Announcement

Collapse
No announcement yet.

Tyagaraja pancaratna kriti Kana Kana Ruchira - Raga Varali

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tyagaraja pancaratna kriti Kana Kana Ruchira - Raga Varali

    Courtesy: http://tyagaraja-vaibhavam-tamil.blo...ga-varali.html


    தியாகராஜ கிருதி - கன கன ருசிரா - ராகம் வராளி - Kana Kana Ruchira - Raga Varali
    பல்லவி
    கன கன ருசிரா கனக வஸன நின்னு (கன)


    அனுபல்லவி
    தி3ன தி3னமுனு மனஸுன சனுவுன நின்னு (கன)


    சரணம்
    சரணம் 1
    பாலு காரு மோமுன ஸ்ரீயபார
    மஹிம தனரு நின்னு (கன)
    ________________________________________


    சரணம் 2
    கல-கலமனு முக2 கள கலிகி3ன ஸீத
    குலுகுசுனோர கன்னுலனு ஜூசு நின்னு (கன)
    ________________________________________


    சரணம் 3
    பா3லார்காப4 ஸு-சேல மணி-மய
    மாலாலங்க்ரு2த கந்த4ர
    ஸரஸிஜாக்ஷ வர கபோல ஸு-ருசிர
    கிரீட த4ர ஸந்ததம்பு3 மனஸாரக3 (கன)
    ________________________________________


    சரணம் 4
    ஸா-பத்னி மாதயௌ ஸுருசி-சே
    கர்ண ஸூ1லமைன மாட வீனுல
    சுருக்கன தாளக ஸ்ரீ ஹரினி த்4யானிஞ்சி
    ஸுகி2ம்பக3 லேதா3யடு (கன)
    ________________________________________


    சரணம் 5
    ம்ரு2க3 மத3 லலாம ஸு1ப4 நிடில வர
    ஜடாயு மோக்ஷ ப2லத3 1பவமான
    ஸுதுடு3 நீது3 மஹிம தெல்ப
    ஸீத தெலிஸி வலசி ஸொக்க லேதா3 ஆ ரீதி நின்னு (கன)
    ________________________________________


    சரணம் 6
    ஸுகா2ஸ்பத3 விமுகா2ம்பு3 த4ர பவன
    2வி-தே3ஹ மானஸ விஹாராப்த
    ஸுர பூ4ஜ மானித கு3ணாங்க
    சிதா3னந்த3 க2க3 துரங்க3 3த்4ரு2த ரதா2ங்க3
    பரம த3யா-கர கருணா ரஸ வருணாலய
    ப4யாபஹர ஸ்ரீ ரகு4பதே (கன)
    ________________________________________


    சரணம் 7
    காமிஞ்சி ப்ரேம மீர கரமுல நீது3
    பாத3 கமலமுல பட்டுகொனு
    வாடு3 ஸாக்ஷி ராம நாம ரஸிகுடு3
    கைலாஸ ஸத3னுடு3 ஸாக்ஷி
    மரியு நாரத3 பராஸ1ர ஸு1க
    ஸௌ1னக புரந்த3ர நக3ஜா 4த4ரஜ
    முக்2யுலு ஸாக்ஷி காத3 ஸுந்த3ரேஸ1
    ஸுக2 கலஸா1ம்பு3தி4 வாஸாஸ்1ரிதுலகே (கன)
    ________________________________________


    சரணம் 8
    ஸததமு ப்ரேம பூரிதுட3கு3 த்யாக3ராஜ
    நுத முக2 ஜித குமுத3 ஹித வரத3 நின்னு (கன)
    ________________________________________


    பொருள் - சுருக்கம்
    • பொன்னாடையணிவோனே
    • இளம் பரிதியின் துலக்கமுடை நல்லாடையோனே! மணி மயமான மாலைகள் அலங்கரிக்கும் கழுத்தினனே! கமலக்கண்ணா! சிறந்த கன்னங்களோனே! திகழும் கிரீடமணிவோனே!
    • கத்தூரித் திலகம் திகழும் நெற்றியோனே! உயர் சடாயுவினுக்கு முத்திப் பயனருள்வோனே!
    • சுகத்தினுறைவிடமே! பகையெனும் நீர்முகிலுக்குப் புயலே! உடலற்றோரின் உள்ளத்துறையே! நெருங்கியோரின் கற்ப தருவே! மதிக்கப் பெற்ற பண்பு சின்னத்தோனே! சிதானந்தனே! பறவை வாகனனே! ஆழியேந்துவோனே! மிக்கு இரக்கமுடைத்தோனே! கருணை இரசக் கடலே! அச்சத்தினைப் போக்குவோனே! இரகுபதியே!
    • எழிலுக்கீசனே! சுகமாக, குடக் கடலிலுறைவோனே!
    • எவ்வமயமும், காதல் நிறைத் தியாகராசன் போற்றும், முகத்தினில் மதியினை வெல்வோனே! வரதா!
    • காணக்காண சுவையய்யா, உன்னை!
    • தினந்தினமும், எவ்வமயமும், மனதார, மனதினில், காதலுடனுன்னைக் காணக்காண சுவையய்யா;
    • பால் வடியும் முகத்தினில், செழிப்பும், அளவுகடந்த மகிமையும் ஒளிரும் உன்னைக் காணக்காண சுவையய்யா;
    • கலகலவென முகக் களையுடை சீதை, குலுக்கிக்கொண்டு, ஓரக்கண்ணினால் நோக்கும் உன்னைக் காணக்காண சுவையய்யா;
    • மாற்றாந்தாயாகிய சுருசியின், காதுகளுக்கு ஈட்டி போலும் சொற்கள், காதுகளில் சுருக்கென, (துருவன்) தாளாது, அரியினை தியானித்து சுகமடையவில்லையா?
    • வாயு மைந்தன், உனது மகிமைகளைத் தெரிவிக்க, சீதையறிந்து, ஆவலோடு, சொக்கவில்லையா?


