Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
தசாவதாரம் பற்றிய நான் இயற்றிய ஸ்லோகங்கள்
मत्स्यावतारम्
वेदेषु मग्नेषु कुबुद्धिना अब्धौ भुवने प्लाविते अधर्मस्रोतसा |
सुधीरेव मत्स्यः सर्वस्य व्यापी धर्मस्यगोप्ता च सुनिश्चयात्मा ||
வேதேஷு மக்னேஷு குபுத்தினாஅப்தௌ
புவனே ப்லாவிதே அதர்மஸ்ரோதஸா
ஸுதீ: ஏவ மத்ஸ்ய: ஸர்வஸ்ய வியாபீ
தர்மஸ்ய கோப்தா ச ஸுநிச்(श)சயாத்மா
வேதங்கள் வேதங்கள் துஷ்டபுத்தியினால் கடலில் மூழ்கினபோது உலகம் அதர்மத்தினால் சூழப்பட்டது. அப்போது அதை நல்லறிவு என்ற மீன் எங்கும் பரந்து தர்மத்தை தெளிவான எண்ணத்துடன் காப்பாற்றுகிறது.
மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாசுரனால் வேதம் பிரம்மா பிரளயகாலத்தில் (பிரம்மாவின் இரவு) தூங்கும்போது கவரப்பட்டு சமுத்திரத்தில் ஒளிக்கப்பட்டது. பகவான் மிகப்பெரிய மீன் உருவில் அவ்வசுரனைக்க் கொன்று வேதங்களை மீட்டார் என்பது புராணம்.
இதற்கு என்ன உள்ளர்த்தமாக இருக்கும் என்று யோசித்தத்தில் அடியேனுடைய சிற்றறிவிற்குத் தோன்றியதை இங்கே பகிர்கின்றேன் , இவ்வாறு பத்து அவதாரங்களுக்கும் விளக்கம் எழுத முற்படுகிறேன்.
ஹயக்ரீவசுரன் ஒரு பலம் பொருந்திய குதர்க்கமான அறிவின் உருவகம். இது உலகில் வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளை அறியாமை என்ற கடலில் மூழ்கச்செய்து அதர்மத்தை நிலை நாட்டுகிறது.
ஹய என்ற சொல் , குதிரை என்பதைத் தவிர ஒரு வகை மனிதர்கள் , மரத்தைப்போல் திடம் உடையவர்கள், திமிர், தவறான் வாழ்க்கை முறை, பயமின்மை இந்த குணங்களைக் கொண்டவர்கள் என்பது அகராதியின் விளக்கம். 'காஷ்டா துல்யா வபு: த்ருஷ்ட: மித்யாசார: ச நிர்பயா:'
வேதத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் உலகில் அதர்மம் தலை விரித்தாடுகிறது. அந்த சமயம் இறைவனின் அருளால் நற்புத்தி திடம் பெற்று ஒரு பெரிய மீனைப்போல அந்த வேதங்கள் காட்டிய வழியை மீட்கிறது.
பகவானின்
மத்ஸ்ய ஸ்வரூபம் மகாமத்ஸ்யம் என்று கூறப்படுகிறது. இது சுத்த ஸத்வ புத்தி ( மத்ஸ்யாவதாரம் வெண்மை உருவம்) எங்கும் வ்யாபித்ததைக் குறிக்கிறது.
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ' யதா மகாமத்சஸ்ய: உபே கூலே அனுஸஞ்சரதி பூர்வம் ச அபரம் ச,' என்று ஒரு வாக்கியம் காண்கிறோம்.
இதன் பொருள், எவ்வாறு மிகப் பெரிய மீன் இரண்டு கரைகளிலும் மாறி மாறி சஞ்சரிக்கிறதோ' என்று பொருள். இந்த மீன் நீரின் வேகத்தால் அலைக்கழிக்கப்படாமல் இரு கரைகளையும் மாறி மாறி தொட்டுக்கொண்டு சஞ்சரிக்கிறது.
இந்த இரு கரைகள் சந்தேகம், மயக்கம் என்பவை ( doubt and delusion.) ராக்த்வேஷாதிகளால் புத்தி சிறு மீன்களைப்போல் சம்சாரமாகிய சுழலில் அகப்பட்டு சுகம் துக்கம் என்ற இரு எல்லைகளுக்குள் ஊசலாடுகிறது.
புத்தி இறைவன் அருளால் தெளிவடைந்து விரிவடைந்து மகாமத்ஸ்யம் போல இருகரைகளால் மோதப்படாமல் ஒரே சீராக செல்கிறது. அந்த இரண்டு கரைகளும் விவேகம் வைராக்கியம் என்று மாறிவிடுகின்றன. புத்தி பிரம்மத்திடம் நிலை பெறுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends