Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    109.நாவேறு
    நாவேறு பாம ணத்த பாதார மேநி னைந்து
    நாலாறு நாலு பற்று வகையான
    நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
    நாடோறு நானு ரைத்த நெறியாக
    நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
    நேராக வாழ்வ தற்கு னருள்கூர
    நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
    நீகாணெ ணாவ னைச்சொ லருள்வாயே
    சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
    சீராக வேயு ரைத்த குருநாதா
    தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
    தீராகு காகு றத்தி மணவாளா
    காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
    காவார்சு வாமி வெற்பின் முருகோனே
    கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
    காமாரி வாழி பெற்ற பெருமாளே



    -109 திருவேரகம்



    பதம் பிரித்தல்


    நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து
    நால் ஆறு நாலு பற்று(ம்) வகையான


    நா ஏறு = (சிறந்த அன்பர்களின்) நாவில் ஊறிய பா =பாடல்களின் மணத்த = மணம் வீசுகின்ற பாதாரமே = திருவடித் தாமரையையே நினைத்து = தியானம் செய்து. நாலாறு நாலும் பற்று = இருபத்து நான்கும் ஒரு நாலும் கூடிய வகையான =வகையானவையும்.


    நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி
    நாள் தோறும் நான் உரைத்த நெறியாக
    நாலு ஆரும் = (சரியை, கிரியை. யோகம், ஞானம் என்னும்) நாலு பாதங்கள் பொருந்தினவையுமாயுள்ள ஆகமத்தின் நூல் ஆய = ஆகம நூல்களில் கூறப்பட்ட. ஞான முத்தி = ஞான முத்தி நெறியே நாள் தோறும் = தினமும் நான் உரைத்த நெறியாக =நான் அனுட்டிக்கும் நெறியாகவும்.


    நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க
    நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர


    நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க = நீ வேறு நான் வேறு என்னும் பிரிவு இல்லாது (சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று பட்ட நிலையில்). நேராக வாழ்வதற்கு = நேர் பட்டு வாழ்வதற்கு. உன் அருள் கூர = உனது திருவருள் பெருகி மிக.


    நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை
    நீ காண் எனா அனை சொல் அருள்வாயே


    நீடு ஆர் = பரந்துள்ள. ஷட் ஆதாரத்தின் = ஆறு ஆதார நிலைகளின் மீதே = மேற்பட்ட நிலையில். பராபரத்தை =பராபரப் பொருளை நீ காண் எனா = நீ காண்பாயாக என்றஅனைச் சொல் = அந்த (ஐக்கிய) வசனத்தை அருள்வாயே = (உபதேசித்து) அருள்வாயாக.


    சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி
    சீராகவே உரைத்த குரு நாதா


    சே ஏறும் ஈசர் = இடபத்தின் மேல் ஏறும் சிவபெருமான் சுற்ற =வலம் வந்து நிற்க மா = சிறந்த ஞான போத புத்தி = ஞான அறிவு உபதேசத்தை சீர் ஆகவே = செம்மையாகவே உரைத்த குரு நாதா = சொன்ன குரு நாதரே.


    தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
    தீரா குகா குறத்தி மணவாளா


    தேரார்கள் = பகைவர்களின் நாடு சுட்ட சூரர்கள் = நாடுகளைச் சுட்டழித்த சூரர்களை மாள வெட்டு = இறக்கும்படி வெட்டியதீரா = தீரனே குகா = குகனே. குறத்தி மணவாளா = குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே.


    காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த
    கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே


    காவேரி நேர் வடக்கில் = காவேரி ஆற்றின் நேர் வடக்கு திசையில். வாவி பூ மணத்த = குளங்களில் உள்ள மலர்களின் மணம் வீசும். கா = சோலைகள் வார் = நிறைந்த சுவாமி வெற்பின் முருகோனே = சுவாமி மலை முருகனே.


    கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி
    காம ஆரி வாமி பெற்ற பெருமாளே.


    கார் போலும் மேனி பெற்ற = மேகம் போல் கறுத்த உடலைக் கொண்ட மா காளி = பெருமை வாய்ந்த காளி. வாலை = பாலப் பருவத்தினள் சத்தி = சத்தி காம ஆரி = காமனை எரித்தவள் வாமி = சிவபெருமானின் இடப் பக்கத்தில் இருப்பவள் (ஆகிய பார்வதி) பெற்ற பெருமாளே = ஈன்ற பெருமாளே.







