செய்து மாவிலை தோரணம்அலங்காரம் செய்யவும்.


அரசமரத்திற்கு பஞ்சாம்ருதஅபிஷேகம் செய்விக்க வேண்டும். அரச மர மத்தியில்புது வேஷ்டி வாங்கி சுற்றிகட்டி விடவும்.யஜமாநர் அரச மரத்திற்குஅபிஷேகம்,பூணல்,சந்தநம்,குங்குமம் வஸ்த்ரம்ஆபரணம் இவைகளால் அலங்கரிக்கவேண்டும்.
மந்திரதோடுயஜமாநர் வேப்ப மரத்திற்கு மாங்கல்யம் கட்ட வேண்டும். யஜமாநரிந் மநைவிகஞ்சுகத்தோடு,வஸ்த்ரத்தோடு வேப்பமரத்தை அலங்கரிக்க வேண்டும்.,பருப்பு தேங்காய்,புஷ்பங்கள்,பக்ஷணங்கள்,பழங்கள்;எல்லாம் வைக்கவேண்டும்.


பிறகுப்ரதாந ஹோமங்களை முடித்துகொண்டு வேப்ப மரம் ஸமீபத்தில் நாண்கு ப்ராமணர்கள் ஜபம் செய்துஜயாதி ஹோமம் ,பரிஷேஷநம்செய்து அரச ,வேப்பமரங்களுக்கு எதிரில் புருஷஸூக்த ஜபம் செய்ய வேண்டும்.


பிறகுநாந்தி,புண்யாஹ வசநம்செய்து ஆசாரியருக்கும்,ப்ராஹ்மணர்களுக்கும்தக்ஷிணை,வஸ்த்ரம்,போஜநம்,செய்வித்து ஆசீர்வாதம்பெற வேண்டும்.


இந்தப்ரகாரம் அரச மரம் விவாஹம்யார் செய்விக்கிறாரோ அவர்நூற்றுகணக்காண யாகம் செய்தபலநும்,கோடிக்கணக்காணப்ராஹ்மணருக்கு உத்தமமாநவிவாஹம் செய்த புண்யம்கிடைக்கும் எந கூறப்பட்டிருக்கிறது.


திங்கட்கிழமை அந்று அமாவாசை வரும்நாட்களில் இந்த அரச,வேப்ப மரத்தை காலையில் சுற்றி வர வேண்டும்.ஓஜோந் அதிகமுள்ளகாற்று கிடைக்கிறது.108 முறை ப்ரதக்ஷிணம்வர வேண்டும்,நேரம் இல்லாதவர்கள்முடிந்த வரை சுற்றி விட்டுசெல்லலாம்.


நேரம்உள்ளவர்கள் ஆண்கள்,பெண்கள் எல்லோரும்சுற்றலாம்.அரச மரத்திற்குஅடியில் உட்கார்ந்து 16உபசார பூஜை செய்துவிட்டு 108சுற்றுகள் சுற்றவேண்டும்..ஒவ்வொரு சுற்றுக்கும்ஒரு அதிரசம் ,போட்டுகொண்டுவந்தால் எண்ணிக்கை சரியாகஅமையும்.சுற்றும்போது


மூலதோப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே, அக்ரதஹசிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தேநமஹ எந்று சொல்லி கொண்டேசுற்றலாம்.


மரங்களிந்தலைவநாந அரச மரமே உந் அடிபகுதியில்ப்ரஹ்மாவாகவும்,மத்தியில் விஷ்ணுவாகவும்,கிளை பகுதிகளில்சிவநாகவும் காக்ஷியளிக்கும்உநக்கு நமஸ்காரம் எந்று தமிழ்அர்த்தம்அக்ஷிஸ்பந்தம்,புஜஸ்பந்தம்,துர் ஸ்வப்நம்,துர் விசிந்தநம்,சத்ரூணாம் ச ஸமுத்பந்நம்அசுவத்த ஸமயஸ்வமே. இதந் அர்த்தம்

தோள்கள்,கண்கள்,கைகள் காரணமில்லாமல்துடித்தல் ,கெட்ட ஸ்வப்ணம்,மநதில் கெட்ட எண்ணம்,எதிரிகளால்,துந்பம் ஆகியவற்றிலிருந்துஅரச மரமே எந்நை காப்பாற்றவும்.பிறகுபுநர் பூஜை செய்துவிட்டுவாத்யார் தக்ஷிணை கொடுத்துவிட்டுஅதிரசம் அல்லது எதோ ஒருபக்ஷணத்தை எல்லோருக்கும்விநியோகம் செய்ய வேண்டும்.


விருதமாக செய்பவர்கள் குறைந்தபக்ஷம் 13வருடம் செய்யவேண்டும்.உத்தியாபநம் செய்யவேண்டும்.இந்று ஒரு நாள்மட்டும் பஞ்சு தொடக்கூடாது.பூமிக்கு அடியில்விளையும் கிழங்குகள் சாப்பிடக்கூடாது.


முதந்முதல் ஆரம்பிக்கும் போதும்,உத்யாபநம் செய்யும்அந்றும் அமாவாசை திதி திங்கட்கிழமைஅந்று பூரணமாக இருக்க.வேண்டும்.
.


தற்காலத்தில்சிறு நகரங்களிலும்,கிராமங்களிலுமேஇது ஸாத்யம்..உத்யாபநம் செய்யும்அந்று அப்பம் அல்லது அதிரசம்செய்து அரச மரத்தை 108முறை சுற்றி விட்டுவீட்டிற்கு வந்து 5கலசம் வைத்து


ஒருவெள்ளி(மெல்லிய)தகட்டில் அரச மரம்ப்ரதிமையுடந் பூஜித்து பஞ்சதாநம் செய்து வாத்யாருக்குஒரு எவெர் சில்வர் தூக்கில்அதிரசம் தாநம் தக்ஷிணையுடந்செய்ய வேண்டும்.ப்ராஹ்மண போஜநம்ஆசீர்வாதம்.
இதநால்ப்ருஹ்மா,விஷ்ணு,சிவந் ஆகியமும்மூர்த்திகள் அருள்கிடைக்கும்.ஏழரை ஆண்டு சநியிந்பாதிப்பு நீங்கும்.பாபம்விலகும்,.ஆயுள் அதிகரிக்கும்.