அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம் :


( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )


தாம்பூலம் என்பது வெற்றிலை பாக்கு இவற்றிற்கு வழங்கப்படும் பொதுப்பெயர் ஆகும்.


அம்பாளின் லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
தாம்பூல பூரித முகீ என்று வரும்.
( தாம்பூலம் தரித்த சிவந்த வாயை உடையவள் )


மேலும் பகவானுக்கு செய்யும் பூஜையில் கூட
கீழ்க்கண்ட மந்திரத்தில் நிவேதன மந்திரமாக தாம்பூலம் அங்கம் வகிக்கிறது.


நிவேதன மந்திரம் :


பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுக்தம்
கற்பூர ஸூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம் கற்பூர தாம்பூலம் நிவேதயாமி


என்று கூறி அந்த தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் தெளித்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வார்கள்.


வெற்றிலையில் முப்பெரும் ( துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ) தேவியர்களும் வசிப்பதால் நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அவசியம் தாம்பூலம் தருதல் வேண்டும்.
குறைந்த பட்சம் குங்குமமாவது தரவேண்டும்.


வெற்றிலை சத்தியத்தின் சொருபமாக விளங்குவதால்தான் நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.
அப்படி நிச்சயம் ( உறுதி ) செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது வாக்குத் தவறிய கொடும்பாவத்தை தேடித் தரும்.


எல்லா தெய்வங்களின் பூஜையிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு.
பகவானுக்கு நிவேதனம் செய்யும் போது தாம்பூலம் ( வெற்றிலை பாக்கு ) அவசியம்.
மேலும் அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் ஆகும்.


தாம்பூலம் ஆனது கீழ்க்கண்ட மங்களப் பொருள்களை உள்ளடக்கியது ஆகும். அவையாவன:


வெற்றிலை ; பாக்கு ; மஞ்சள் ; குங்குமம் ; சீப்பு ; முகம் பார்க்கும் கண்ணாடி ; வளையல்கள் ; திருமாங்கல்ய சரடு ( மஞ்சள்கயிறு ) ; தேங்காய் ; பழம் : பூ ; மருதாணி ; கண் மை ; தக்ஷிணை ; புடவை ; ரவிக்கைத்துணி ; ஸ்லோக புஸ்தகம் ஆகியவை ஆகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை என்னவென்றால்


1) வெற்றிலை பாக்கு - தாம்பூல மரியாதை


2) மஞ்சள் குங்குமம் - சுமங்கலித் தன்மை


3) திருமாங்கல்ய சரடு - தாலி பாக்கியம்
( மஞ்சள் கயிறு )


4) சீப்பு - கணவனின் ஆயுள் விருத்தி


5) வளையல்கள் - மன அமைதி


6) கண்ணாடி - கணவனின் ஆரோக்யம்


7) தேங்காய் - பாவங்கள் நீங்குதல்
( மட்டைத் தேங்காய் ( உரிக்காதது ) அளிப்பதே சிறந்தது )


8) பழங்கள் - அன்னதான பலன்


9) பூ - மகிழ்ச்சி பெருகுதல்


10) மருதாணி - நோய்நொடி வராமல் இருக்க


11) கண் மை - த்ருஷ்டி தோஷங்கள் விலக


12) புடவை ; ரவிக்கைத் துணி - வஸ்திர தான பலன்


13) ஸ்லோக புஸ்தகம் - வித்யா தான பலன்


இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.


ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !