Announcement

Collapse
No announcement yet.

Dasa Mahavidya

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dasa Mahavidya

    தசமஹாவித்யா ( பத்துவிதமான சக்திகள் ) ஒரு பார்வை :


    தசமஹாவித்யா எனப்படும் பத்துவிதமான சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்துவிதமான செயல்களுக்கும் மூலகாரணமாக விளங்குகின்றார்கள்.


    அதாவது ஒரு மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் தொழில்நுட்பமே தசமஹாவித்யா ஆகும்.


    நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் ( அஞ்ஞானம் ) வைத்திருக்கிறது ஆணவமற்ற நிலையில்தான் இந்த மஹா சக்திகளை நாம் உணர முடியும்.
    நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப் படுகின்றது மேலும் செல்வம் அஷ்டமாசித்திகள் என்ற கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த தசமஹாவித்யா பயன்படுத்தப்படுகின்றது.


    ஒரு ஊருக்கு மாபெரும் ஞானி ஒருவர் வந்தார்
    தினமும் அவரிடம் மக்கள் பலரும் அறிவுரை கேட்டு வருவதுண்டு இப்படி இருக்கும் போது ஒரு சமயம் அந்த ஊரில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதால் இதன் காரணம் என்னவென்று மக்கள் ஞானியிடம் கேட்டனர் அகந்தை ஆணவம் அதிகமாகி செல்வம் அளவுக்கதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் தர எண்ணினார் உடனே அவர் மக்களைப் பார்த்து எல்லா செயல்களுக்கும் நானே ( அகந்தை ) காரணம் என்றார் நான் என்கிற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என்று பொருள்பட ஞானி கூறினாலும் மக்கள் அனைவரும் அறியாமையில் இருந்ததால் அந்த ஊரில் நடந்த அனைத்து திருட்டுக்கும் நானே காரணம் என்று ஞானி கூறுவதாக எண்ணி அந்த ஞானியை அடித்தே கொன்றனர்.


    இந்த கதையைக் கூறக்காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும் அதை பயன்படுத்துபவர்கள் மிகவும் அற்ப விஷயத்திற்காக அந்த வித்தையை தவறாக பயன்படுத்துகின்றனர்.


    மேலும் அந்த மஹாசக்தியான தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் பரந்து இருக்கிறாள் அவை முறையே சுவை நவரசம் உணர்வுகள் நவகிரகங்கள் என அனைத்துப் பொருள்களிலும் இயங்கு சக்தியாக இருக்கின்றாள் அத்தகைய அந்த பத்துவிதமான சக்திகளையும் எளியமுறையில் தெரிந்து கொள்ளலாம்.


    1) ஸ்ரீ காளீ தேவீ :


    கரிய நீலநிறத்தைக் கொண்டவள் வேதங்களில் அதர்வண வேதத்தைக் குறிப்பவள் வெட்டுண்ட உடல்களின் கபாலங்களை மாலையாக அணிந்து ருத்ரபூமியாகிய மயானத்தில் உறைபவள் மேலும் அடி மேல் அடி எடுத்து வைத்து மிகவும் மெதுவாகவும் அதே சமயம் ஆக்ரோஷமாகவும் நகர்பவள் சிவனை தன் பாதத்தின் அடியில் வைத்திருக்கும் குரூரமான தோற்றத்தைக் கொண்டவள் தசமஹாவித்யாவில் முதலாவதாக வந்து முத்தான பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ காளீதேவீ


    2) ஸ்ரீ தாரா தேவீ :


    வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல ஒளிவீசி தனது மஹாசக்தியை அதன் உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள் தசமஹாவித்யாவில் இரண்டாவதாக வந்து இரட்டிப்பு பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ தாரா தேவீ


    3) ஸ்ரீ திரிபுரபைரவீ தேவீ :


    பைரவி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவள் கழுதையை தன் வாகனமாக கொண்டு அதன் மீது அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள் கரிய நீலநிறத்தில் உடலையும் பெரிய கூரிய முட்கள் கொண்ட கதையை தன் கைகளிலும் கொண்டவள் முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்தியாசமான உருவஅமைப்பைக் கொண்டவள் இவளை காலராத்ரி என்றும் அழைப்பார்கள் தசமஹாவித்யாவில் மூன்றாவதாக வந்து முன்னேற்றம் தந்து நிறைய பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ திரிபுரபைரவீ தேவீ


