Announcement

Collapse
No announcement yet.

Vedapureeswarar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vedapureeswarar temple

    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *தலம்.103*

    *பாடல் பெற்ற சிவ தலங்கள் தொடர்.*

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

    *தேவூர், வேதபுரீஸ்வரர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல............)

    *இறைவன்:* வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்.*


    *இறைவி:*பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை.


    *தல விருட்சம்:* வெள் வேல மரம்.


    *தல தீர்த்தம்:* வேலாயுத தீர்த்தம்.


    *பதிகம்:* திருஞானசம்பந்தர்.




    *இருப்பிடம்:*
    சென்னை - பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் பதினேழு கி.மி. பயணம் செய்தால் வேலப்பன் சாவடி என்ற இடத்தை அடைவோம்.


    பிறகு அங்கிருந்து வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் மூன்று கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.


    சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.


    திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்,
    திருவேற்காடு அஞ்சல்,
    திருவள்ளூர் மாவட்டம்,
    PIN - 600 077.


    *ஆலயத் திறப்பு காலம்:* காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.


    *கோவில் விபரம்:* திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது.


    *பெயர்க்காரணம்:*
    நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.


    *கோவில் அமைப்பு:*
    கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரத்தை முதலில் காண நேரவும்.......
    *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


    இக்கோபுரம் ஐந்து நிலைகளை தாங்கி அழகோவியமாகத் தெரிந்தது.


    கிழக்கு கோபுர வாயில் உள்ள கோபுரத்தை வணங்கி இதன் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தை அடைந்தோம்.


    அங்கு கொடிமரம் இருக்க நின்றவாறு வணங்கிக் கொண்டோம்.


    நாங்கள் சென்றிருந்த மொத்த நபர்களும், அடுத்திருந்த பலிபீடத்தினருகே நின்று, எங்கள் எல்லோருடைய ஆணவமலம் அழியும், மீண்டும் மனத்தில் ஆணவமலம் எழாமையிருக்க வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.


    பின் நந்தி மண்டபம் இருக்க, அந்நந்தியாரை வணங்கி, ஆலய வருகையை பதிவிட்டு, ஈசனின் தரிசனம் அனுமதியும் வேண்டி விண்ணப்பித்து நகர்ந்தோம்.


    இவற்றையெல்லாம் கடந்து செல்ல, இரண்டாவது வாயில் தெரிந்தது.


    இவ்வாயில் மூலமாக உள்ளே சென்றோம். நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க சந்நதி தெரிந்தது.


    சந்நிதி முன் வந்து தீப ஆராத்தி தரிசனத்திற்கு காத்திருந்தோம்.


    ஈசன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தந்த நிலையுடன் தெரிந்தார்.


    லிங்க உருவின் பின்புறம் உள்ள சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக அமைத்து இருந்ததைக் கண்டோம்.


    தீபாராதனையுடன் ஈசனை மனமுருக வணங்கி வேண்டிக்கொண்டு அர்ச்சகரிடம் பெற்ற வெள்ளிய விபூதியை அப்படியே நெற்றிக்கு தரித்துக் கொண்டோம். பின் பிராகார தொழுகைக்கும் செல்வதால், ஈசனிடம் *போயிட்டு வருகிறேன்* என கூறி நகர்ந்தோம்.


    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆதலால், ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றதை பார்த்து தொழுது வணங்கிக் கொண்டோம்.


    தெற்கு உட்பிரகாரத்தில் வலம் வரும்போது, நால்வர் சந்நிதியும் மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக்கு முன்பாக வந்து வந்து நின்று அறுபத்து மூவரையும் வணங்கிக் கொண்டோம்.


    மேற்கு உட்பிரகாரத்தில் வலம் வரும்போது, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் கண்டு ஆனந்திக்கு வணங்கிக் கொண்டோம்.


    வடக்குப் பிரகாரத்தில் வலம் வரும்போது,அம்மை சந்நிதி இருந்தது. இங்கு அம்மை தெற்கு நோக்கிய வண்ணம் பாலாம்பிகை அருள்பிராவாகமாக காணும்படி தெரிந்தாள்.


