Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    130.கொந்துவார்


    கொந்து வார்குர வடியினு மடியவர்
    சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
    கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா
    கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
    செந்தில் காவல தணிகையி லிணையிலி
    கொந்து காவென மொழிதர வருசம யவிரோத
    தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
    சந்தி யாதது தனதென வருமெரு
    சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து விரைநீபச்
    சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
    கிண்கி ணீமுக விதபத யுகமலர்
    தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே
    சிந்து வாரமு மிதழியு மிளநவ
    சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
    செஞ்ச டாதரர் திருமக வெனவரு முருகோனே
    செண்ப காடவி யினுமித ணினுமுயர்
    கந்த னாடவி யினுமுறை குறமகள்
    செம்பொ னூபுர கமலமும் வளையணி புதுவேயும்
    இந்து வாண்முக வனசமு ம்ருகமத
    குங்கு மாசல யுகளமு மதுரித
    இந்த ளாம்ருத வசனமு முறுவலு மபிராம
    இந்த்ர கோபமு மரகத வடிவமு
    மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
    மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய பெருமாளே.





    -130 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    கொந்து ஆர் குரா அடியினும் அடியவர்
    சிந்தை வாரிஜ நடுவினும் நெறி பல
    கொண்ட வேத நல் முடிவினும் மருவிய குரு நாதா


    கொந்து ஆர் = பூங்கொத்துக்களை உடைய நெடிய குரவு = குரா மரத்தின் அடியிலும் அடியவர் = அடியவர்களுடைய. வாரிஜம் நடுவினும் = இதய தாமரையின் நடுவிலும் நெறி பல = துறைகள் பல கொண்ட வேத நல் முடியினும் = வேதத்தின் சிறந்த உச்சியிலும் மருவிய = வீற்றிருக்கும் குரு நாதா = குரு நாதனே.




    கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக
    செந்தில் காவல தணிகையில் இணை இலி
    கொந்து கா என மொழி தர வரும் சமய விரோத


    கொங்கில் = கொங்கு நாட்டில் ஏர் = அழகு தரும் பழநியில் =பழனி மலையில் அறுமுக = ஆறு முகனே செந்தில் காவல = திருச் செந்தூரில் தேவ சேனாபதியே தணிகையில் இணை இலி =தணிகையில் இணை இல்லாத அழகனே கொந்து = ஒருவரோடு ஒருவர் கா என = கா என்று கூவும் காக்கைகள் போல மொழி தர = எதிர்த்துப் பேசும்படி வருகின்ற சமய விரோத = சமய வேறு பாடு கொண்ட.


    தந்திர வாதிகள் பெற அரியது பிறர்
    சந்தியாதது தனது என வரும் ஒரு
    சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப


    தந்த்ர வாதிகள் = தந்திரம் மிக்க வாக்கு வாதத்தினர் பெற அரியது = பெறுவதற்கு அரிதானதும் பிறர் சந்தியாதது = பிறர் எவராலும் சந்திக்க முடியாததும் தனது என வரும் = தனக்கு வேறு ஒப்பானது இல்லை எனக் கூறும் தகைமையதாய் வருகின்றஒரு சம்ப்ரதாயமும் இது என = ஒரு குரு பரம்பரையாக வந்த உபதேசம் இது என. உரை செய்து = மொழிந்தருளி. விரை =நறுமணமுள்ள. நீப = கடப்ப மலர் விளங்குவதும்.


    சஞ்சரீ கரகரம் முரல் தமனிய
    கிண்கிணி முக இத பத உக மலர்
    தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே


    சஞ்சரி = வண்டுகள் கரிகரம் = சுரத லீலையால் முரல் = இசை பாடுகின்ற. தமனிய = பொன்னாலாகிய கிண்கிணி முக = கிண்கிணி முதலிய பல அணிகள் தரித்ததும் (ஆகிய). பத உக மலர் தந்த = திருவடி இணை மலரைச் சூட்டிய பேர் அருள்= பெருங் கருணையை கனவிலும் நனவிலும் மறவேனே = கனவிலும் விழித்திருக்கும் போதும் மறக்க மாட்டேன்.


    சிந்து வாரமும் இதழியும் இள நவ
    சந்த்ர ரேகையும் அரவமும் மணி தரு
    செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே


    சிந்துவாரமும் = நொச்சியும். இதழி = கொன்றையும். இள =இளமையும். நவ = புதுமையும் வாய்ந்த. சந்த்ர ரேகையும் =மூன்றாம் பிறை ஒளி நிலவும். அரவுமும் = பாம்பும். அணி தரு =அணிந்த. செம் சடாதரர் = சிவந்த சடையைத் தாங்கிய சிவபெருமானுடைய. திரு மகவு என வரும் முருகோனே =அழகிய குழந்தை எனத் தோன்றிய முருகனே.


