Announcement

Collapse
No announcement yet.

Gangaikondan temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gangaikondan temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
    *(13-வது நாள்.)*

    *அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.*
    *கங்கைகொண்டான்.*

    *இறைவன்:*அருள்மிகு கைலாசநாதர். (நடலிங்கம்)


    *இறைவி:* அருள்தரும் ஆனந்தவல்லி அம்மன்.


    *தீர்த்தம்:* கங்கா தீர்த்தம். (தெப்பம்)


    *தல விருட்சம்:* திருப்புளியமரம்.


    *ஆகமம்:* காரண ஆகமம்.


    *தல அருமை:* 'திண்டி' வனத்தில் (புளிய மரங்கள் அடர்ந்த காடு) மேய்ந்தலைந்து கொண்டிருக்கிறார் பசுக்கூட்டங்களில் ஒரு பசு புளியமரத்தின் டிரில் பால் சொரிந்தது.


    இதை அங்கே மாடுமேய்ப்பவன் பார்த்து விட்டு, நேராய்ப் போய் மன்னனிடம் செய்தியைச் சொன்னான்.


    மன்னனும் படைவாரங்களோடு உடன் சென்று பார்த்தான்.


    மாடுமேய்ப்பவன் காட்டிய இடத்தில் *புற்றும் சிவலிங்கவுருவும்* இருப்பதைக் கண்டான்.


    அரசனும் ஆவ்விடத்தில் கோவிலைப் புணர்மானிக்க முற்பட்டான்.


    கோயில் அமைக்க இடத்தை அகழ்ந்தொலிக்கும் பணியை மேற்க் கொண்டு பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது...............


    *நான் குடியிருக்கும் இம்மரத்தை வெட்ட வேண்டாம்* என ஒரு மரத்துப் பக்கமாய் அசரீரியாக கேட்டது.


    உடனை மன்னன் அவ்விடத்தை விட்டுவிட்டு சற்றுத் தொலைவில் இத்திருக்கோயிலை நிர்மானித்தான்.


    *தல பெருமை:*
    இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திரனுக்கு முடிகொண்ட சோழன் என்ற ஒரு பெயரும் உண்டு.


    இம்மன்னன் கங்கை வரை சென்று போரிட்டு வென்றான். இதனால் இவன் கங்கை கொண்டான் என்ற பெயர் பெற்றான்.


    இவனின் பெண் வயிற்றுப் பேரனான குலோத்துங்கன் சோழன் என்பவன், தன் பாட்டனாரின் பெயரான இவ்வூருக்கு *கங்கை கொண்டான்* எனப் பெயர்வைத்தான்.


    கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் இப்பெயரே இவ்வூருக்கு வழங்கி வரப்பெற்றிருக்கிறது.


    இத்திருக்கோயிலை சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு, அதன்பின்பு பிற்கால பாண்டியர்களால் விரித்துக் கட்டப்பட்டன.


    *சிறப்பு:*
    ஆண்டு தோறும் தை மாதப்பிறப்பிற்குப் பின் ஒரு நாள் சூரியனின் கதிர்வலைகள் சூரிய உதயத்தின் போது, சுவாமியைத் தழுகிறது.


    அந்நாள் அந்நேரத்தில் இச்சூரியத் தழுவலின்போது பூஜை செய்வது வழக்கமாகச் செய்து வருகின்றனர்.


    இத்தலத்தில் நவக்கிரகங்கள் இல்லாத, கோளில்லாத் திருத்தலமாகும்.


    வாமதேவ ரிஷி இங்கு கோயில் கொண்டுள்ளார்.


    இறைவனே வாமதேவ ரிஷிக்கு அருள் வழங்கிய தலம் இத்தலம்.


    அக்னி தேவன் இங்கு இருக்கும் காமதேனு தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்ட திருத்தலம்.


    இங்கிருக்கும் மூலவர், அம்மன் நான்கு திருக்கனங்களுடன் காட்சியருள் புரிகின்றனர்.


    அம்மனின் சந்நிதி வாசல் முன்புறத்திலுள்ள கல்தூண்களில் பெருமாள் உடனுறை நாச்சியார்களுடன் சில விக்கிரங்கள் இருக்கின்றன.


    *கல்வெட்டு:*
    இக்கோயிலில் சீவலமாறப் பாண்டியனின் கல்வெட்டு ஒன்று இருக்கிறது.


    "சீவல்லப பக்கத்து கைலாயத்து பண்டார்கர், கைலாயத்து பெருமாள் அடிகள், பாண்டி நாட்டு குடிகொண்ட கோடி வழிபாட்டு கீழகளைக்கூற்றத்து கங்கை கொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் துணைக் கைலாயமுடையார், கங்கைகொண்டான் உடையார், கைலாயமுடைய நயினார், நாச்சியார் ஆனந்த வல்லி யார், சிற்றாற்றங்கரை என கல்வெட்டைக் காணலாம்.


    இதனால் கல்வெட்டிலிருந்து தெரியவருவது யாதெனில்.....சீவல்லப மங்கலம் கங்கை கொண்ட மண்டலம் கங்கை கொண்டான் என ஆயிற்று.


    நமக்குத் *தமிழ்த்தாய் வாழ்த்தைத்* தந்தருளிய மனோன்மணியம் சுந்தரனாரின் ஞான குருவான கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் பிறந்த ஊர் இதுவேயாகும்.


    *பூஜை காலங்கள்:*
    நான்கு கால பூஜைகள்.


    கால சந்தி- காலை 8.00 மணிக்கு.


    உச்சிகாலம்- காலை 10.00 மணிக்கு.


    சாயரட்சை- மாலை 6.00 மணிக்கு.


    அர்த்தசாமாம்- இரவு 9.00 மணிக்கு.


    திருக்கோயிலில் சுவாமி சந்நிதியும், அம்மன் சந்நிதியும் தனித்தனியே அமைந்திருக்கிறது.


    *திருவிழாக்கள்:*
    நவராத்திரி.
    திருவாதிரை மற்றும்
    மகாசிவராத்திரி.


    *இருப்பிடம்:*
    தேசிய நெடுஞ்சாலை எண் ஏழான- மதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது.


    திருநெல்வேலிக்கு வடகிழக்காக இருபது கி.மி. தொலைவில் *கங்கை கொண்டான்* எனும் கிராமத்தில் அமையப் பெற்றிரேக்கிறது.


    திருநெல்வேலியிலிருந்தும் *கயத்தார்* *கோவில்பட்டி* செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
    கங்கைகொண்டான்.
    திருநெல்வேலி- 627 352


    *தொடர்புக்கு:*
    94432 79815


    திருச்சிற்றம்பலம்.


    நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளை வளர்வது *அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில்* செப்பறை, இராஜவல்லிபுரம்.


    திருச்சிற்றம்பலம்.



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X