    அவளழைக் கண்டும், அவளருளை வேண்டியும் பிரார்த்தித்து, நாடு வளமான சுபீட்சத்தை அடையும் பேருளீழியை பெற்றுத் தர *நீயே, தவமிருந்து ஈசனிடம் வரத்தை பெற்றருளு!"* என வேண்டி விண்ணப்பித்து, அர்ச்சகர் தந்த குங்குமத்தை எடுத்து என் துணைவியாருக்கு அணிவித்து பின் பிராகாரம் திரும்பினோம்.


    அடுத்து உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரிடம் வந்தோம். அவரிடம் அவருக்குண்டான வணக்க ஒழுக்கத்தை கடைபிடித்து வணங்கித் திரும்பினோம்.


    பின், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக இருந்தார்கள். அவர்களையும் பார்த்து வணங்கிக் கொண்டோம்.


    கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறமாக வரும்போது, மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதியை பார்த்து தொழுது திரும்பினோம்.


    இதன் அருகில் *மூர்க்க நாயனாரும்* தனி சந்நிதியில் காட்சி தருகிறார். விழுந்தெழுந்து பணிந்தோம்.


    இத்தலத்திலுள்ள முருகனைக் காண்கையில், தன் கையில் வேல் இல்லாமலும், வில்லையும் அம்பையும் ஏந்தியவாறும் ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சியாகத் தெரிந்தார்.


    அனைவரையும் வணங்கிப் புறப்பட்டு, ஆலய வெளியேறுமிடத்திற்கு வர, கொடிமரத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து சிரம் வலம் இடம் புரள, தோள்கள் வலம் இடம் தேர், கரஙகளை நீட்டி வணங்கி எழுந்து புறப்பட்டோம்


    *தல பெருமை:*
    இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வழங்கப்படுகிறார்.


    கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.


    மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது.


    நடராசசபை தனியே அழகாக உள்ளது.


    கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன.


    கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம்.


    தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.


    *ஸ்தலவிருட்சம்:*
    இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது.


    தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது.


    இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது.


    கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.


    *தலச் சிறப்பு:*
    ராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான்.


    குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான்.


    குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது.


    செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.


    இந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான்.


    ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.


    இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.


    கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள் என்பது சிறப்பு.


    திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.


    *புராணச் செய்தி:*
    இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும்.


    பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது.


    சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை.


    இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.


    நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார்.


    கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.


    முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.


    இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு பாடல்கள் உள்ளன.


    இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.


    இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.
    இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும்.


    *மூர்க்க நாயானார்:*
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த தலம் திருவேற்காடு.


    இவர் சிவனடியார்களுக்கு உணவு கொடுத்து வரும் சிவத்தொண்டைத் செய்து வந்தார். நாளடைவில் இவரின் செல்வம் யாவும் இவரின் இந்த சிவத்தொண்டில் கரைந்துவிட, சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் செல்வத்தை சிவனடியார்களுக்கு உணவிட செலவு செய்து தனது திருத்தொண்டை தொடர்ந்து நடத்தினார்.


    இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.


    ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால், இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.
    *திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த திருத்தேவூர் தேவாரத் திருப்பதிகம்:*


    (இரண்டாம் திருமுறை 82வது திருப்பதிகம்)


    ☘பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் அண்ணல் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும் பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள் சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர் அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘பாடு வாரிசை பல்பொருட் பயன்உகந் தன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர் அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘தருவு யர்ந்தவெற் பெடுத்தஅத் தசமுகன் நெரிந்து வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தஎம் பெருமான் செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர் அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர் ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.


    ☘அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.


    திருச்சிற்றம்பலம் .


    நாளைய தலம் *திருப்பள்ளியின் முக்கூடல்.(குருவிராமேஸ்வரம்.)*

    *கோவை.கு.கருப்பசாமி.*

    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X