Announcement

Collapse
No announcement yet.

Thiruvaasi temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvaasi temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
    (18)
    சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    திருப்பாலாச் சிலாச் சிராமம்.
    ₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪


    இறைவன்:
    மாற்றறிவரதர், (சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்டியவர்.)


    சமீவனேஸ்வரர், (வன்னி சூழ்ந்த வனத்தில் உள்ளவர்.)


    பிரம்மபுரீஸ்வரர், ( பிரமனால் வழிபட்டவர்).


    இறைவி: பாலாம்பிகை, பாலசெளந்தரி.


    தலமரம்: வன்னி.


    தீர்த்தம்: அன்னமாம் பொய்கை, சிலம்பாறு, (பங்குனி ஆறு. அமலை ஆறு எனவும் கூறுவர்.)


    சோழ நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 62 -வது தலமாகப் போற்றப் பெறுகின்றது.


    இருப்பிடம்: திருச்சி-சேலம் பேருந்துச் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.


    பெயர்க் காரணம்:
    பாச்சில் கூற்றத்து ஆசிரமம்--பாச்சிலாச்சிராமம் என்று மாறப் பெற்றது. திருவாசிராமம் என்பது மருவி திருவாசி என்பதாயிற்று.


    தேவாரம் பாடியவர்கள்:
    சம்பந்தர்- 1-ல் ஒரே ஒரு பதிகமும்,
    சுந்தரர்- 7-ல் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.


    கோவில் அமைப்பு:
    கோயில் ஊருக்கு மத்தியில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளன.


    இக்கோயிலின் பரப்பளவு ஒன்றறை ஏக்கரான நிலபரப்பளவில் அமையப் பெற்றதாகும்.


    ராஜ கோபுரத்தின் உயரம் அறுபது அடி உயரமாகும். (மனத்திற்குள் கோபுரத்தை வரச்செய்து வணங்கிக் கொள்ளுங்கள்.)


    இக்கோயிலுக்கு இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.


    முதற் கோபுரத்திற்கும், இரண்டாம் பிரகாரத்திற்கும் இடையே உள்ள இடத்தில், ஒரு மண்டபம் இருக்கின்றன.


    இம்மண்டபத்தை ஆவுடையாப்பிள்ளை மண்டபம் என அழைக்கப்படுகிறார்கள்.


    இம்மண்டபத்திலிருக்கும் தூண்களில், சம்பந்தர் பெருமான், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் உள்ளன.


    அம்பாளிலிருக்கும் சந்நிதி, சுவாமியை நோக்கி மேற்குத் திசையாக பார்த்தமர்ந்திருக்கிறாள்.


    எதிரே குளம் இருக்கின்றன.


    குளக்கரையில் வன்னிமரம் உள்ளன.


    தல சிறப்பு:
    ஈசனிடம் சுந்தரர் பொன் பெற்ற தலம் இது.


    பிரமன், லட்சுமி, உமாதேவி ஆகியோர்களால் வழிபட்ட தலம்.


    கொல்லி மழவன் புதல்விக்கு ஏற்பட்டிருந்த முயலகன் என்ற நோயை சம்பந்தர் தீர்த்து வைத்த பதி இதுவாகும்.


    எனவேதான் நடராசர் திருவடியின் கீழ் முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளன.


    (சர்ப்ப நடனமூர்த்தி)-- முயலகன் என்பது வலிப்பும், வயிற்று வலியும் வரும் ஒரு வகையான நோயாகும்.)


    சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தாபன மண்டபம் இருக்கின்றன.


    இம்மண்டபம் இருக்கும் இடத்தை கல்வெட்டில், கிழி கொடுத்தருளிய திருவாசல் என்ற பெயரால் குறிக்கிக்கின்றது.


    இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப் பாடும் அமைப்பில் அமைத்திருக்கிறார்கள்.


    கருவறையில் சுவாமி ருத்ராட்சத்தாலான பந்தலின் கீழ், சுயம்பு லிங்கமாக இருக்கின்றார். (இவரையும் தலைக்கு மேல் கைகளைத் தூக்கி வணங்கித் தொழுது கொள்ளுங்கள்.


    இராஜ கோபுரத்தின் கீழே அதிகார நந்தி அமர்ந்திருக்கிறார். அதுவும் மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கின்றார்.


    இங்குள்ள நவக்கிரகங்களில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷா உடன் இருக்க, மற்ற கிரகங்கள் அவரைப் பார்த்த வண்ணமாக உள்ளனர்.


    பிரகாரத்தில் சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது.


    தல அருமை:
    சிவத்தலயாத்திரையாகச் சென்ற சுந்தரர், தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன்பெற்று அதன்மூலம் அவர்களுக்கு உணவைத் தயாரித்து வழக்கமாக வழங்கி வந்தார்.


    ஒரு சமயம், பொன் பெற்றுச் செல்ல இத்தலம் வந்தார் சுந்தரர்.


    சிவனையே நன்பராகக் கொண்டிருந்த சுந்தரர், இங்கு பொன் வேண்டிப் பதிகம் பாடினார்.


    ஏற்கனவே சுந்தரரைச் சோதித்து விளையாட எண்ணம் கொண்டிருந்தார் சிவன்.


    சோதனையில் சுந்தரருக்கு பொன் தராமல் காலந்தாழ்த்துவதுதான் ஈசனின் சோதனை.


