சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(6) நாயன்மார்கள் சரிதம்.*
*********************************************
*சோமாசிமாற நாயனார்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சோழ நாட்டில் *திருவம்பர்* எனும் இடத்திலே சோமாசிமாறர் என்பவர் வாழ்ந்து வந்தார்.


அவர் ஒரு வேதியர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சிவனடியார்.


அந்தணர் குலத்திற்கேற்ப மிகவும் மேம்பட்டு விளங்கினார்.


அவர் முறையாக யாகங்களைச் செய்பவர். ஐந்தெழுத்தை ஓதுவதை தூயத் தொண்டாய் மேற்கொண்டு வந்தார்.


*எத்தன்மையராயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் அத்தன்மையர் தாம் நம்மை ஆள்பவர்கள்!* என்ற கொள்கையோடு அவர், தம்மை நாடிவரும் அடியார்களுக்கெல்லாம் அடியவராயிருந்து, அவர்களது திருவடிகளைப் போற்றி திருஅமுது படைப்பார்.


அடியார்களுக்கு பாரபட்சம் காட்டாது அன்போடு பழகும் அவரது அரும் பண்பு கண்டு, அடியவர்களெல்லாம் அவரே சிவமெனக்.கொண்டு ழழிபாடு செய்தார்கள்.


சிவபெருமானது திருவைந்தெழுத்தினை விதிப்படி ஓதினால் தமது சித்தமும் தெளியும் என்ற நம்பிக்கையில் இதனையே நித்தியக் கடனாகக் கொண்டார்.


சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திலே இவருக்குப் பேரன்பு இருந்தது.


அதனால்தான் அவரோடு சேர்ந்திருந்துத் தொழக் கருதி திருவாரூரை அடைந்தார்.


சுந்தரமூர்த்தி நாயனாரோடு பெருநட்பு வைத்து, நட்பின் இலக்கணமாகப் பழகினார்.


ஐம்புலன்களையும் அடக்கி
*காமம்*
*குரோதம்*
*கோபம்*
*மதம்*
*மாச்சர்யம்* என்னும் அறுவகைக் குற்றங்களையும் ஒடுக்கி, தன்னையும் காத்து மற்றவர்களையும் காக்கக் காரணமாய் வாழ்ந்தார்.


இதன் மூலம் பெறுதற்கரிய பெரும் பேறான சிவலோகமடைந்து என்றும் நீங்காத பேரின்பம் பெற்றார்.


*அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியோம்.*


திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*