137.நினைத்ததெத்தனை


நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்தி தனைப் பிரியாமற்
கனத்த தத்து வமுற் றழியாமற்
கதித்த நித்தி யசித் தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக் கெளியொனே
மதித்த முத்த மிழிற் பெரியோனே
செனித்த புத்தி ரரிற் சிறியோனே
திருத்த ணிப்ப தியிற் பெருமாளே.

- 137 திருத்தணிகைபதம் பிரித்து உரை


நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்தி தனை பிரியாமல்


நினைத்தது எத்தனையில் = நினைத்தது எல்லாம்.
தவறாமல் = நினைத்தபடியே கை கூடவும்.
நிலைத்த = நிலையான.
புத்தி தனை = புத்தியை விட்டு.
பிரியாமல் = நான் பிரியாமல் இருக்கவும்.


கனத்த தத்துவம் உற்று அழியாமல்
கதித்த நித்திய சித்த(ம்) அருள்வாயே


கனத்த = பெருமை வாய்ந்த.
தத்துவம் உற்று = உண்மையை நான் உணர்ந்து.
அழியாமல் = (அதன் பயனாக) அழிவில்லாது.
கதித்த = தோன்றக் கூடிய.
நித்திய = நிலையாததான.
சித்தம் = அறிவை.
அருள்வாயே = (எனக்கு) அருள்வாயாக.


மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மனித்தர் = மனிதர்களுக்குள்.
பத்தர் தமக்கு = அடியவர்களுக்கு.
எளியோனே = எளிமையானவனே.
மதித்த = போற்றப்படும்.
முத்தமிழில் = முத்தமிழ் ஞானத்தில்.
பெரியோனே = பெரியவனே.


செனித்த புத்திரரில் சிறியோனே
திருத்தணி பதியில் பெருமாளே.


செனித்த = தோன்றிய.
புத்திரரில் = (சிவபெருமானுடைய) குமாரர்களுள்.
சிறியவனே = இளையவனே.
திருத்தணிப் பதியில் பெருமாளே = திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


தத்துவம் உற்று அழியாமல்....
ஆறாறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ ... கந்தர் அனுபூதி
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரனினி தாமே
... திருமந்திரம்