Announcement

Collapse
No announcement yet.

Niti-206 உயரிய பண்பு எது?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Niti-206 உயரிய பண்பு எது?




    उपकारिषु यस्साधु स्साधत्वे तस्य कोगुणः।
    अपकारिषु यस्साधु ससाधु स्सद्भि रुच्यते ॥


    பொருள் :
    தனக்கு உபகாரம் செய்தவரிடத்து நல்லவராயிருப்பது உயர்ந்த குணமல்ல.
    தனக்கு தீங்கிழைத்து பகைமை பாராட்டுபவனிடத்தும் நல்லோனாயிருக்கையே மிகஉயரிய குணம்.

    திருவள்ளுவர் வாக்கு:
    குறள் 151:
    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


    தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

    மு.வ உரை:
    தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

    தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

    பரிமேலழகர் உரை:
    [அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

    அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).
    மணக்குடவர் உரை:
    தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
    Translation:
    As earth bears up the men who delve into her breast,
    To bear with scornful men of virtues is the best.
    Explanation:
    To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues..


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Niti-206 உயரிய பண்பு எது?

    ஸ்வாமின் ஸ்லோகத்தை தமிழிலும் எழுதவும் ப்ளீஸ் உங்கள் மூலம் அரைகுறை சம்ஸ்க்ருத உச்சரிப்பை சரி செய்து கொள்ள ஒரு உபகாரமாய் இருக்கட்டும் ப்ளீஸ்

    Comment


    • #3
      Re: Niti-206 உயரிய பண்பு எது?

      இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் இதையு ம்சேர்த்துக் கொள்ளலாமா

      Comment


      • #4
        Re: Niti-206 உயரிய பண்பு எது?

        ஶ்ரீ:
        ச்லோகம் தமிழில்.
        உபகாரிஷு யஸ்ஸாதுஸ் ஸாதுத்வே தஸ்ய கோ குண:
        அபகாரிஷு யஸ்ஸாது: ஸாது: ஸத்பிருச்யதே

        கண்டிப்பாக அந்தக் குறளையும் சொல்லலாம், அந்தக் குறள்தான் முதலில் ஞாபகம் வந்தது.

        இந்த அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்ற குறள் வள்ளுவரால் சொல்லப்பட்டதாயினும்
        அடியேனுக்கு சற்று உடன்பாடு இல்லை - காரணம்,
        "ஏண்டா மண்ணு மாதிரி இருக்கே?
        மனுஷன்னா கொஞ்சம் உணர்ச்சி வேண்டாமா?!" - என்று வசனம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

        மண் - அகழ்வாரை பொறுமையாகத் தாங்குவதுபோல,
        புகழ்வாரின் புகழுரைக்கும் எந்த ப்ரதிபலிப்பும் இருக்காது?!

        தாங்கள் பத்து முறை பாராட்டி எழுதிய பின்பும்
        அடியேன் எந்த பதிலும் எழுதாமல் இருந்தால்
        கண்டிப்பாக அடியேனை 'மண்ணுடன்' தான் ஒப்பிடுவீர்கள்?!!
        எனவே இது சற்று பொருந்தா உவமையாகவே அடியேனுக்குப் படுகிறது.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Niti-206 உயரிய பண்பு எது?

          This is my first attempt. Hope it is correct.
          உபகாரிஷு யஸ்ஸாது ஸ்ஸாதத்வே தஸ்யகொகுணஹ்
          அபகாரிஷு யஸ்ஸாது ஸஸாதுஸ்ஸத்பிருச்யதே
          Last edited by R.Varadarajan; 07-11-12, 22:43.

          Comment


          • #6
            Re: Niti-206 உயரிய பண்பு எது?

            அபசாரம் இந்த ஸ எப்படி டைப் செய்வது என்றே தெரியாத மூஷ்டிகம் நான் தங்களை அப்படியெல்லாம் மனதால் கூட நினைக்கக வழியில்லை

            Comment

            Working...
            X