Announcement

Collapse
No announcement yet.

Rajavallipuram temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rajavallipuram temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
    *(14-வது நாள்.)*

    *அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்.*
    *செம்பை, இராஜவல்லிபுரம்.*

    *இறைவன்:*அருள்மிகு அழகியகூத்தர்.


    *இறைவி:* அருள்தரும் சிவகாமி அம்மன்.


    *தீர்த்தம்:* அக்னி தீர்த்தம். (தாமிரபரணி.)


    *தல விருட்சம்:* வில்வம்.


    *ஆகமம்:* மகுடாகமம்.


    *தல அருமை:*
    செப்பறை நெல்லையப்பர் சந்நிதியில் எழுந்தருளி உள்ள அழகியகூத்தர் நிலையானது, ஹிரண்யவர்மன் என்கிற சோழ மன்னனின் காலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜருக்கு முன்னதாக செய்யப்பட்டது.


    இறைவனின் ஆணைக்கிணங்க சிற்பிகள் தஞ்சையில் இருந்து முதலில் செய்த சிலையை தெற்கு நோக்கி சுமந்து வந்தனர்.


    அம்மன்னன் செய்த இரண்டாவது சிலையே சிதம்பரத்தில் உள்ள மூர்த்தம் ஆகும்.


    இதற்கு இடையில் முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னன் மணப்படைவீடு என்ற சிற்றூரை தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.


    அவன் தாமிரபரணி நதியில் வெள்ளம் வரும் காலங்களில், திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமியை சென்று தரிசிக்க இயலாதது குறித்து வருந்தினார்.


    இறைவன் அவனது கனவில் தோன்றிக் தஞ்சையில் இருந்து நடராஜ திருமேனி வருவது குறித்தும், மேலும் நதிக்கரையின் அருகில் எறும்புகள் சாரை சாரையாக சென்று மறையும் இடத்தில் அவன் தரிசிக்கும்படி நெல்லையப்பரை பிரதிஷ்டை செய்து நடராஜருக்கும் சபை எழுப்பி அவன் அருகிலேயே தினமும் தரிசனம் செய்து கொள்ளும்படி கூறி மறைந்தார்.


    எனவே மணப்படைவீடு அரசுக்கான செப்பறையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


    மேலும் நடராஜ மூர்த்தியின் அழகினைக் கண்டு, அம்மன்னன் *அழகிய கூத்தர்* என உருவினான்.


    அதுவே இறைவனின் திருப்பெயராக விளங்கி நின்றுவிட்டது. இது சாரப்பதியாகும்.


    (ஒரு கோயிலைப் போல ஒத்த வடிவமைப்பையுடைய மற்றோரு திருக்கோயில்.
    இத்திருக்கோயில் திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் வடிவமைப்பை ஒத்தது.)


    *கல்வெட்டு:*
    செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலில் அமையப்பெற்றுள்ளது சபா மண்டபம் குளத்தூர் ஜமீன்தார் கட்டிய விபரம் கல்வெட்டில் உளன.


    இத்திருக்கோயில் பின்னால் ஆட்சி செய்த ஆறை அழகப்பன் முதலியார் மற்றும் பல்வேறு மன்னர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள் குறித்து கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல்வேறு சிறு சிறு கல்வெட்டுக்கள் உள்ளன.


    *இலக்கிய சிறப்பு:*
    *'செப்பறை மான்மியம்'* என்றும் நூல் இத்திருத்தலத்தின் பெருமையைப் பற்றி பலவிதமான செய்யுள்களில் அழகுடன் எடுத்துறைக்கின்றது.


    செப்பறை அந்தாதி, கட்டளைக்கலிப்பா போன்ற நூல்களிலும் இத்திருக்கோயில் பற்றின வரலாறு உளன.


    *சிறப்பு:*
    இத்திருக்கோயிலிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலைப் போலவே தாமிரக்கூறையால் வேயப்பட்ட சபை உள்ளன.


    தில்லையில் நிறுவதற்கு வடிவமைத்த முதலாவதான தாமிர உலோக நடராஜர் படிவம் இங்கேயும் உள்ளன.


    இரண்டாவதான வடித்தெடுத்த வடிவம்தான் தில்லையில் உள்ளது.


    ஆதலால், *தென்தில்லை* என இத்தலத்தை அழைக்கின்றனர். இதுவும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


    பழைய செப்பறை கோயில் கி.பி. ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்றில் கார்த்திகை மாதம் வந்த வெள்ளத்தில் சுற்றி இருந்த ஊரோடு இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது.


    தளவாய் அரியநாத முதலியார் வழி வந்த ஆரை அழகப்ப முதலியாரால் கி.பி. ஆயிரத்து எழுநூற்று இருபத்தாறாம் ஆண்டில், புதிய மேடான இப்பகுதியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


    இது சாரப்பதியாகும். ராஜவல்லிபுரத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலை அக்னி வழிபட்டு பயன் பெற்றார்.


    இங்கிருக்கும் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும்.


    *திருவிழாக்கள்:*
    ஆனித் தேரோட்டம்.
    மார்கழித் திருவாதிரை.


    *பூஜை காலம்:*
    ஆறு கால பூஜை.
    திருவனந்தல் - காலை 7.00 மணிக்கு,
    விளாபூஜை -காலை 8.00 மணிக்கு,
    கால சந்தி - காலை 9.00 மணிக்கு,
    உச்சிக்காலம் - காலை 10.00 மணிக்கு,
    சாயரட்சை - மாலை 6.00 மணிக்கு,
    அர்த்தமாம் - மாலை 7.00 மணிக்கு.


    *இருப்பிடம்:*
    இராஜவல்லிபுரம் அருகில் செப்பறை கிராமத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


    *செல்லும் வசதி:*
    திருநெல்வேலி தாழையூத்து இரயில் நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளன.


    திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து தடம் எண் 9, 9B, 4D இராஜவல்லிபுரம் சென்று, இங்கிருந்து ஒரு கி.மி. தொலைவில் இத்திருக்கோயிலை அடையலாம்.


    இத்திருக்கோயிலின் அருகிலேயே உள்ள மண்டபத்தில் தங்கும் வசதி உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில், செம்பை, திருநெல்வேலி- 627 359


    *தொடர்புக்கு:*
    0462- 233 4943.


    திருச்சிற்றம்பலம்.


    நெல்லை மாவட்ட சிவ தலங்களில் நாளை வருவது *அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். வள்ளியூர்*



    *கோவை. கு. கருப்பசாமி.*
    இனிமேல் அடியேனின் பெயர் இந்த இடத்திலேயே இருக்கும்.

    அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
Working...
X