Announcement

Collapse
No announcement yet.

சில தகவல்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சில தகவல்கள்

    * உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் -- நடராஜர் கோயில்.
    * கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில் வாலியும்,
    சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால், ராமன் அம்பு
    தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால், வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
    * கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோயிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.
    * கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் தலம் கும்பகோணம் அருகே
    வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்கு மட்டும் இதுபோல் காட்சி தருகிறார்.
    * ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம், விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.
    குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
    * விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளோ
    இல்லை.
    * வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல்
    6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை
    நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம்.
    -- தினமலர் பக்திமலர். 25-12-2014.
Working...
X