113 திருஎழுகூற்றிருக்கை


ஓருருவாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரின் ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஓருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை


ஒருநாள் உமைஇரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழுதரு மழகுடன் கழுமலத் துதித்தனை


அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.

பதம் பிரித்து உரை


ஓர் உருவாகிய தாரக பிரமத்து
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபு எய்தி


ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை


ஓராச் செய்கையின் இருமையின் முன் நாள்
நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இரு தாள் வேண்ட
ஒரு சிறை விடுத்தனை


ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம் செய்தனை
நால் வகை மருப்பின் மும்மதத்து இரு செவி
ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினில் இரு வகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால் வாய் முகத்தோன் ஐந்து கைக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை


ஐந்து எழுத்து அதனில் நான் மறை உணர்த்தும்
முக்கண் சுடரினை இரு வினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை


ஒரு நாள் உமை தரு இரு முலைப் பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நால் கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறு முகன் இவன் என
எழு தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை


அறு மீன் பயந்தனை ஐந் தரு வேந்தன்
நான் மறைத் தோற்றத்து முத்தலை செம் சூட்டு
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை


காவிரி வட கரை மேவிய குரு கிரி இருந்த
ஆறு எழுத்து அந்தணர் அடி இணை
ஏரகத்து இறைவன் என இருந்தனையே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பொருள்


வரிசை 1


வரிசை 1
ஓருருவாகிய தாரகப் பிரமத்
ஓர் உருவாகிய = ஒரு பொருளாகிய ( ப்ரம்ம ஸ்வரூபமாம் பெருருவ
மாகிய ஓர் உருக் கொண்ட)
தாரக = பிரணவமாகிய.
பிரமத்து = முழு முதற் பொருளில்.


வரிசை 2 எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,1
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபெய்தி ஒன்றாய்
1 = ஒரு வகைத் தோற்றத்து
ஒரு வகைத் தோற்ற = ஒரு வகையான உதயத்தில்
2 = இரு மரபெய்தி
இரு மரபு எய்தி = சக்தி, சிவம் என்னும் இரண்டின் ஸம்ப்ரதயாத்தில்
( வழியில்)
1 = ஒன்றாய்
ஒன்றாய் = ஒரே வடிவாமாக


வரிசை 3 எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,2,1
ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை இரு பிறப்பாளரில் ஒருவன் ஆயினை


1 = ஒன்றி
ஒன்றி = அமைவுற்று (பொருந்தி)


2 = இருவரில் தோன்றி
இருவரில் தோன்றி = அந்தச் சத்தி-சிவம் எனப்படும் இருவராலும்
உண்டாகி
3 = மூவாது ஆயினை
மூவாது ஆயினை = மூப்பு இல்லாத இளையவனாக விளங்குகின்ற
வன் ஆனாய்

2 = இரு பிறப்பாளர்
இரு பிறப்பாளரின் = இரு பிறப்பாளர் என்னப்படும் அந்தணர்
மரபில்
1 = ஒருவன் ஆயினை
ஓருவன் ஆயினை = ஒப்பற்றவனாகத் திகழ்ந்தாய்


வரிசை 4 எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,3,2,1
ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள் நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை


1 = ஓராச் செய்கையின்
ஓரா = (பிரணவத்தின் பொருளை) அறியாமல்.
செய்கையின் = (பிரமன்) விழித்தக் காரணத்தால்


2 = இருமையின்
இருமையின் = பெருமையுடன்
3 = முன்னாள்
முன்னாள் = முன்பு ஒரு நாள்
4 = நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
நான் முகன் = பிரமனுடைய.
குடுமி = குடுமியை
இமைப்பினில் = இமைப் பொழுதில்
பெயர்த்து = கலையச் செய்து
3 = மூவரும் போந்து
மூவரும் போந்து = சிவன், விஷ்ணு, இந்திரன் ஆகிய மூவரும்
(உன்னிடம் வந்து
2 = இரு தாள் வேண்ட
இரு தாள் வேண்ட = உனது இரண்டு திருவடிகளைப் பணிந்து
முறையிட்டு வேண்ட.
1 = ஒரு சிறை விடுத்தனை
ஒரு சிறை விடுத்தனை = (நீ இட்ட) சிறையினின்றும் அந்தப்
பிரமனை விடுவித்தாய்.


வரிசை 5
எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,5,4,3,2,1
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர்
உடுத்த நானிலம் மும்மதத்து இரு செவி ஒரு கைப்
பொருப்பன் மகளை வேட்டனை


1 = ஒரு நொடி அதனில்
ஒரு நொடி அதனில் = ஒரு நொடிப் பொழுதில்


2 = இரு சிறை மயிலின்
இரு சிறை மயிலில் = இரு பெரிய சிறகுகளை உடைய
மயில் மீது ஏறி.

3 = முந்நீர் உடுத்த
முந்நீர் உடுத்த = (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் மூன்றும் கலக்கும்) கடலை ஆடையாக உடுத்துள்ள


4 = நானிலம் அஞ்ச
நானிலம் அஞ்ச = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
எனப்படும் நால் வகைத்தான பூமி
5 = அஞ்ச நீ வலம் செய்தனை
அஞ்ச நீ வலம் செய்தனை = பயப்படும்படி நீ அதை வலம் வந்தாய்
4 = நால் வகை மருப்பின
நால் வகை மருப்பின் = நான்கு வகைத் தந்தங்களையும
3 = மும்மதத்து
மும்மதத்து = கர்ண, கபோல, பீஜ மதங்கள் என்னும் மூன்று
வகை மதங்களையும்
2 = இரு செவி
இரு செவி = இரண்டு காதுகளையும்
1 = ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு கை = ஒப்பற்ற துதிக்கை ஒன்றையும் கொண்ட
பொருப்பன் = மலை போன்ற ஐராவதத்தை உடைய
இந்திரனுடைய
மகளை = மகளாகிய தேவசேனையை
வேட்டனை = மணம் செய்து கொண்டாய்


To be continued