Announcement

Collapse
No announcement yet.

Soundrapandeeswarar temple .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Soundrapandeeswarar temple .

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
    *(18-வது நாள்.)*

    *அருள்மிகு செளந்திர பாண்டீஸ்வரர் திருக்கோயில்.*
    *மேலக் கருவேலன்குளம்..*

    *இறைவன்:*அருள்மிகு செளந்தர பாண்டீஸ்வரி சுவாமி.


    *இறைவி:* அருள்தரும் கோமதி அம்மன்.


    *தீர்த்தம்:* கோமதி தீர்த்தம்.


    *தல விருட்சம்:* நெல்லி மரம்.


    *ஆகமம்:* காமிக் ஆகமம்.


    *தல அருமை:*
    யானை வலம் வந்து விளையாடிய இங்கிருந்த குளத்தை, கரிவலங்குளம் என்றாயிற்று. (கரி--யானை)


    இவ்வுறுதி களந்தை புராணத்தை வாசித்தீர்களானால் தெரியவரும்.


    இறைவன் செளந்தர பாண்டீஸ்வரர் (சுந்தரர்--செளந்திரர்=அழகு) என அழைக்கட்டு வருகிறார்.


    ஒரு சமயம் செளந்திர பாண்டிய மன்னன் என்பவன் வேதனையால் நிம்மதியற்று இருந்தான்.


    தன் மகளுக்கு சித்தப் பிரமை பீடித்திருந்ததே அவன் கவலைக்குக் காரணம்.


    சித்த பிரமை நீங்கிட இத்தலம் வந்து இறைவனை வேண்டி வணங்கிட, சித்தபிரமையும் நீங்கியது.


    பஞ்சலோக படிமஸ்தலங்கள் என் கூறப்படும் சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கட்டாரி மங்கலம், கருவேலன்குளம் ஆகிய ஐந்து ஊர்களில் இத்தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


    இந்த ஐந்து தலங்களில் உள்ள ஆடவல்லான் நடராஜ உற்சவமூர்த்திகள் சிலைகளை, இக்கருவேலன் குளத்தைச் சேர்ந்த நமசிவாய ஸ்தபதி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.


    இத்தனைக்கும் மேலான அரிய பெரியது என்னவென்றால்............


    நமசிவாய ஸ்தபதிக்கு கை இல்லை. குண்டர்கள் அகப்பையும் மேலும் சில உபகாரணங்களைக் கைக்கொண்டு மற்றும், உதவிக்கு சிலரை துணைக்கு வைத்து கருவேலன்குளம் நடராஜர் மூர்த்தியை உருவாக்கியது என்பது வியப்புக்குரியன.


    இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் பலகை ஒலியுடன் கூடிய சிறு கல்தூண்கள் இருக்கின்றன.


    மகா மண்டபத்தில் ஒரு கல்தூண் சுழல்வது போன்ற நிலையிலும் இருக்கின்றன.


    மேலும் ஒரு யாழியின் வாயிலுனுள் கல் உருண்டை ஒன்று உருண்டு சுழலும் தன்மையுடனும், அது வெளிவர முடியாத நிலையில் உள்ளுக்குள்ளேயே உளிக்கு உருவானவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.


    முன்னாலுள்ள மண்டபத்தில் பதஞ்சலி, வியாக்கிரபாதர், புலிப்பாணி போன்ற முனிவர்களின் சிலைகளும், மற்றும் வீரர்களின் சிலைகளும் தத்ரூபமாக அமையப் பெற்றிருப்பதை நீங்கள் ஒரு முறை சென்று தரிசிக்க வேண்டும்.


    *பூஜைகள்:*
    தினமும் ஆறு கால பூஜை.


    விஸ்வரூபம்-- காலை 6.00 மணிக்கு,


    கால சந்தி-- காலை 8.30 மணிக்கு,


    உச்சிக்காலம் -- காலை 10.30 மணிக்கு,


    சாயரட்சை -- இரவு 7.00 மணிக்கு,


    அர்த்த சாமம் -- இரவு 8.30 மணிக்கு.


    *திருவிழா:* ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நாளில் சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்புக்குரிய தான் முறையில் நடைபெறும்.


    மார்கழி மாதம் பிரம்மோற்சவத் திருவிழாவும் மிக சிறப்பாக நடைபெறும்.


    *இருப்பிடம்:*
    இத்திருக்கோயில் பணகுடி-- சேரன்மகாதேவி சாலையில், பணகுடியிலிருந்து இருபத்தெட்டு கி.மி தொலைவில் உள்ளது.


    களக்காட்டிலிருந்து மூன்று கி.மி. தொலைவில் இருக்கிறது.


    சேரன்மகாதேவியிலிருந்து முப்பத்தேழு கி.மி. தொலைவில் இருக்கிறது.


    திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும், நாகர்கோவிலிலிருந்தும், தென்காசியிலிருந்தும், பாபநாசத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு செளந்திர பாண்டீஸ்வரர் திருக்கோயில்,
    மேலக் கருவேலன்குளம்,
    திருநெல்வேலி -627 501


    *தொடர்புக்கு:*
    04637--222888.


    நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய அடுத்த பதிவு *அருள்மிகு கனகசபாபதி திருக்கோயில் கரிசூழ்ந்தமங்கலம்*
    வ(ள)ரும்.


    திருச்சிற்றம்பலம்.

    *கோவை.கு.கருப்பசாமி.*

    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X