ரிஷிபஞ்சமி 26-08-2017.


விநாயகசதுர்திக்கு மறு நாள் பாத்ரபத மாதம் சுக்ல பஞ்சமி அன்றுரிஷி பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்.கஸ்யபர்,அத்ரி ஜமதக்னிபரத்வாஜர் கௌதமர் விசுவாமித்ரர்வசிஷ்டர் அகத்தியர் அருந்ததி


ஆகியோரைஎட்டு கலசங்கள் வைத்து பதினாறுஉபசார பூஜை செய்ய வேண்டும். எட்டுசாஸ்த்ரிகள் வரச்சொல்லி இந்தரிஷிகளை அவர்களிடம் ஆவாஹனம்செய்து பூஜித்து சாப்பாடுபோட்டு தக்ஷிணை


கொடுத்துஅவர்களுக்கு ஒவ்வொருவருக்கும்ஆப்பிள்,ஆரஞ்சு வாழைபழம்,மாதுளை கொய்யாபன்னீர் திராட்சை பேரீட்சைபழம் மாம்பழம்.பலாசுளை குறைந்தபட்சம் ஒவ்வொன்றிலும் கடையில்


கிடைப்பதில்ஒரு பழம் வீதமும் பட்சணங்கள்எள்ளுருண்டை,அதிரசம்,வடை,முறுக்கு,தட்டை,சீடை,லட்டு,மைசூர் பாகு, ஆகியவைகளில்ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும்ஒன்று தட்சிணை,தாம்பூலம் (அந்தகாலத்தில் முறத்தில்


போட்டுகொடுத்தார்கள் ).தற்காலத்தில்ஒவ்வொருவருக்கும் ஒருபிளாஸ்டிக் கூடையில் போட்டுகொடுக்க வேண்டும்...வசதி படைத்தவர்கள் அதிகமாகவும் போட்டு கொடுக்கலாம்..


நிறையதண்ணீர் ஓடும் ஆற்றிற்குசென்று நூற்று எட்டு நாயுருவிகுச்சியால் ஆயுர் பலம் யசோவர்சஹா பிரஜாஹா பசு வஸுநிச


ப்ருஹ்ம பிரக்ஞ்யாம் ச மேதாம் ச த்வம்நோ தேஹி வனஸ்பதே.என்ற மந்திரம்சொல்லி நூற்று எட்டு முறைபல் துலக்க வேண்டும்..
மகா சங்கல்பம்சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்.அல்லது
குளம்அல்லது கிணற்றில்\அல்லதுகுழாயடியில் ஸ்நானம் செய்யவேண்டும்.


ஆவணிஅவிட்டம் அன்று மகா சங்கல்பம்சொல்லும் மந்திரம் களை சொல்லிசங்கல்பம் செய்துகொண்டுஸ்நானம் செய்ய வேண்டும்..


அதிக்ரூர--------------சொல்லவேண்டும்.


மாத விடாய்நின்று இரு வருடங்கள் கழித்துதான் இதை செய்ய வேண்டும்.கணவன் மனைவி சேர்ந்துசெய்யலாம்.விதவைகளும் அவசியம்செய்ய வேண்டும்.


தற்காலத்தில்மாதவிடாயின் போதும் வேலைக்குசெல்ல வேண்டி இருப்பதால். எந்த ரிஷிகள் மாதவிடாயின் போது செல்ல க்கூடாதுஎன்று எழுதி இருக்கிறார்களோஅவர்களிடம் பூஜை செய்து ஆசிபெறுகிறோம்.


மாதவிடாயின்போது கட்டுபாட்டைமீறினால் அந்த பெண்ணுக்குமட்டும் அல்லாமல் அந்த பெண்ணின்குழந்தைகளுக்கும் பாதிப்புஏற்படலாம் என்கின்றனசாஸ்திரங்கள்..


இந்ததோஷத்திலிருந்து தன்னையும்தன் குழந்தைகளையும் காப்பாற்றிகொள்ளவே ரிஷி பஞ்சமி விரதம்.இது ஒரு பரிஹாரம்..

ரிஷிபஞ்சமி செய்யும் பெண் அன்றுமதியம் 108முறை நாயுருவிகுச்சியால் பல் துலக்கி விட்டுநெல்லி பொடியை உடலில் தடவிக்கொண்டு மஹா ஸங்கல்பம் செய்துகொண்டு நதியில் முழுகி ஸ்நானம்செய்ய வேண்டும்..


முடியாதவர்கள்முதல் நாள் காலையில் 108முறை பல் தேய்த்துஸங்கல்ப ஸ்நானம் செய்யவேண்டும்..பஞ்சகவ்யம் சாப்பிடவேண்டும்.


மாலையில்தன் வீட்டில் ஸ்தண்டிலம்அமைத்து கீழே 2கிலோ கோதுமை பரப்பிஅதன் மேல் இலை போட்டு 2கிலோ பச்சரிசிபரப்பி எட்டு கலசங்களில்10.ம்நம்பர் நூல் சுற்றி தண்ணீர்விட்டு அதில்


பச்சைகற்பூரம்,ஏலக்காய் பொடிபோட்டு. மாவிலைகொத்து வைத்து தேங்காய் வைத்துகூர்ச்சம் வைத்து சுற்றிலும்சந்தனம் குங்குமம் வைத்துகலச வஸ்த்ரம் சாற்றி மாலைசாற்றி வைக்க வேண்டும்.


16உபசார பூஜை;ஜபம்.ருத்திரம்,சமகம்,புருஷ சூக்தம்,ஸ்ரீ் ஸூக்தம்.மற்றவைகளும்.. பிறகு எட்டுசாஸ்திரிகளுக்கும் ஒவ்வொருரிஷி ஆவாநம்,பூஜை.சாப்பாடு.யமுநா பூஜையும்உண்டு.அர்க்கியம் உண்டு.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஹோமம்செய்வதற்கு ஹோம குண்டம் அல்லதுசெங்கல் மணல் தேவை.நெய்,விராட்டி,ஹோம குச்சிகள்,சிராய் தூள்,விசிறி ,கற்பூரம்,தீப்பெட்டி,நல்ல எண்ணை,திரி,குத்து விளக்கு ,ஊதுபத்தி,தேவை.இரவு கண்விழிக்க வேண்டும்.புராண கதைகள் படிக்கவேண்டும்..
மறு நாள்காலை புனர் பூஜை செய்ய வேண்டும். இதற்கு ஒரு வாத்யார்போதும்.
7வருடங்கள் செய்யவேண்டும்.7 வருடம் வரை உயிரோடுஇருப்போம் என்பது நம் கையில்இல்லை. ஆதலால்முதல் வருடமே இம்மாதிரிஉத்யாபநம் செய்து விட வேண்டும்.


மறுவருடத்திலிருந்து லிப்கோகம்பெனி அல்லது வேறு கம்பெனிவிரத பூஜா விதாநம் புத்தகத்தைபார்த்து யமுநா பூஜையும்ரிஷி பஞ்சமி பூஜையையும் செய்துவிடலாம். ஒரேவாத்யார் போதும்.