chitta brahmai - Periyavaa
டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை
லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா


"இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோடஅனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதிகளுக்கெல்லாம் போயிருக்கேள்அதோட பெருமாளோடஸ்லோகத்தைபரிபூரணமான
நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான்அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!--பெரியவா


ஒருசமயம் பெரியவா ஸ்ரீமடத்துல இருக்கறச்சே,
அவரை தரிசனம் பண்றதுக்கு வந்த பக்தர்கள்
கூட்டத்துல ஆறேழுபேர் ஒரு குழுவா வந்திருந்தா.
அவா நெத்தியல பளீர்னு இட்டுண்டிருந்த திருமண்ணே
அவாள்லாம் வைஷ்ணவாங்கறதை உணர்த்தித்து.
தங்களுக்குள்ளேயே எதோ மெதுவா பேசிக்கறதும்,
அடிக்கடி ஆசார்யாளை எட்டி எட்டிப் பார்க்கறதுமா
இருந்தா அவா. அதே சமயம் அவாள்ல ஒருத்தர் மட்டும்
தனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்லைங்கற மாதிரி
நெட்டுக்குத்தான ஒரு பார்வையோட எந்த சலனமும்
காட்டாம நின்னுண்டிருந்தார்.


மடத்துக்கு வைஷ்ணவா வர்றது ஒண்ணும் புதுசு
இல்லையானாலும் அவாளோட செய்கைகள் எல்லாம்
கொஞ்சம் வித்யாசமா இருந்ததால,எல்லாரையும்
கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைச்சுது.


ஆச்சு, ஒருவழியா அவா பெரியவா முன்னால வந்து நின்னா
யாரும் எதுவும் பேசலை. ஆனா, அவாளோட கண்ணுல
இருந்து ஜலம் மட்டும் மளமளன்னு கொட்டித்து. ரெண்டு
மூணு நிமிஷத்துக்கு அப்புறம் அவாள்ல ஒருத்தர் பேச
ஆரம்பிச்சார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
"ஸ்வாமி, இவர் என்னோட தாய்மாமா.ரொம்ப நன்னா வேத
மந்திரமெல்லாம் சொல்லிண்டு இருந்தார். திடீர்னு எதுனாலயோ
இவரோட சித்த ஸ்வாதீனம் தவறிடுத்து.மனுஷா யாருன்னு
அடையாளம் தெரியலை; கார்த்தாலைக்கும் ராத்திரிக்கும்
வித்தியாசம் தெரியலை. ஒரே இடத்தை வெறிச்சுப் பார்த்துண்டு
பிரமைபிடிச்சாப்புல இருக்கார். எப்பத் தூங்கறார்.எப்போ
முழிச்சுக்கறார்,என்ன பண்ணறார்ங்கறதெல்லாம் தீர்மானமே
இல்லாம இருக்கு!" நாக்கு தழுதழுக்க சொன்னவர் கொஞ்சம்
நிறுத்தி ஆசுவாசப்படுத்திண்டு பேச ஆரம்பித்தார்.


"குணசீலம்,சோளிங்கர்னு பெருமாள் க்ஷேத்ரங்களுக்கும்
நாலஞ்சு திவ்ய தேசத் திருப்பதிகளுக்கும் அழைச்சுண்டுபோய்
தரிசனம் பண்ண வைச்சோம்.இதைதவிர எங்க சக்திக்கு ஏத்த
எல்லா சிகிச்சையும் பார்த்துட்டோம்.கொஞ்சம்கூட தெளிவு வரலை
டாக்டர்களே என்னதுன்னு கண்டுபிடிக்க முடியாம குழம்பறா.


பெரியவாளைப் பார்த்தா தீர்வு கிடைக்கும்னு தோணித்து. அதான்
தாமதிக்காம அழைச்சுண்டு வந்துட்டோம். நீங்கதான் அனுகிரஹம்
பண்ணணும்!" சொல்லி முடிச்சார்,அவர்.