    விரிவுரை குகஸ்ரீ ரசபதி


    சிவ தர்மத்தை சிறக்க விளக்கும் தர்ம விடை, மறநெறி கடியும் மால் விடை, நல்ஞானம் போதிக்கும் நந்தி விடை. சிவ சிவையை காட்டி அருளும் சோம விடை, வாழ வழி வைக்கும் அருமை மிக்க ஆன்ம விடை ஆகிய இந்த ஐந்து வகை விடைகளையும் நயம்படுத்தி நடத்தும் நம்பர், எச்செல்வத்திற்கும் இறைவர் ஆதலின் அவர் சே ஏறும் ஈசர் எனப் பெறுகிறார். ( ஈசர் = சர்வ ஐஸ்வர்ய சம்பனர் )மற்று எத்தேவர்களும் தோன்றுவர், இருப்பர், மறைந்து தொலைவர். சிவபெருமானோ என்றும் வைரம் ஏறி இருப்பவர். அதனால் சேவு என்பதும் ஒருவகை. பஞ்சாட்சர பரம்பரை பிரணவப் பரம்பரையில் அடங்கும். அடைக் காட்டுவதற்கு சே ஏறும் ஈசர் வரத முருகனை வலம் வந்தார். வலம் வந்த அவருக்கு மா ஞான போதத்தை மதியும் கதியும் இருமையில் தோன்ற அருளினை. அந்த அருமையை, புத்தி சீராகவே உரைத்தவா எனப் போற்றுவதற்கு, - இறந்திட்டுப் பெறவே கதியாயினும் இருந்திட்டுப் பெறவே மதியாயினும் இரண்டில் தக்கதோர் ஊதியம் நீ தர இசைவாயே - என்றும் அடியேன் முன்னொரு சமயம் வேண்டியுளன்.
    ஓசை, ஒளி, தொனி, சத்தம் முதலியகட்கு மூலகாரணன் நீ. அதனால் குருநாதா என்று கூறுகிறேன். பிரகஸ்பதி சுக்ரன், திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் ஒவ்வொரு கால குருவாயினர். அவர்கட்கெல்லாம் நாதன் நீ. அதையும் எண்ணி குருநாதா என்று கூறுகிறேன்.அறியாமை இருள் அகற்றும் மெய்ஞாஞ முதலே எனும் பொருளிலும் குருநாதா என்று குறிப்பிடுவதும் தகுதி தான்.
    திருமால் அர்ச்சுனனுக்கு போரில் புத்தி உண்டாகப் போதித்தார். புனித மதியும் கதியும் புலனாக சிவத்திற்கு நீ போதித்தாய். குருநாதா எனும் பெயர் உனக்கே உரியது என்று இப்படியெல்லாம் குதுகலிப்பரே.
    தெளிவு மிக்க தேவர்கள் சில காலம் வரை தேரார் ஆயினர் ( தேரார் = தெளிவு இல்லாதவர்). அதனால் போகமதிலேயே புத்தி செலுத்தினர், பதியை மறந்தனர்,மதியை இழந்தனர், தக்கன் வேள்வியில் கலந்தனர், தடியடி பட்டனர்,108 யுகம் வரை சிறை வாசம் ஆயினர். இது கிருத யுகச் செய்தி. தெளிவு இழந்த தேவர்களின் தீவினை அவர்களிலும் அவர்கள் உலகங்களிலும் நீடித்ததாய் நிறைந்தது. அவர்களில் தங்கிய தீவினை அசுரர் தண்டத்தால் அழிந்தது. பொன்னாட்டில் தங்கிய தீவினை பானுகோபன் அவ்வுலகை பொசுக்கியதோடு பொன்றியது. அவ்வளவுதானா?? மறுமை தேரும் மறைந்தது. வானவரும் ஒளி மல்கி போயினர். அந்நிலையில் தெய்வ முருகா நீ அவதரித்தாய். அப்போதும் அமரர்கட்கு நீயே பரம் என அறிய முடியவில்லை.
    எம்பிரானே, இமயவரே உன்னை எதிர்த்தனர். அசுரர் தண்டம் பெற்றிருக்கும் அவர்களை நீ வேறு தண்டம் செய்தாய். சத்யமே சாரமான உன் கணைகளால் தேவர்கள் சிறிது தெளிந்தனர். காணுமாறு அவர்கட்கு நீ விஸ்வரூபம் காட்டினை. மகிழ்ந்து வானவர் உன்னை அபிஷேகித்து ஆராதித்தனர். இவ்வளவு நிகழ்ந்தும் தெளிவு பெறாத நான்முகனைக் குட்டி சிறையிட்டனை. பிறகு பிரமனை விடுதலை செய் என்று சிவனாருக்கு சிறந்த பிரணவ உபதேசம் செய்தாய். சிவத்திற்கு நீ செய்த உபதேசத்தின் மூலம் மா பெரும் உலகின் உறவு மலர்ந்தது.