    • அவ்விதம் உன்னைக் காணக்காண சுவையய்யா;
    • விரும்பி, காதல் மீர, கரங்களில், உனது திருவடிக் கமலங்களைப் பற்றிக்கொண்டிருப்போன் சாட்சி;
    • இராம நாமத்தினைச் சுவைப்போனாகிய கயிலாயத்துறைவோன் சாட்சி; மேலும்,
    • நாரதர், பராசரர், சுகர், சௌனகர், புரந்தரன், மலைமகள், (மற்றும்) புவியில் தோன்றிய தலைசிறந்தோர் சாட்சியன்றோ?


    • சார்ந்தோருக்கே (உன்னைக்) காணக்காண சுவையய்யா.


    ________________________________________


    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கன/ கன/ ருசிரா/ கனக/ வஸன/ நின்னு/ (கன)
    காண/ காண/ சுவையய்யா/ பொன்/ ஆடை அணிவோனே/ உன்னை/
    ________________________________________


    அனுபல்லவி
    தி3ன தி3னமுனு/ மனஸுன/ சனுவுன/ நின்னு/ (கன)
    தினந்தினமும்/ மனதினில்/ காதலுடன்/ உன்னை/ காண...
    ________________________________________


    சரணம்
    சரணம் 1
    பாலு/ காரு/ மோமுன/ ஸ்ரீ/-அபார/
    பால்/ வடியும்/ முகத்தினில்/ செழிப்பும்/ அளவுகடந்த/


    மஹிம/ தனரு/ நின்னு/ (கன)
    மகிமையும்/ ஒளிரும்/ உன்னை/ காண...
    ________________________________________


    சரணம் 2
    கல-கலமனு/ முக2/ கள/ கலிகி3ன/ ஸீத/
    கலகலவென/ முக/ களை/ உடை/ சீதை/


    குலுகுசுனு/-ஓர/ கன்னுலனு/ ஜூசு/ நின்னு/ (கன)
    குலுக்கிக்கொண்டு/ ஓர/ கண்ணினால்/ நோக்கும்/ உன்னை/ காண...
    ________________________________________


    சரணம் 3
    பா3ல/-அர்க/-ஆப4/ ஸு-சேல/ மணி/-மய/
    இளம்/ பரிதியின்/ துலக்கமுடை/ நல்லாடையோனே/ மணி/ மயமான/


    மாலா/-அலங்க்ரு2த/ கந்த4ர/
    மாலைகள்/ அலங்கரிக்கும்/ கழுத்தினனே/


    ஸரஸிஜ/-அக்ஷ/ வர/ கபோல/ ஸு-ருசிர/
    கமல/ கண்ணா/ சிறந்த/ கன்னங்களோனே/ திகழும்/


    கிரீட/ த4ர/ ஸந்ததம்பு3/ மனஸு-ஆரக3/ (கன)
    கிரீடம்/ அணிவோனே/ எவ்வமயமும்/ மனதார/ காண...
    ________________________________________


    சரணம் 4
    ஸா-பத்னி மாதயௌ/ ஸுருசி-சே/
    மாற்றாந்தாயாகிய/ சுருசியின்/


    கர்ண/ ஸூ1லமைன/ மாட/ வீனுல/
    காதுகளுக்கு/ ஈட்டி போலும்/ சொற்கள்/ காதுகளில்/


    சுருக்கு-அன/ தாளக/ ஸ்ரீ ஹரினி/ த்4யானிஞ்சி/
    சுருக்கென/ (துருவன்) தாளாது/ ஸ்ரீ அரியினை/ தியானித்து/


    ஸுகி2ம்பக3 லேதா3/-அடு/ (கன)
    சுகமடையவில்லையா/ அவ்விதம்/ காண...
    ________________________________________


    சரணம் 5
    ம்ரு2க3 மத3/ லலாம/ ஸு1ப4/ நிடில/ வர/
    கத்தூரி/ திலகம்/ திகழும்/ நெற்றியோனே/ உயர்/


    ஜடாயு/ மோக்ஷ/ ப2லத3/ பவமான/
    சடாயுவினுக்கு/ முத்தி/ பயனருள்வோனே/ வாயு/


    ஸுதுடு3/ நீது3/ மஹிம/ தெல்ப/
    மைந்தன்/ உனது/ மகிமைகளை/ தெரிவிக்க/


    ஸீத/ தெலிஸி/ வலசி/ ஸொக்க லேதா3/ ஆ ரீதி/ நின்னு/ (கன)
    சீதை/ அறிந்து/ ஆவலோடு/ சொக்கவில்லையா/ அவ்விதம்/ உன்னை/ காண...
    ________________________________________


    சரணம் 6
    ஸுக2/-ஆஸ்பத3/ விமுக2/-அம்பு3 த4ர/ பவன/
    சுகத்தின்/ உறைவிடமே/ பகையெனும்/ நீர்முகிலுக்கு/ புயலே/


    வி-தே3ஹ/ மானஸ/ விஹார/-ஆப்த/
    உடலற்றோரின்/ உள்ளத்து/ உறையே/ நெருங்கியோரின்/


    ஸுர பூ4ஜ/ மானித/ கு3ண/-அங்க/
    வானோர் (கற்ப)/ தருவே/ மதிக்கப் பெற்ற/ பண்பு/ சின்னத்தோனே/


    சித்-ஆனந்த3/ க2க3/ துரங்க3/ த்4ரு2த/ ரத2/-அங்க3/
    சிதானந்தனே/ பறவை/ வாகனனே/ ஏந்துவோனே/ (ஆழியினை) தேர்/ உருளையினை/


    பரம/ த3யா-கர/ கருணா/ ரஸ/ வருண-ஆலய/
    மிக்கு/ இரக்கமுடைத்தோனே/ கருணை/ இரச/ கடலே/


    ப4ய/-அபஹர/ ஸ்ரீ ரகு4பதே/ (கன)
    அச்சத்தினை/ போக்குவோனே/ ஸ்ரீ ரகுபதியே/
    ________________________________________


    சரணம் 7
    காமிஞ்சி/ ப்ரேம/ மீர/ கரமுல/ நீது3/
    விரும்பி/ காதல்/ மீர/ கரங்களில்/ உனது/


    பாத3/ கமலமுல/ பட்டுகொனு வாடு3/
    திருவடி/ கமலங்களை/ பற்றிக்கொண்டிருப்போன்/


    ஸாக்ஷி/ ராம/ நாம/ ரஸிகுடு3/
    சாட்சி/ இராம/ நாமத்தினை/ சுவைப்போனாகிய/


    கைலாஸ/ ஸத3னுடு3/ ஸாக்ஷி/
    கயிலாயத்து/ உறைவோன்/ சாட்சி/


    மரியு/ நாரத3/ பராஸ1ர/ ஸு1க/
    மேலும்/ நாரதர்/ பராசரர்/ சுகர்/


    ஸௌ1னக/ புரந்த3ர/ நக3ஜா/ த4ரஜ/
    சௌனகர்/ புரந்தரன்/ மலைமகள்/ (மற்றும்) புவியில் தோன்றிய/


    முக்2யுலு/ ஸாக்ஷி காத3/ ஸுந்த3ர/-ஈஸ1/
    தலைசிறந்தோர்/ சாட்சியன்றோ/ எழிலுக்கு/ ஈசனே/


    ஸுக2/ கலஸ1/-அம்பு3தி4/ வாஸ/-ஆஸ்1ரிதுலகே/ (கன)
    சுகமாக/ குட/ கடலில்/ உறைவோனே/ சார்ந்தோருக்கே/ (உன்னைக்) காண...
    ________________________________________


    சரணம் 8
    ஸததமு/ ப்ரேம/ பூரிதுட3கு3/ த்யாக3ராஜ/
    எவ்வமயமும்/ காதல்/ நிறை/ தியாகராசன்/


    நுத/ முக2/ ஜித/ குமுத3/ ஹித/ வரத3/ நின்னு/ (கன)
    போற்றும்/ முகத்தினில்/ வெல்வோனே/ குமுத/ நண்பன் (மதியினை)/ வரதா/ உன்னை/ காண...
    ________________________________________


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    ஒரு புத்தகத்தில், 8-வது சரணம் மட்டும், சரணமாகவும், மற்ற முந்தைய 7 சரணங்களும், 'ஸ்வர ஸாஹித்தியங்களாக'வும் கொடுக்கப்பட்டுள்ளது.