    செண்பக அடவியினும் இதணினும் உயர்
    சந்தன அடவியினும் உறை குற மகள்
    செம் பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும்


    செண்பக அடவியினும் = செண்பகக் காட்டிலும். இதணினும் =(தினைப் புனத்து) பரண் மீதும். சந்தன அடவியினும் = சந்தனக் காட்டிலும். உறை குற மகள் = வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின். செம் பொன் நூபுர கமலமும் = செம் பொன்னாலாகிய சிலம்பு அணிந்த மலரடிகளையும். வளை அணி = வளையல்கள் அணிந்த. புது வேயும் = புது மூங்கில் அனைய தோள்களையும்.


    இந்து வாள் முக வனசமும் ம்ருகமத
    குங்கும அசல உகளமும் மதுரித
    இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம




    இந்து வாள் = சந்திரனை ஒத்த ஒளி வீசும் முக வனசமும் = முகம் என்னும் தாமரையையும் ம்ருகமத = கஸ்தூரி குங்கும =குங்குமம் இவை அணிந்த அசல உகளமும் = மலை போன்ற இரு கொங்கைகளும் மதுரித = இனிமை இன்பம் தருவதான.இந்தளம் = இந்தளம் (நாதநாமக் கிரியை) போன்ற. அம்ருத வசனமும் = அமுத மொழிகளையும். முறுவலும் = பற்களையும்அபிராம = அழகு வாய்ந்த.


    இந்த்ர கோபமும் மரகத வடிவமும்
    இந்த்ர சாபமும் இரு குழையொடு பொரும்
    இந்த்ர நீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே.


    இந்த்ர கோபமும் = தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களையும். மரகத வடிவமும் = பச்சை நிறத்தையும். இந்த்ர சாபமும் = வானவில் போன்ற புருவத்தையும். இரு குழையொடு பொரும் = இரண்டு காதணியாகிய குழைகளைத் தாக்குகின்ற இந்த்ர நீலமும் = நீலோற்ப மலர் போன்ற கண்களையும் மடல் இடை எழுதிய = மடலின் கண் எழுதி மகிழ்ந்த. பெருமாளே = பெருமாளே.










    சிறப்பு குறிப்பு
    ....வரும்.....
    விளக்கக் குறிப்புகள்


    1.குர வடியினு மடியவர்....
    குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
    குலாவியினி தோதன் பினர்வாழ்வே ... திருப்புகழ்,இராவினருள்.
    புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் ... சம்பந்தர் தேவாரம்


    2.. கொங்கிலோர்தரு பழநியி லறுமுக...
    பழனியில் ஆறுமுக தரிசனம் அருணகிரி நாதருக்குக் கிடைத்தது.
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுலம் என்று பூத .. திருப்புகழ் , ஆறுமுகம்.
    திருச்செந்தூரில் தேவசேனாபதியாய் விளங்கியதால், செந்தில் காவல என்றும், தணிகையில் அழகு பொலிந்து இருத்தலால் இணையிலி என்றும் குறிப்பிடப்பட்டது.


    3.கொந்து காவென மொழிதர.....
    சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
    சமய பஞ்ச பாதக ரறியாத .... திருப்புகழ் ,நிகரில்பஞ்ச .
    சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிட்சட் கோல சமயிகள்
    சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞானச்
    சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசு யிடுமவர். –
    - திருப்புகழ் , சங்கைக்கத்தோடு.
    கலகல கலெனக் கண்ட பேரொடு
    சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
    கதறிய வெகுசொற் பங்க மாகிய பொங்களாவு ... திருப்புகழ்,அலகிலவுண.


    4சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய...
    இது அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் திருவடி தரிசனம் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.
    பரவை படியினும் வசமழி யினுமுத
    லருணை நகர்மிசை கருணையொ டருளிய
    பரம வொருவச னமுமிரு சரணமு மறவே னே ... திருப்புகழ்,மகரமெறிகடல்.


    5. இந்த ளாம்ருத வசனமும் முறுவலும்...
    பண்க டங்க டர்ந்த இன்சொல்
    திண்பு னம்பு குந்து கண்டி றைஞ்சுகோவே ... திருப்புகழ்,வந்துவந்து.


    வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல ;
    “ஆனால் எழுதுதற்கு அரிதான வள்ளியின் “ இந்தளாம்ருத வசனத்தையும்” எழுதினார் என்கிறார் அருணகிரியார். இது முருகன் திறத்தைக் காட்டுகிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர்.” என்கிறார் தணிகைமணி.
Working...
X