    விண்ணவர்களுக்கு விடுதலை தா என்று மும்மல அரிசாதி தோஷங்களே நிறைந்த அசுர நாட்டிற்கு தூது போக்கினை. மாட்டுப் புத்தி அடைத்த அவுணர்கள் அதை மறுத்தனர். உடனே சத்தர்ம உயிர்களின் விடுதலை கருதி நிமிர்ந்து நோக்கினை. அவ்வளவில் அசுர சாம்ராஜ்யம் அழிந்தது. அசுர சாம்ராஜ்யத்தில் குனிவாரே அன்றி நிமிர்வார் இல்லை. இனி பெரும் தைரியமாக நிமிர்ந்து நடக்கலாம் அல்லவா. இவ்வளவும் எண்ணி, தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள எட்டு தீரா என்றேன். ( எட்டுதல் - நிமிர்தல் ) மாள வெட்டு தீரா எனப் பொருள் சொல்வதும் ஒருவகை.
    எண்ணும் அன்பர் இதய குகையில் வீற்றிருக்கும் உன்னை குகா என்று கூவி அழைக்கிறேன். உலகை மறந்து உறவு துறந்து தன்னையே அர்ப்பணிப்பாரைத் தழுவுவான் என்பதை உலகம் உணர குறுமை குல வள்ளியளரை திருத்தி மணந்த உன்னை குறத்தி மணவாளா எனக் கூவுகிறேன்.
    வற்றாத ஜீவ நதி காவேரி. அதன் நேர் வடக்கில் பொய்கைகளும் மணம் கமழ் சோலைகளும் நிறைந்த இடத்தது சுவாமி மலை. சுவாமி மலை சுவாமி என உலகம் கூறும் சுவாமி, அங்குள்ள இனிய செய்குன்றின் மேல் இளம் பூரணனாக என்றும் இருக்கின்றாய். நீர்மையும் மாசற்ற மணமும் குறிஞ்சியும் நிறைந்த குறிஞ்சி நிலம் குமரன் உகந்த நிலம் எனக் குறிக்கின்றனர் மேலோர்.
    காளி - கோர உருவினள், வாலை - இளம் மேனியள், சக்தி - பேராற்றல் எங்குமான பிராட்டி, காமாரி வாமி - காமம் இல்லாதாள், பற்றிலாத பரமேஸ்வரி இப்படி எல்லாம் பல கோலம் காட்டி பக்குவிகட்கு அருளம் பரசிவை அருளும் பாலா,பெருமையில் சிறந்த பெரியோன் நீ. ஆதலின் பெருமாளே என்று பேச நேரும் போதெல்லாம் கூவி பேசுகிறேன்.
    பக்தர்கள் அன்போடு பாடுகின்றார். பாட்டில் உள்ள சொல்லும் பொருளும் சுவையாகும். பாட்டின் ஒலி அலைகள் சுவை பெறும் செதியை சுமந்து செல்லும் பயனாக எழுந்த பரசுவை பரமன் தாளை சென்று பற்றும். சமதக் குரவர் தம் பாடல்களை சிவ மூல தலமான சிதம்பர சன்னிதியில் தங்கின. அதை பிற்காலத்தில் எடுத்துத் தந்தவர் நம்பியாண்டார் நம்பிகள்.
    கற்கிமுகி பூதத்தால் சிறைப்பட்ட நக்கீரர் விடுதலை விரும்பினார். திருமுருகாற்றுப் படை பாடினார். அப்பாடலின் சொல்லும் பொருளுமான சுவை மணம் உன் திருப் பாதங்களில் அர்ச்சனை மலர்களாய் மலர்ந்தன. அந்த நேரத்தில் குமரா,வள்ளியாரின் கரும்பும், அமுதும் , தேனும் கலந்த கொஞ்சும் மொழிகளைக் கேட்டு இன்புற்று இருமாந்து பீடத்தின் பின் சாய்ந்து இருந்தாய். திருவடிகரில் வந்து சேரும் திருமுருகாற்றுப்படையின் அருமையும், மணமும், கலையும் அறிந்தாய். பின் சாய்ந்த நிலை மாறி முன் சாய்ந்தாய். செவி தாழ்த்திக் கேட்டாய். இன்ப சிலுப்பை எய்தினாய். உடனே வேலை ஏவி வித்தக நக்கீரருக்கு விடுதலை தந்தாய். இங்ஙனம் குதுகுலத்தோடு புராணம் கூறுவதை அறிந்துளம்.
