Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    134துப்பாரப்பா


    எவருக்கும் எட்டாத குமரக்கடவுளின் திருவருளை நாடி வேண்டுதல்


    துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
    சொற்பா வெளிமுக் குணமோகம்
    துற்றா யப்பீ றற்றோ லிட்டே
    சுற்றா மதனப் பிணிதோயும்
    இப்பா வக்கா யத்தா சைப்பா
    டெற்றே யுலகிற் பிறவாதே
    எத்தார் வித்தா ரத்தே கிட்டா
    எட்டா அருளைத் தரவேணும்
    தப்பா மற்பா டிச்சே விப்பார்
    தத்தாம் வினையைக் களைவோனே
    தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
    தத்தாய் தணிகைத் தனிவேலா
    அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
    வற்பா வைதனத் தணைவோனே
    அத்தா நித்தா முத்தா சித்தா
    அப்பா குமரப் பெருமாளே.

    -134 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால்
    சொல் பா வெளி முக்குண(ம்) மோகம்


    துப்பு = உணவு தரும்.
    பார் = மண்.
    அப்பு = நீர்.
    ஆடல் = அசைகின்ற.
    தீ = நெருப்பு.
    மொய் = நெருங்கி வீசும் கால் = காற்று சொல் = புகழப்படு கின்ற பா = பரப்பு உள்ள வெளி = ஆகாயம் (ஆகிய பஞ்ச பூதங்கள்) முக் குணம் = சத்துவம், தாமசம், இராசதம் என்னும் மூன்று குணங்கள் மோகம் = மண், பெண், பொன் ஆகிய மூவாசைகள் (ஆகியவற்றை).


    துற்று ஆய பீறல் தோல் இட்டே
    சுற்றா மதன பிணி தோயும்


    துற்று ஆய = நெருக்கமாக வைக்கப்பட்டதும் பீறல் = கிழிந்த
    தோல் இட்டே = தோலிட்டு சுற்றா = சுற்றி மேயப்பட்டதும்
    மதனப் பிணி = காம நோய் தோயும் = தோய்ந்துள்ளதுமான


    இப் பாவ காயத்து ஆசைப்பாடு
    எற்றே உலகில் பிறவாதே


    இப்பாவக் காயத்து = இந்த பாவத்துக்கு ஈடான உடலின் மேல்ஆசைப்பாடு எற்றே = ஆசைப் படுவதை மேற் கொண்டு உலகில் பிறவாதே = இந்த உலகில் பிறக்காமல்.


    ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
    எட்டா அருளை தர வேணும்


    எத்தார் = உன்னைத் துதிக்காதவருடைய வித்தாரத்தே = கல்விசாமர்த்தியத்தால் கிட்டா = கிட்டாததும் எட்டா =எட்டாததுமான அருளைத் தர வேணும் = உனது திருவருளைத் தந்து அருள வேண்டும்.


    தப்பாமல் பாடி சேவிப்பார்
    தத்தாம் வினையை களைவோனே


    தப்பாமல் = தவறாமல் பாடிச் சேவிப்பார் = (உன்னைப்) பாடித்தொழுபவர்களுடைய தத்தாம் வினையை = அவரவர் களுடையவினையை களைவோனே = போக்குபவனே.


    தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய்
    தணிகை தனி வேலா


    தற்கு = செருக்கும் ( நான் என்ற ஆணவம்) ஆழி = எதையும் ஆளும் எண்ணமும் கொண்ட சூர் = சூரனை செற்றாய் =அழித்தவனே மெய்ப் போதத்தாய் = மெய்ஞ்ஞான மூர்த்தியே
    தணிகை = தணிகையில் வீற்றிருக்கும் தனி வேலா = ஒப்பற்ற வேலனே.


    அப் பாகை பாலை போல் சொல் காவல்
    பாவை தனத்து அணைவோனே


    அப் பாகை = அந்தச் சர்க்கரை வெல்லத்தையும் பாலைப் போல் =பாலையும் போல் இனிக்கும் சொல் = சொற்களை உடைய காவல் பாவை = தினைப் புனம் காத்த வள்ளியின்.
    தனத்து அணைவோனே = கொங்கைகளை அணைந்தவனே.


    அத்தா நித்தா முத்தா சித்தா
    அப்பா குமர பெருமாளே.


    அத்தா = உயர்ந்தோனே நித்தா = என்றும் அழியாமல் இருப்பவனே முத்தா = பாசங்களை நீங்கியவனே சித்தா =சித்திகளில் வல்லவனே அப்பா = தந்தையே குமரப் பெருமாளே = குமரப் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம். இது முருகக்
    கடவுளின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று (வ.சு.செங்கல்வராய பிள்ளை).


    மூவாசை : மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை . ஒப்புக ‘மூவேடணை’ - அநுபூதி




    மூவாசை, நிலையாமை,
    தணிகை, வேல், வள்ளி, மெய்ஞ்ஞானம்
Working...
X