107 தெருவினில்


தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ் சலித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே.

-107 திருவேரகம்

பதம் பிரித்தல்


தெருவினில் நடவா மடவார்
திரண்டு ஒறுக்கும் வசையாலே


தெருவினில் நடவா= தெருவில் நடக்கும். மடவார்= மாதர்கள்திரண்டு = ஒன்று கூடி. ஒறுக்கும் = கடிந்து பேசும். வசை யாலே =பழிப்புச் சொல்லாலும்.


தினகரன் என வேலையிலே
சிவந்து உதிக்கும் மதியாலே


தினகரன் எனவே=சூரியன் என்று சொல்லும்படி வேலையிலே = கடலில் சிவந்து = சிவந்தநிறத்துடன் உதிக்கும் = உதிக்கின்றமதியாலே = நிலவாலும்.


பொரு சிலை வளையா இளையா
மதன் தொடுக்கும் கணையாலே


பொரு சிலை = சண்டை செய்ய வல்ல வில்லை வளையா =வளைத்து இளையா = சோர்வு இல்லாத மதன் = மன்மதன்தொடுக்கும் = செலுத்துகின்ற. கணையாலே = மலர்ப் பாணத்தாலும்.


புளகித முலையாள் அலையா
மனம் சலித்தும் விடலாமோ


புளகித = புளகாங்கிதம் கொள்ளும். முலையாள் = கொங் கையை உடைய (இப்பெண்) அலையா = வருந்தி மனம் சலித்தும் விடலாமோ = மனம் சோர்வு அடையலாமோ?


ஒரு மலை இரு கூறு எழவே
உரம் புகுத்தும் வடிவேலா


ஒரு மலை = ஒப்பற்ற (கிரௌஞ்ச) மலை இரு கூறு எழவே =இரண்டு கூறுபட உரம் புகுத்தும் = (அதன்) வலிமையானபக்கத்தில் புகவிட்ட. வடிவேலா = கூரிய வேலை ஏந்தியவனே


ஒளி வளர் திருவேரகமே
உகந்து நிற்கும் முருகோனே


ஒளி வளர் = புகழ் மிகுந்து ஓங்கும் திருவேரகமே உகந்து = திரு வேரகத்தில் மகிழ்ச்சியுடன். நிற்கும் = வீற்றிருக்கும்.முருகோனே = முருகனே.


அரு மறை தமிழ் நூல் அடைவே
தெரிந்து உரைக்கும் புலவோனே


அரு மறை = அரு மறையான வேதப் பொருளை தமிழ் நூல் அடைவே = தமிழ் நூல் முறையில் தெரிந்து உரைக்கும் =உணர்ந்து உரைத்த புலவனே = தமிழ்ப் புலவனே.


அரி அரி பிரமாதியர் கால்
விலங்கு அவிழ்க்கும் பெருமாளே.


அரி = இந்திரன் அரி = திருமால் பிரமாதியர் = பிரமன் முதலா னோர் கால் விலங்கு = காலில் இடப்பட்ட விலங்கை அவிழ்க்கும் பெருமாளே = அவிழ்த்து உதவிய பெருமாளே.


அருமறை தமிழ்நூலடைவே...
இது இருக்க வேத சாரமாக முருகவேளின் கூறான சம்பந்தர் அருளிய தேவாரப் பாக்களைக் குறிக்கும்.


தென்னூல் சிவபத்தி
ருக்கு ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே) ...கந்தர் அந்தாதி


வேல், சுவாமிமலை, வேதம், சம்பந்தர், திருமால் பிரமன் ஏரகம்


ஞானசம்பந்தர்


திருஞான சம்பந்தர் சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகபிப் பிறந்தார். 3-ம் ஆண்டில் உமையம்மையாரின் ஞனப்பால் உண்டு, பதிகள்தோறும் தோறும் சென்று பதிகம்பாடி, சைவ எழுச்சியூட்டி, திருமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுள்சென்று இறைவனுடன் கலந்தவர்.


இவர் திருநாவுக்கரசரரின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர். திருநீல கண்ட யாழ்ப்பாணர் இவரோடுசென்று இவருடை பாடல்களை எல்லாம் யாழ் இசைத்தார். ஒரு முறையாவது யாழாலும் இசைக்ககமுடியாத பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினார். இதை உணர்ந்த திரு நீலகண்ட யாழ்பாணர்தனது யாழை முறிக்க முயன்ற போது இதைக் கண்ட சம்பந்தர் அதைத் தடுத்து யாழ்ப்பாணருக்குஆறுதல் மொழி கூறினாராம். அன்றில் இருந்து இதை யாழ்முறிப்பண் என்பார்களாம். ஆனால்தற்சமயம் சிலர் நீலாம்பரி" என்பர், சிலர் அடாணா" என்பர்.


சம்பந்தர் 16.000 பாடல்களைப் பாடினதாக வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று நமக்கு கிடைதிருப்பதோ 4181 பாடல்களே..

இவை இனிய ஓசைகளுடன் கூடிய இசைப்பாக்கள் ஆகும். யமகம். திரிபு, மொழிமாற்று, அடிமாற்றுஎனச் சொல்லணிகள் இப்பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும்,திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பலவகை. எல்லாப்பாக்களும் இனிய, எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ளன. சோழநாட்டில் சைவசமையத்தை உறுதி பெறச்செய்து பாண்டிய நாட்டை சமணர் படியில் இருந்து மீட்டபெருமையும் சப்பந்தரையே சாரும். திருமுருகனின் அவதாரம் என்று அருணகிரி சுவாமிகள் பல இடங்களில் கூறியிருக்கிறார்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை அடங்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும்தாழ்ந்ததையும் கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். பதிய இறுதியில் தன்பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் புகுத்தியுள்ளார்.