    4) ஸ்ரீ புவனேஸ்வரீ தேவீ :


    மென்மையான இதழ் உடையவள் பூமியைக் காப்பாற்றும் நாயகி மேலும் நம் மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு இவளே காரணகர்த்தாவாக விளங்குகின்றாள் மிகுந்த பேரழகும் சுந்தரவதனமும் நிறைந்தவள் தசமஹாவித்யாவில் நான்காவதாக வந்து நல்ல பலன்களை தருபவள் மாதா ஸ்ரீ புவனேஸ்வரீ தேவீ


    5) ஸ்ரீ திரிபுரசுந்தரீ தேவீ :


    பதினாறு வயது நிரம்பிய கன்னிகையின் உருவைக் கொண்டவள் புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவமாக விளங்கும் இவள் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவளாக திகழ்கிறாள் மேலும் சிவபெருமானின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது ஆகும் தசமஹாவித்யாவில் ஐந்தாவதாக வந்து ஐஸ்வர்ய பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ திரிபுரசுந்தரீ தேவீ


    6) ஸ்ரீ சின்னமஸ்தா தேவீ :


    தலையற்ற உடலைக் கொண்டவள் மேலும் அவளின் கழுத்துப்பகுதியில் இருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை தனது கையில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது ஆகும் ஆண் பெண் உடலின் மீது நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சியளிப்பவள் தசமஹாவித்யாவில் ஆறாவதாக வந்து அநேக பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ சின்னமஸ்தா தேவீ


    7) ஸ்ரீ தூமாவதீ தேவீ :


    விதவைக்கோலம் பூண்டு காகத்தை கொடியாக கொண்ட ரதத்தில் வெண்ணிற ஆடையணிந்து நகைகள் அணியாத மேனியையும் விரித்துப் போடப்பட்ட கூந்தலையும் கைகளில் புகை கக்கும் பாத்திரத்தையும் முறத்தையும் ஏந்தியவாறு காட்சியளிப்பவள் கொடுமையான மற்றும் தொற்று நோய்களுக்கு காரணமானவள்
    தசமஹாவித்யாவில் ஏழாவதாக வந்து எண்ணற்ற பலன்களை தருபவள் அன்னை ஸ்ரீ தூமாவதீ தேவீ


    8) ஸ்ரீ பகளாமுகீ தேவீ :


    பயங்கரமான ஆயுதங்களை தாங்கியவள் கூரான முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம் எதிர்பாராத நிலையில் அசுரர்களைத் தாக்கி எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்துபவள்
    தசமஹாவித்யாவில் எட்டாவதாக வந்து ஏற்ற பலன்கள் தருபவள் அன்னை ஸ்ரீ பகளாமுகீ தேவீ


    9) ஸ்ரீ மாதங்கீ தேவீ :


    என்றும் உயர்வான நிலையில் இருப்பவள் அனைத்து கெடுதல்களையும் தனதாக்கிக் கொண்டு நன்மையை பிறருக்கு தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைபவள் தன்னை உபாஸனை செய்பவர்களுக்கு எல்லையில்லா இன்பத்தை வாரி வாரி வழங்குவதில் இவளுக்கு நிகர் இவளே கையினில் கிளியையும் வீணையையும் ஏந்தி காட்சி தருபவள் தசமஹாவித்யாவில் ஒன்பதாவதாக வந்து ஒப்பற்ற பலன்கள் தருபவள் அன்னை ஸ்ரீ மாதங்கீ தேவீ


    10) ஸ்ரீ கமலாத்மிகா தேவீ :


    தாமரை மலரில் உறைபவள் என்று பொருள் அனைத்து சக்திகளின் கிரியாசக்தியாக திகழ்பவள் அழகும் செல்வமும் நிறைந்தவள் இவளின் வடிவத்தையே லட்சுமிதேவியாக வணங்கி வருகின்றோம் நான்கு யானைகள் சூழ வலம் வருபவள் தசமஹாவித்யாவில் பத்தாவதாக வந்து பலவிதமான பலன்கள் தருபவள் அன்னை ஸ்ரீ கமலாத்மிகா தேவீ
Working...
X