    பரிபூரணா என்று திருவடிகளில் மறை மொழிகள் தோய்ந்து மணம் வீசுகின்றன. அருள் நிலையத்தில் அன்பு மணம். சபாஸ், இந்த அருமையை எண்ணித்தான் எங்கும் பாராயணங்கள் எழுந்தன. அன்பர் நாவிலிருந்து மேலே ஏறி வருகிற பா மணம் கொண்டது உன் பாதாரவிந்தம்.
    பூ மணம் சில நேரங்களில் வாடும். பா மணம் என்றும் நீடித்து இருக்கும். அன்று முதல் இன்று வரை இருக்கும். திருப்புகழ் தேவாரங்களே இதற்குச் சான்று. நா ஏறு பா மணத்த பாதரமே நினைத்து என ஓதும் போதே சுத்த உமிழ் நீர் சுரக்கின்றதே. ஓம். பாதார விந்தம் என்பது பாதரம் என கடை குறைந்தது. ஓசை மிகுவது கூடாது அல்லவா. அதனுடன் ஓதி வரும் போது உமஉழ் நீர் சுரந்ததும் ஒரு காரணம்.
    தெய்வ மணம் மணக்கும் திருவடிகளே தியானிக்கத் தக்கவை. அதனால் தான் பாதாரமே நினைத்து எனப் பாடுகிறோன். நின்னை நினைக்கும் நெஞ்சில் சேறு வேறு சேரலாமா? ஆதலின் வேறு சிந்தனையின்றி பாதாரமே நினைத்து என்கிறேன். பாராயணம் முதலில், அது வாக்குப் பணி. திருவடி தியானம் இதய பணி. காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருக்கும் 28 ஆகமங்கள். அவைகள் சரியை,கிரியை, யோகம, தவம் ஆகிய அரிய பகுதிகளை விரிவாக அறிவிக்கின்றன. இந்த நூல்கள் குறிப்பிடும் முறைகளை நாள்தோறும் அடியேன்அனுஷ்டிக்குமாறு அருள் செய்.
    உனக்கு அயலாக நான் இருக்கும் வரை வேதனை அனுபவங்களே விளையும். ஊன்றி இவைளை உணர்ந்தேன். கருடனை உபாசித்தவர் தன்னை கருடனாகவே காண்பர். பாம்பு கடி பட்டவர் கருட உபாசகரால் பலன் அடைவர். அது போல் நான் கெட்டு சிவமாக சிவம் நான் என்று பாவிக்கும் சிவோக பாவனையை அருளிச் செய். மும்மல மோசம் இல்லாமல் , காமக்ரோததிதிகள் இல்லாமல் வாழ்வதே நேரான வாழ்வு . அந்த வாழ்வு அடிதேனுக்கு நேர, அப்பா, அத்தா,உயர்ந்த திருவருள் மிகுதியாக உதவு.
    அருணகிரி, இப்படி வா , அங்கே இங்கே பார்க்காதே. இதோ பார் மூலாதாரம்,அதன் மேலே சுவாதிஷ்டானத்தைப் பார். அதற்கு மேலே மணிபூரகம் இருக்கிறதா பார் பார்.
    அதன் மேலே அநாகதம், விசுக்தி, சிர அதன் மேல் ஆக்ஞை எந்திரம் தெரிகிறதா??????? சரி அதற்கு மேலே பார் அது தான் பிரம்ம ரந்திரம்.
    ஓன்றும் தெரியவில்லையே .
    அஹஹஹா
    பாருடா நன்றாகப் பார். உணர்வு ஊற்றெடுக்கும் உள்ளக் கண்ணால் பார். நூல்கள் சொல் பிரபஞ்சம் எனும் சொல்லைப் பெறும் 96 , தத்துவங்களும் பொருள் பிரபஞ்சம் எனப்பெறும்.இவைகளின் உறவால் வரும் ஞானம் அபரஞானம். நூலை ஆய்வு செய்து விரிவாக தத்துவ விசாரணை செய்தால் வளரும் வழிமுறையை அறியலாம். வழிமுறை அறிந்த பின் சும்மா இரு சும்மா இரு என்கிற நாதம் பிறக்கும் அந்த நாதத்தில் லயம் கொண்டு சும்மா இருந்தால் பழுத்த ஞானம் ஆன்மாவில் படரும். அந்த ஞானமே பரஞானம் எனப்படும்.


