Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    115.அரகர சிவன்
    அரகர சிவனரி அயனிவர் பரவிமு
    னறுமுக சரவண பவனேயென்
    றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
    அனலென எழவிடு மதிவீரா
    பரிபுர கமலம தடியிணை யடியவர்
    உளமதி லுறவருள் முருகேசா
    பகவதி வரைமகள் உமைதர வருகுக
    பரமன திருசெவி களிகூர
    உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
    உரைதரு குருபர வுயர்வாய
    உலகம னலகில வுயிர்களு மிமையவ
    ரவர்களு முறுவர முநிவோரும்
    பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
    பணிதிகழ் தணிகையி லுறைவோனே
    பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
    மிருபுடை யுறவரு பெருமாளே

    -115 திருத்தணிகை


    பதம் பிரித்து உரை
    அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன்
    அறு முக சரவணபவ என்று


    அரகர சிவன் = அரகர என்னும் அருமைச் சொல்லுக்கு உரிய சிவபெருமானும் அரி, அயன் = திருமாலும், பிரமனும் இவர் =ஆகிய இம் மூவர் பரவி = போற்றி முன் = உனது முன்னிலையில் அறு முக சரவண பவனே என்று = ஆறுமுகனே, சரவணபவனே என்று.


    அநுதின(ம்) மொழி தர அசுரர்கள் கெட அயில்
    அனல் என எழ விடும் அதி வீரா


    அநுதினம் = நாள் தோறும் மொழிதர = துதிக்க அசுரர்கள்
    கெட = அசுரர்கள் அழியும்படி அயில் = வேலாயுதத்தை
    அனல் என = நெருப்பு போல் எழ விடும் அதி தீரா = செல்ல விட்டசிறந்த வீரனே.


    பரிபுர கமலம் அது அடி இணை அடியவர்
    உளம் அதில் உற அருள் முருகேசா


    பரிபுரம் = சிலம்புகள் அணிந்த. கமல அடி இணை = தாமரை போன்ற இரண்டு திருவடிகளை. அடியவர் =அடியாருடைய. உளம் அதில் உற = உள்ளத்தில்பொருந்தும்படி. அருள் முருகேசா = அருளும் முருகேசனே.


    பகவதி வரை மகள் உமை தர வரு குக
    பரமனது இரு செவி களிகூர


    பகவதி = பகவதி வரை மகள் = இமவான் மகள் பார்வதிஉமை = உமா தேவி. தர = அருள வரு குக = வந்த குகனேபரமனது = பரசிவனுடைய இரு செவி = இரண்டுகாதுகளிலும் களி கூர = மகிழச்சி கொள்ள.


    உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை
    உரை தரு குருபர உயர்வாய


    உரை செயும் = (யாவராலும்) போற்றப்படும் ஒரு மொழி =ஒப்பற்ற மொழியான பிரணவ முடிவதை = பிரணவ மந்திரத்தின் முடிவுப் பொருளை உரை தரு = எடுத்துரைத்த. குருபர = குருபர மூர்த்தியே. உயர்வாய = சிறப்புப் பொருந்திய.


    உலக மன் அலகில உயிர்களும் இமையவர்
    அவர்களும் உறுவர முநிவோரும்


    உலகம் மன் = உலகத்திலுள்ள அலகில = கணக்கற்ற உயிர்களும் = உயிர்களும் இமையவர் அவர்களும் = தேவர்களும் உறுவர = (நாம் முன்பு சென்று வழிபடுவதற்கு இல்லையே என்று)முணுமுணுக்கும் பட முநிவோரும் =
    முனிவர்களும்.


    பரவி முன் அநுதினம் மனம் மகிழ் உற அணி
    பணி திகழ் தணிகையில் உறைவோனே


    பரவி = போற்றி. முன் = முன் நின்று அநுதினம் = நாள்தோறும்மனம் மகிழ் உற = மன மகிழ்ச்சி அடைய
    அணி = அழகிய பணி = பாம்பும் திகழ் = விளங்கும் தணிகையில் உறைவோனே = திருத்தணிகையில் வீற்றிருப்பவனே.


    பகர் தரு குற மகள் தரு அமை வநிதையும்
    இருபுடை உற வரு பெருமாளே.


    பகர் தரு = யாவராலும் புகழப் படும் குற மகள் = குறப்பெண்ணாகிய வள்ளியும் தரு = கற்பக மரத்தின் நிழலில் அமை = வீற்றிருந்த வநிதையும் = பெண்ணாகிய தேவ சேனையும் இரு புடை உற வரும் பெருமாளே = இரண்டு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளி இருக்கும் பெருமாளே.






    இது ஒரு துதிப் பாடல்.


    விளக்கக் குறிப்புகள்
    1.இரு செவி களி கூர....
    சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
    செவிமீதி லும்பகர்செய் குருநாதா ------- திருப்புகழ் , சிவனார்
    நிதி ஞான போதம் அரன் இரு காதிலே ---- திருப்புகழ் , குசமாகி


    2.. உலகம் மன் அலகில உயிர்களும்......
    பக்குவப் படாத உயிர்களெலாம் தாங்கள் முருக வழிபாட்டில்
    பக்குவப்பட்ட முனிவர்களை முந்திக் கொள்ளவில்லயே என்று நொந்து
    கொண்டு முணு முணுத்தல். இக்கருத்தைத் திருவாசகத்திலும் காணலாம்.
    அறுகு எடுப்பார் அயனும் அரியும்
    அன்றி மற்று இந்திரனோடு அமரர்
    நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம்
    நம்மில்பின்பு அல்லது எடுக்க ஓட்டோம்.ப் --- திருவாசகம் திருப்பொற்சுண்ணம்


    3. பணிதிகழ் தணிகையில் உறைவோனே....
    தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
    தணிகைமலையி லுறைகின்ற பெருமாளே ---
    திருப்புகழ்,முலைபுளக
Working...
X