Announcement

Collapse
No announcement yet.

Thiruvaiyaru

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvaiyaru

    Thiruvaiyaru
    Courtesy:Sri.Kovai K.Karuppasamy
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴 ஐயாறப்பா். 🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴திருவையாற்றில் அய்யன் ஐயாறப்பன் (மூலவர் )சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள்...
    🔴முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ பேரரசன்- கரிகாலற்பெருவளத்தான் காடழித்து நாடாக்கி .. நாட்டை வளமாக்கி இமயத்தில் புலிக்கொடி பொரித்து வரும் வழியில் தனது தேர் சக்கரம் மண்ணில் புதைந்தது ...பெரும் முயற்சி செய்தும் சக்கரம் நகராமல் இருக்கவே இங்கு எதோ சக்தி இருப்பதை உணர்ந்த மன்னன் அவ்விடம் குழிதோண்டசுயம்பு லிங்கம் தென்பட்டது ..மேலும் உள்ளே சடை வளர்ந்தவராக நியமேசர் எனும் சித்தர் தென்பட்டார் ..அவர் பாதம் பணிந்தான் சோழன் ..ஆசி வழங்கிய நியமேசர் ..இவ்விடம் ஆலயம் எழுப்பி சுயம்பு லிங்கத்தை பிரதிஸ்டை செய்யுமாறு கேட்டுகொண்டார்..நியமேச சித்தர் தான் தற்போது அகப்பேய்ச் சித்தர் என அழைக்கப் படுகிறார் ..
    🔴 இப்போதும் அகப்பேய்ச் சித்தர் மூலவரின் வடபுறம் உள்ள சண்டிகேஸ்வரர் அருகில் சமாதியாகி உள்ளார் .. ஸ்ரீ ஜிரஹரேஸ்வரர் எனும் நாமம் கொண்ட லிங்கம் அகப்பேய் சித்தரின் ஐக்கியம் பெற்ற இடமாகும் ..ஸ்ரீ ஜிரஹரேஸ்வரரின் எதிரே அகப்பேய் சித்தரின் உருவம் பொரிக்கப் பட்டிருக்கும் பாருங்கள் ...இங்கே அமர்ந்து தவம் செய்ய அவர் இருப்பை உணரலாம் ...
    🔴ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி: சுவாமி (மூலவர்) பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார்...
    🔴 திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்திதின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி,வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
    🔴திருவையாறில் சிலாத முனிவருக்கு மகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசா தேவியை மணந்து ஐயாறப்பரை பூஜித்து சிவசொரூபம் பெற்று சிவனின் வாகனமானார். இத்தலத்தில் நடைபெறும் விழாக்களுள் நந்திதேவர் திருமண திருவிழா வெகு சிறப்பானது. திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமானின் திருமணத்தின் போது, இத்தல ஈசன் பல பொருட்களைச் சீர்வரிசையாக கொடுத்தருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமாக சம்ப ஸ்தான விழா எனும் ஏழுர் வலம் நடைபெறுகிறது. சிவன் கண்ணாடி பல்லக்குகளில் ஏறி அம்பாள் மற்றும் நந்தியுடன் திருவையாறில் ஆரம்பித்து, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று திரும்புவார்.அப்போது அந்தந்த ஏழு ஊர்களின் இறைவனும் தனித் தனிப் பல்லக்குகளில் எழுந்தருளி, ஐயாறப்பரை ஊர் எல்லையில் எதிர்கொண்டு அழைத்து வருவார்கள். மறுநாள் காலை திருவையாறுக்கு ஏழு ஊர்களின் பல்லக்குகளும் ஒன்று சேர வரும்.
    🔴ஒருமுறை திருக்காளத்தியை தரிசனம் செய்த திருநாவுக்கரசர் காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.
    ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ண மின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றார ..ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம் என்று கூறி மறைந்தார்.
    🔴இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அப்போது திருவையாறில் திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். அந்த ஆனந்த காட்சியை பார்த்த திருநாவுக்கரசர், கயிலைநாதனை உருகிப்பாடினார். திருக்கயிலை காட்சி காட்டிய தினம் ஆடி அமாவாசை ஆகும்.
    🔴 தஞ்சையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ..நிறைய நகர பேருந்துகள் இயக்கப் படுகின்றன ..கண்டு களிப்புருங்கள் ..
    திருச்சிற்றம்பலம்.
Working...
X