சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
*(24-வது நாள்.)*

*அருள்மிகு காசிபநாதசுவாமி திருக்கோயில்.*

*அம்பாசமுத்திரம்.*

*இறைவன்:*அருள்மிகு காசிபநாதசுவாமி.


*இறைவி:* அருள்தரும் மரகதாம்பிகை.


*தீர்த்தம்:*
தேவி தீர்த்தம், சலா தீர்த்தம், காசிப தீர்த்தம், புழுமாறி தீர்த்தம், கோகில தீர்த்தம், ருத்ர தீர்த்தம்.


*தல விருட்சம்:* நெல்லி மரம்.


*ஆகமம்:* காமிக ஆகமம்.


*தல அருமை:*
கங்கையாற்றங்கரையில் காசியும், அதில் காசிவிஸ்வநாதர் கோயிலும் அமைந்திருக்கின்றன.


கங்கையாறு தண்பொருநை ஆற்றில் கலந்து வருவதாக திருநெல்வேலி தலபுராணத்தில் காணலாம்.


அக்கங்கையையும், காசியையும் நினைத்து இவ்வூர் இறைவனுக்கு காசிநாதர் என பெயர் வைத்து வழிபடலாயினர்.


ஆற்றில் இத்துறை காசிதீர்த்தம் எனப் பெயர்.


காசிபர் முனிவர் வழிபட்டதால் இறைவன் காசிபநாதர் என அழைக்கப்பட்டார்.


இத்திருக்கோயிலிருக்கும் கல்வெட்டில், *முள்ளி நாடு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து இளங்கோக்குடி என இத்தலம்* எனப்பட்டது.
இங்குள்ள இறைவனை திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய மகாதேவர், திருப்போத்துடைய பட்டாரகர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.


*"போத்து"* என்பது காளையைக் குறிக்கும் வார்த்தை.


இதனை வாகனமாக கொண்டவர் இறைவன், பெருமான் என்பதால் இறைவனை இவ்வாறு அழைக்கப்படுகிறார்.


இத்திருக்கோயில் திருப்போத்தீச்சரம் எனப்படுகிறது. ஆகையால் இவர் ஆலயத்தை *"எருத்தாளுடையார் கோயில்"* எனவும் அழைத்து வந்தனர்.


இறைவனை எருத்தாளுடைய நாயனார் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார்.


இதுவே இப்பெயர்கள் மருவி எரித்தாளுடையார் கோயில் என்றும், எரிச்சாளுடையார் கோயில் என்றும் வழங்கி வந்து விட்டனர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மன்னன் ஒருவனுக்கு கொடிய நோயொன்று பீடிக்கப்பட்டு உழன்றான்.


இத்தல இறைவனை வணங்கி வேண்டியதால் நோய் நீங்கப் பெற்றதனால், அவன் கொடுத்த பொன்னை கோவில் அர்ச்சகரிடம் பாதுகாக்கும்படி சொல்லிக் கொடுத்து வைத்திருந்தான் பிரம்மச்சாரியாக அந்தனன் ஒருவன்.


அடைக்கலப் பொருளை அபகரித்து, பொய் சத்தியமும் செய்த அர்ச்சகரை, புளியமரத்தோடு சேர்த்து வைத்து கண்டித்ததால், சுவாமி எரித்தார் கொண்டார் எனவும், எரிச்சாளுடையார் எனவும் காரணப் பெயர்களாயின.


இவை அம்பலத்தில் தல புராணத்திலும் காணப் படுகிறது. எரிச்சாளுடையார் சுயம்புவாக மேற்கு முகமாக காட்சி தருகிறார்.


இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.


இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாவதும் பெருமையுடையது.


நீதியைக் காத்து தருமத்தை நிலைநாட்டிய எரித்தாட் கொண்ட மூர்த்தி காசிப முனிவரின் யாக அக்னியில் முளைத்தெழுந்த லிங்கம் என்பர்.


*சிற்பச் சிறப்பு:*
ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதி மின் நடனக் காட்சி, திருவாட்டி, பள்ளியறை மணியடி மண்டப தூண்கள் உள்ளன.


மேலும், வசந்த மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்களாக, ஆறுமுக நயினார், வள்ளி, தெய்வானை, மயில் மீது அமர்ந்திருக்கும் ஒரே கல்லினால் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பானவையாக காட்சி தருகின்றன.


முன்னாலுள்ள பெரிய கதவில் நுட்பமான நிலையுடன் திருவிளையாடல் வரலாற்றை மரச் சிற்பங்களாக செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள்.


*பூஜை காலம்:*
விஸ்வரூபம்
திருவனந்தல்
காலசந்தி
உச்சிக் காலம்
சாயரட்சை
அர்த்தசாமம் என ஆறு கால பூஜை நடைபெறுகின்றன.


காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை,


மாலை 5.30 மணி முதல்
7.30 மணி வரை.


*திருவிழா:*
பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் விஷேசம்.


எட்டாம் திருநாள் அன்று சுவாமி அம்மன் அகத்தியப் பெருமானுக்கு திருமணக் காட்சி அருளுதல் சிறப்பாக நடைபெறும்.


ஒன்பதாவது திருநாள் திருத்தேரோட்டம்.


இவை தவிர திருவாதிரை, தைப்பூசம், கந்த சஷ்டி, சிவராத்திரி திருவிழாக்களும் நடைபெறும்.


*இருப்பிடம்:*
திருநெல்வேலி- பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து நாற்பது கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.


திருநெல்வேலி, தென்காசியிலிருந்து பேருந்து, இரயில் வசதிகள் உள்ளன.


*தொடர்புக்கு:*
செயல் அலுவலர்,
அருள்மிகு காசி பாதுகாப்பில் திருக்கோயில்,
அம்பாசமுத்திரம்,
திருநெல்வேலி-627 401


*தொடர்புக்கு:*
04634 253 921


நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய அடுத்த பதிவு *அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில். பிரம்மதேசம்.**அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*