ஆவணி மாத விரதங்கள்.


ஸூர்ய சஷ்டி--குமார தரிசனம். 27-08-2017. ஞாயிறு.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ சஷ்டி திதியில் காலை சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு கிழக்கு பார்த்து


உட்கார்ந்து ஸூர்ய நமஸ்காரம், ஸூர்ய கவசம், ஸூர்ய ஹ்ருதயம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் , ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும். ஸூர்யன் நமஸ்கார ப்ரியர். முடிந்த அளவு நமஸ்காரங்கள் செய்யவும்.


. அசுவமேத யாகம் செய்த பலனை விட அதிக மாக கிடைக்கும் என்கிறது தர்ம ஸிந்து என்னும் நூல் 64ம் பக்கம். ""சுக்லே பாத்ரபதே சஷ்டியாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் பஞ்ச கவ்யம் ச அசுவமேத பலாதிகம்"


மாலை குமரன் இருக்கும் ஆலயம் சென்று முருகனையும் வழிபடலாம் சஷ்டி திதியாகையால் .


அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் மருந்து கடையில் பஞ்சகவ்யம் பாட்டிலில் கிடைக்கிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends