"லைசென்ஸ் இருக்கா?"
"இந்தாங்க"
"இது ஜெராக்ஸ் ஒரிஜினல் எடு இல்லன்னா ஃபைன் கட்டு"
"ஒரிஜினல் இல்லாம ஜெராக்ஸ் எப்டி ஆப்பிசர் எடுத்திருப்பேன் ?"
"அதெல்லாம் செல்லாது பைன் கட்டு "
"எதுக்கு இப்ப இந்த ஒரிஜினல் லைசென்ஸ் கேக்கறீங்கன்னு சொல்லிட்டு அப்றம் பைன் கட்ட சொல்லுங்களா ஆப்பிசர்?"
"எல்லாம் உங்க உயிர் மேல அரசாங்கத்துக்கு இருக்குற அக்கறைதான்.
அதுக்குதான் இந்த சட்டம் "
"நாங்க உயிர் பொழைக்கணும்னு அக்கறையா இல்ல நீங்க பொழைக்கணும்னு அக்கறையா?"
"நீ ரொம்ப பேசற ..ஒரிஜினல் லைசென்ஸ் இல்லன்னா ஃபைன் கட்டு"
"இப்ப பைன் கட்டி ரசீது தரீங்க ..அடுத்த சிக்னல்ல இன்னொரு போலீஸ்கார் நிறுத்தி லைசென்ஸ் கேப்பாறு .. இந்த ரசீத காட்டிட்டா போன்னு விட்ருவார் ..அப்ப இந்த சட்டம்லாம் எங்க உயிர எப்டி காப்பாத்துது?..நீங்க சம்பாதிக்க போடறதுதானே இந்த சட்டமெல்லாம்.?!"
"என்ன லைசென்ஸ் எக்ஸ்பைர் ஆயிருக்கு ரினீயூ வேற பண்ணல ..அதுக்கும் ஃபைன் கட்டு"
"எதுக்கு renewal பண்ணனும்னு சொல்றீங்க .. ஓட்ட தெரியும்னு காட்டத்தானே லைசென்ஸ் கேக்கறீங்க ..அதான் ஓட்ட தெரியும்னு சொல்லி ஒரு தடவ லைசென்ஸ் தந்தாச்சுல்ல ..அஞ்சு வருஷமா ஒட்டிட்டுதானே இருக்கோம்..அஞ்சு வருஷம் கழிச்சு ஓட்டறது எங்களுக்கு மறந்து போய்ருக்கும்னு நினைக்கறீங்களா? எதுக்கு ரினியூ பண்ண சொல்றீங்க....
இல்லன்னா ஃபைன் போடறீங்க .."
"மக்கள் உயிரக் காப்பாத்துற சாலை விதிகளை, சட்டத்தை கிண்டல் பண்றே.இப்டி ஓவரா பேசினா அதுக்கும் ஃபைன் உண்டு .."
"லைசென்ஸ் ரினியூ பண்றவங்க ஒரிஜினல் லைசென்ஸ் வெச்சிருக்குறவங்க எப்டி வேணா ஓட்டிட்டு போலாமா..?
சாலை விதிகள மீறினா ஃபைன் கட்டிட்டு தப்பிச்சிடறாங்க...
ஹெல்மெட் போடாதவங்க ஃபைன் கட்டிட்டு அடுத்த தடவ ஹெல்மெட் போட்டுகிட்டா போறாங்க .? லைசென்ஸ் இல்லாம ஓட்டறவங்க ஃபைன் கட்டிட்டு அடுத்த தடவ லைசென்ஸ் எடுத்துட்டா போறாங்க..?
மாட்டும் போதெல்லாம் ஃபைன் கட்டிட்டு விதி முறைகள மீறிட்டுதானே இருக்காங்க .
அப்ப இந்த ஃபைன் கலெக்ஷன்ல மக்கள் நலன் எங்கே காக்கப்படுது.?
..இப்டி எல்லாத்துக்கும் ஃபைன் போடறத விட அவன் வண்டி சாவிய வாங்கிட்டு நடக்க விடுங்க சார் ...
இல்லன்னா வண்டிய பார்ட் பார்டா கழட்டி போடுங்க ..அடுத்த தடவ யாராது விதி மீறராங்களான்னு பாருங்க ."
"சிங்கபூர் மாதிரி நாட்டுல ஃபைன் போடறதால தான் மக்கள் சால விதிகளைக்கடைப் பிடிக்கறாங்க.விதிகளுக்கு உட்பட்டு ஓட்டிகிட்டு போறாங்க .."
"நீங்க முதல்ல சிங்கபூர்ல போட்ட மாதிரி ரோடு போடுங்க ஆப்பிசர்ஸ் அப்புறம் அங்க போடற மாதிரி ஃபைன் போடலாம்...
அங்க மக்கள் குடுக்குற ஃபைன்ல ரோட பராமறிக்கறாங்க நீங்க நாங்க குடுக்கற ஃபைன வெச்சு உங்க தொப்பைய தானே பராமறிக்கறீங்க...
இந்த ஃபைன்னால மக்கள் நலன் நாட்டு நலனுக்கு என்ன ஆகுது சொல்லுங்க..?"
"நீ தேவை இல்லாம பேசற ..வண்டி நம்பர் சொல்லு "
"TN 03 "
"TN 03"
"J "
"J"
"xxxx"
"TN 03 J xxxx"
"Yes sir"
"ஏய்...இது என் வண்டி நம்பர்..விளையாடறியா? ..உன் வண்டி நம்பர் சொல்லு.."
"எனக்கு ஏது வண்டி ..நான் நடந்துல்ல வந்தேன்"
"என்னது நீ நடந்து வந்தியா?"
"பின்ன... ஃபைன் வாங்குற ஆர்வத்துல வண்டி இல்லாம நடந்து வரவங்கள நிறுத்தி இவ்ளோ விசாரிச்சா எப்டி சார்?...
போங்க சார்... !!
அடப்பாவிங்களா

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends