Announcement

Collapse
No announcement yet.

monkeys

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • monkeys

    ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
    பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
    ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
    குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
    குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
    ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
    வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
    ''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
    தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...


    இந்தக் கதைக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் எந்த சம்பந்தமில்லை,


    நான் ஒரு கதையை உங்களுக்கு பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்..

    source e-mail as received

  • #2
    Re: monkeys

    கதை ரொம்ப நல்லா இருக்கு.தோட்டக்காரன் செய்த தப்பு குரங்கு கூட நட்பு வைத்ததுதான்

    Comment

    Working...
    X