    காலதாமதம் அதிகமாகி விரைந்தனால், பொறுமை காத்து வந்த சுந்தரர், சற்றென்று கோபப்பட்டார்.


    "சிவன் இருக்கிறாரா? இல்லையா?" என ஈசனை இகழ்ந்து பதிகமொன்றைப் பாடினார்.


    இதற்கு மேலும் நன்பன் சுந்தரனுக்கு கோபத்தைக் கூடுதலாக்க மனமில்லாத சிவன், பொன்முடிப் பையைப் பரிசாகத் தந்தார்.


    அப்போது ஈசன், கொடுத்த பொன் தரமானதுதானா? என சந்தேகம் சுந்தரருக்கு வர, பைமுடிப்பிலிருந்து,வெளியே எடுத்த பொன்னை உற்று உற்றுப் பார்த்தார்.


    அந்தச் சமயம் அவ்விடம் வந்த இருவரும்.......


    ஏன்? ஐயா! பொன்னையே உற்று உற்று பார்க்கிறீர்கள்? என கேட்க...


    அதற்குச் சுந்தரர்....இந்தப் பொன் சுத்தமான பொன்தானா? எனப் பார்க்கின்றேன் என்றார்.


    உடனே அவ்விருவரில் ஒருவன், "இப்படித் தாருங்கள் ஐயா! நான் தரம் பார்த்துக் கூறுகிறேன் எனக் கேட்டு வாங்கி....'அப்பொன்னை உரைத்துப் பார்த்து,.... ஐயா!, இப்பொன் தரமான பொன்தான் எனக் கூறினார்.


    இருவரில் கூடயிருந்த மற்றொருவனும் இதை உறுதிபடுத்தினான். பின் இருவரும் மறைந்தருளிக் காணாமற்,போயினர்.


    பெரும் வியப்பு கொண்ட சுந்தரர், மறுபடியும் ஈசனை இகழ்ந்து பாடவில்லை என அர்த்த உணர்வாக பதிகமொன்றை பாடினார்.


    தல பெருமை:
    முன்பு இப்பகுதியை மழநாடு என்ற பெயரில் இருந்தது.


    அப்போது அப்பகுதியை கொல்லிமழவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான்.


    கொல்லிமழவனான மகளுக்கு தீரப்பெறாத பெரிய கடினநோய் பீடித்திருந்தது.


    அவளுக்கு எத்தனையோ வைத்தியம் செய்து பார்த்தான் கொல்லிமழவன், அந்த வைத்தியத்திற்கெல்லாம் நோய் குணமே ஆகாது போயின.


    கடைசியாக, இனியேதும் வைத்தியமேதும் பார்க்கறதுக்கில்லை என முடிவெடுத்து, "இனி இவளின் பிணியை இறைவனே தீர்க்கட்டும் என்று சுவாமியின் முன்பு முறையிட்டு மகளை கிடத்திவிட்டுச் சென்றான் கொல்லி மழவன்.


    அந்தச் சமயத்தில் இவ்வாலயம் வந்த சம்பந்தர்.


    இறைவன் முன்பு பெண் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார். சம்பந்தர் ஆலயம் வந்திருப்பதையறிந்த மன்னன், அவனும் உடனே திருக்கோயில் விரைந்தான்.


    மன்னன் சம்பந்தரிடம் தன் மகளுக்கிருக்கும் தீராநோய்க்கு வழியிருக்கா என கேட்டார்.


    மன்னனுக்கு ஆறுதல் கூறிய சம்பந்தர், நடராசரைக் குறித்துப் பதிகம் பாடினார்.


    சம்பந்தர் பாட...பாட.......


    நடராசர் நடனம் ஆட.... ஆட.....


    கொல்லி மழவனின் மகளுக்கு பீடித்திருந்த
    முயலகனை உருவாக்கி வரச் செய்து, அம்முயலகனை அழித்து நாகத்தின் மீது நடனம் தொடர்ந்தார் ஈசன்.


    மழவன் மகள் குணமாகி எழுந்து நின்றாள். இதனை உணர்த்தும் பொருட்டும் வகையில் நடராசர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன் ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார்.


    ஆகவேதான் இவரை சர்ப்ப நடராசர் என்றழைக்கப் படுகிறார்.


    திருவிழாக்கள்:
    வைகாசி பெளர்ணமியில் துவங்கி தொடர்ந்து பதினோரு நாட்களாக பெருவிழா நடக்கும்.


    திருக்கார்த்திகை மற்றும், ஆருத்ரா தரிசனம்.


    தைப்பூசம்.


    செய்தி:
    அர்த்தசாம பூஜையின் போது மட்டும், முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பிறகே சுவாமிக்கு பூஜை நடக்கும்.


    பூஜை:
    சிவாகம முறையில் நான்கு கால பூஜை.


    காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,


    மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.


    அஞ்சல் முகவரி:
    அருள்மிகு, மாற்றறிவரதர் திருக்கோயில்,
    திருவாசி, மற்றும்
    அஞ்சல்-621 216,
    (வழி) பிச்சாண்டார்கோயில் S O
    திருச்சி மாவட்டம்.


    தொடர்புக்கு:
    மோகன்: 0431- 2908109
    98656 64870


    திருச்சிற்றம்பலம்.
Working...
X