    பரஞானம் பலித்ததும் அந்தப் பரமும் அபரமும் ஆன பராபரம் இன்பம் தந்து உன்னை எடுக்கும். தன்னில் இனைக்கும். அப்படி அருளும் அந்த பராபரத்தை நீ பார் பார் என்னும் அந்த உபதேச அறிப்பை அடியேற்லு அருள்.
    அன்ன சொல் என்பது அனைச் சொல் என்றாயிற்று. மற்றும் தாய் மொழி போன்று ஒரு மொழி உபதேசம் எனினுமாம்.



    [div5]கருத்து


    முதன்மை சிவத்தின் மூலம் உலகிற்கு மதியும் கதியும் குறிப்பில் தோன்றச் செய்த குருநாதன் அல்லவா அசுர ஆட்சியை அழித்தவன் அல்லவா இதய குகையில் இருப்பவன் அல்லவா! உன் விஷயத்தில் உயிர்கட்கு வேட்கைகளை விளைவிக்கும் இச்சா சக்தியை மணந்தவன் அல்லவா சுவாமி மலை எனும் சாந்திநிகேதனைச் சார்ந்தவன் அல்லவா கோமலையான பராசக்தியின் குமாரன் அல்லவா அருள் மனத்தவன் அல்லவா!
    நீயே பெரிய பொருள் ஆயிற்றே வேண்டுகிறேன் பிரபோ, கேள், உனது பா மணம் கமழும் பாதக கமலங்களையே தியானிக்க அருள். அருள் நூட்கள் உரைத்ததை அனுபவிக்க அருள். சிவோக பாவனை சிறக்க அருள். ஆதாரங்களுக்கு மேலான பராபரத்தை நீ காண் காண் என்று காட்டி அருள், பிரபோ, நீ காட்டினால் அன்றி அடியேன் காண முடியுமா ????? குமரா, குகா, காணுகாறு அடியேற்கு காட்டி அருள் என்று கதறிய படி[div5]


    விளக்கக் குறிப்புகள்
    அ. ஷடாதரத்தின் மீதே பரபரத்தை...
    இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு.
    நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் பூரகம் என்றும், வெளிவிடும் காற்றுக்கு இரேசகம் என்றும் பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ஆதாரங்கள் (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி மேல் நோக்கிச் சென்று, தலையில் பிரம கபாலத்தில் உள்ள ஸஹஸ்ராரம் (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங் களுக்கும் ஊட்டப்பட்டுத், திரும்ப அதே வழியில் மூலாதாரத்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஓழுங்கு படுத்தும் வகையில் மூன்று மண்டலங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து நாடிகளும் (இடைக்கலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.


    சுவாச நடப்பை யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். இந்த
    ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும் போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள்,கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


    1. மூலாதாரம்...இடம் (இ) = மூலம் (குதம்). பூதம் (பூ) = மண். மலர் வடிவம் =
    குண்டலி வட்டம், அதன் உள்ளே முக்கோணம். நான்கு இதழ் கமலம். அக்ஷரக் குறிப்பு
    (கு) = ஓங்காரம். தலம் (த) = திருவாரூர். கடவுள் (க) = விநாயகர்.


    2. சுவாதிட்டானம்...(இ) = கொப்பூழ். (பூ) = அக்கினி. மலர் வடிவம் = நாற் சதுரம்,
    அதன் மத்தியில் லிங்க பீடம். ஆறு இதழ் கலமம். (கு) = நகரம். (த) =
    திருவானைக்கா. (க) = பிரமன்.


    3. மணிபூரகம்...(இ) = மேல் வயிறு. (பூ) = நீர். மலர் வடிவம் = பத்து இதழ் கமலம்.
    பெட்டியில் பாம்பு. நடுவில் வட்டம். (கு) = மகரம். (த) = அண்ணாமலை. (க) =
    திருமால்.
Working...
X