அப்போதான் எல்லாருக்குமே தெரிஞ்சுது.வெறிச்ச பார்வையோட
நின்ன அந்த மனுஷருக்கு சித்தபிரமை பிடிச்சிருக்குங்கறது.
எல்லாரும் பரிதாபத்தோட அவரைப் பார்க்கத் தொடங்கினா.
அந்த சமயத்துல பரமாசார்யா , பாதிக்கப்பட்ட மனுஷரை
வாத்சல்யத்தோட பார்த்தார்.


அதுக்கப்புறம் அவரைக் கூட்டிண்டு வந்தவாகிட்டே,
"விஷ்ணு சகஸ்ரநாம பாராயண க்ரமத்துல வர்ற


"அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் !
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் !!


அப்படிங்கற ஸ்லோகத்தை நூத்தியெட்டுதரம் நீங்க எல்லாருமா
சேர்ந்து சொல்லுங்கோ!" சொன்னார். மஹாபெரியவா.


பெரியவா சொன்னதும் அந்த ஸ்லோகத்தை கோரஸா அவ
எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா. நூத்தியெட்டு தரம் சொல்லி
முடிச்சுட்டு ஏதோ அதிசயம் நடக்கப் போறதுங்கறமாதிரி, புத்தி
சுவாதீனம் இல்லாத அந்த மனுஷரைப் பார்த்தா.ஆனா,அவர்
முன்னை மாதிரியே அப்படியே பிரம்மமேன்னுதான்
நின்னுண்டு இருந்தார்.அடுத்ததா எல்லாரும் பெரியவாளைப்
பார்த்தா.


"அவரை இங்கே அழைச்சுண்டு வந்து நிக்கவைங்கோ!
(தன்னோட தலைல ஒரு இடத்தை சுட்டிக்காட்டின பெரியவா)
அவரோட சிரசில இதோ இந்த இடத்துல கொஞ்சம் வலிக்கறாப்புல
ரெண்டுதரம் குட்டுங்கோ!" அப்படின்னு சொன்னார்.


வந்தாவாளுக்கு சின்ன தயக்கம். என்னடா இது. ஏதோ ஸ்லோகம்
சொல்லச் சொன்னார். சொன்னோம். இப்போ தலைல குட்டச்
சொல்றாரே.இது எதுக்கு?ஏற்கெனவே மூளை குழம்பிப்போனவரை
குட்டினா இன்னும் குழம்பித்தானே போவார்? இப்படியெல்லாம்
யோசிச்சு அவா குழம்ப ஆரம்பிச்ச சமயத்துல,"என்ன தயங்கறேள்,
நான் சொல்றதை தைரியமாச் செய்யுங்கோ!" என்றார் பெரியவா.


குட்டுப்பட்டதும் டக்குன்னு தூக்கத்துல இருந்து விழிச்சவர் மாதிரி
கண்ணை உருட்டின வைஷ்ணவர்,தன்னைக் கூட்டிண்டு
வந்தவாள்ல இருந்த ஒருத்தரப் பார்த்து, "ஏண்டா,இது ஏதோ மடம்
மாதிரி இருக்கே? நாம எப்போடா இங்கே வந்தோம்? இது எந்த ஊரு?
எதுக்காக இங்கே வந்திருக்கோம்?-கேள்விகளை எழுப்பினார்.


அவரோட சித்த பிரமை முழுசா நீங்கிடுத்துன்னு புரிஞ்சுண்ட அவா
அத்தனைபேரும் சாஷ்டாங்கமா பெரியவாளுக்கு நமஸ்காரம்
பண்ணினா."எல்லாம் உங்களோட அனுகிரகம்'னு --சொன்னார்கள்.


"இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட
அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதிகளுக்கெல்லாம் போயிருக்கேள்
அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான
நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான்
அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!--பெரியவா


பழம்,கல்கண்டு,துளசி பிரசாதங்களைக் குடுத்து அவாளை
ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்