    சரணங்கள் சில புத்தகங்களில் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.






    மேற்கோள்கள்
    1 - பவமான ஸுதுடு3 நீது3 மஹிம தெல்ப - அனுமன் உனது மகிமைகளைத் தெரிவிக்க. -வால்மீகி ராமாயணத்தில் (சுந்தர காண்டம், அத்தியாயம் 35) அனுமன் தன்னை ராமனின் தூதன் என சீதையிடம் அறிமுகப்படுத்திக் கொள்கையில், சீதை அவனது சொற்களை உறுதிப்படுத்திக்கொள்ள, ராமனின் அடையாளங்களை விவரிக்கும்படி அனுமனை வேண்டினாள். அங்ஙனமே, அனுமன் விவரிக்க, அச்சொற்களைக் கேட்டு சீதை மிக்கு மகிழ்ந்தாள்.


    3 - த்4ரு2த ரதா2ங்க3 - ஆழியேந்துவோன் - இதனை, 'தேருருளையேந்துவோன்' என்றும் கொள்ளலாம். மகாபாரதப் போரில், (9-வது நாள் யுத்தம்)அர்ச்சுனன், பீஷ்மரை வதைக்கத் தயங்கவே, ஆத்திரம் கொண்ட கண்ணன், தேர் உருளையினைக் கையிலேந்தி பீஷ்மரை வதைக்கக் களத்திலிறங்கினான்.
    விளக்கம்
    2 - வி-தே3ஹ மானஸ - உடலற்றோர் உள்ளத்தில். வி-தே3ஹ என்ற சொல், எனக்குத் தெரிந்தவரை, மூன்று வகையில் பயன்படுத்தப்படும் (1) 'வைதே3ஹி' எனப்படும் சீதையின் தந்தைக்கு 'விதே3ஹ' மன்னன் என்று கூறப்படும் - அது இவ்விடம் பொருந்தாது. (2) உடல் துறந்தபின் (மரணத்திற்குப்பின்) பெறும் முத்தி, 'விதே3ஹ முக்தி' எனப்படும். முத்தியடைவோரின் மனம், இற்றுப் போவதனால், 'அவர்களுடைய மனத்தில் உறைபவன்' என்று கூறுவது சரியாகாது. (3) வானுறை தேவர்களுக்கு, உடலில்லாததனால், 'விதே3ஹ' என்று பெயருண்டு. எனவே 'விதே3ஹ' என்ற சொல்லுக்கு, 'வானோர்' என்று பொருள் கொள்வது பொருந்தும் என்று எண்ணுகின்றேன். அங்ஙனமே, இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.


    4 - த4ரஜ முக்2யுலு - புவியிலுதித்த தலை சிறந்தோர் - 'த4ரஜ' என்பதற்கு, 'சீதை' என்றும் பொருள் கொள்ளலாம். ஏனென்றால், சீதை, 'பூமியின் மகள்' எனப்படும். ஆனால், எப்படி, பார்வதிக்கு, 'நக2ஜா' என்று கொடுக்கப்பட்டுள்ளதோ, அங்ஙனமே, இதுவும், 'த4ரஜா' என்றிருக்கவேண்டும். அப்படி, 'சீதை' என்று பொருள் கொண்டால், 'முக்2யுலு' என்ற சொல் தனித்து நிற்கின்றது. 'த4ரஜாதி3 முக்2யுலு' என்றிருந்தால் சரியாகும். ஆனால், அப்படி இல்லாமையால், 'த4ரஜ' என்பதற்கு, 'சீதை' என்று பொருள் கொள்ளவியலாது.
    சுருசி - துருவனின் மாற்றாந்தாய்.
    சடாயு - சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டு மாண்ட கழுகு.
    நீர்முகிலுக்குப் புயல் - நீர்முகிலை விரட்டும் புயலென.
    உடலற்றோர் - வானோர்.
    கற்ப தரு - விரும்பியதருளும் வானோர் தரு.
    பண்பு சின்னத்தோன் - பண்புகளெனும் முத்திரை குத்திய.
    சிதானந்தன் - பரம்பொருளின் இலக்கணம் - சத்-சித்-ஆனந்தம் - சச்சிதானந்தம்.
    பறவை - கருடன்.
    கருணை இரசம் - 'நவரசம்' எனப்படும் ஒன்பது இரசங்களிலொன்று.
    திருவடிக் கமலங்களைப் பற்றிக்கொண்டிருப்போன் - அனுமன்.
    புரந்தரன் - இந்திரன்.
    குடக் கடல் - பாற்கடல்.
    காதல் - இறைவனிடம் கொள்ளும் 'பிரேமை' எனும் பெருங்காதல்.
Working...
X