Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    140.பொற்பதத்தினை


    பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்றா பத்தர்
    பொற்பு ரைத்து நெக்கு ருக்க அறியாதே
    புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து நைத்து திக்க
    புத்தி யிற்க லக்க மற்று நினையாதே
    முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
    முற்க டைந்த வித்து நித்த முழல்வேனை
    முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
    முத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே
    வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்றா ளித்த
    வித்தா கத்தர் பெற்ற கொற்றை மயில்வீரா
    வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
    மெய்த்தி ருந்த ணிப்பொ ருப்பி லுறைவோனே
    கற்ப கம்பு னக்கு றத்தி கச்சு டர்த்த சித்ர முற்ற
    கற்பு ரத்தி ருத்த னத்த லணைவேனோ?
    கைத்த அரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைந்த
    கைத்தொ ழுத்த றிந்து விட்ட பெருமாளே.



    - 140 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர்
    பொற்பு உரைத்து நெக் குருக்க அறியாதே


    பொன் = அழகிய பதத்தினை = பாதங்களை துதித்து = வணங்கி நல் பதத்தில் உற்ற = மேலான பதவியை அடைந்த பத்தர் =அடியார்களுடைய பொற்பு = அழகை உரைத்து = எடுத்து உரைத்து நெக்கு உரு(க்)க = உள்ளம் நெகிழ்ந்து உருக அறியாதே =அறியாமலும்


    புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க
    புத்தியில் கலக்கம் அற்று நினையாதே


    புத்தகப் பிதற்றை விட்டு = நூல்களைக் கற்றுப் பிதற்றலைவிட்டு வித்தகத்து = ஞானத்தால் துதிக்க = உன்னைத் துதித்திடபுத்தியில் = அறிவில் கலக்கம் அற்று = கலக்கம் இல்லாத வகையில் நினையாதே = உன்னை நினையாமலும்


    முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி
    முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை


    முற்பட = முற்பட்டு தலத்து உதித்து = பூமியில் தோன்றி. பின் =பின்னர் படைத்த அகிருத்தியம் = (நான்) செய்யும் அக்கிரமமான செயல்கள் முற்றி = நிரம்பி முன் கடைத் தவித்து = முன்னும் பின்னும் நின்று தவித்து நித்தம் உழல்வேனோ = தினந்தோறும் அலைகின்ற என்னை.


    முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து
    முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே


    முட்ட = அடியோடு இக்கடைப் பிறப்பினும் = இந்த இழிவான பிறப்பினுள் உட்கி = விழுந்து கிடப்பதை = கிடப்பதினின்றும்நீக்கி = நீக்கி முத்தி = மோட்ச இன்பத்தை சற்று எனக்கு அளிப்பது = சற்று நீ எனக்குக் கொடுத்து அருளுவதும் ஒரு நாளே = ஒரு நாள் ஆகுமோ?


    வெற்பு அளித்த தற் பரைக்கு இட புறத்தை உற்று அளித்த
    வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா


    வெற்பு அளித்த = (இமய) மலை அரசன் போற்றி வளர்த்த.தற்பரைக்கு = உமா தேவிக்கு இடப் புறத்தை உற்று அளித்த =இடது பாகத்தை அன்பு பொருந்தி அளித்த வித்தக அத்தர் =ஞான முதல்வராகிய சிவ பெருமான் பெற்ற = பெற்றருளிய.கொற்ற மயில் வீரா = வெற்றி மயில் வீரனே.


    வித்தை தத்வம் முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும்
    மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே


    வித்த = கல்வி தத்வம் = உண்மை (இவைகளைக் கொண்ட)முத்தமிழ்ச் = மூன்று வகைகளைக் கொண்ட தமிழ் மொழியின் சொல் = சொல்லும். அத்தம் சத்தம் = பொருள் ஓசையும்வித்தரிக்கும் = நீடித்திருக்கும். மெய்த் திருத்தணிப் பொருப்பில் =மெய்ம்மை விளங்கும் திருத்தணி மலையில். உறைவோனே =வீற்றிருப்பவனே.


    கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் உற்ற
    கற்புர திரு தனத்தில் அணைவோனே


    கற்பகப் புனக் குறத்தி = தென்னை மரங்கள் உள்ள (வள்ளிமலைக்) கொல்லையில் வாழ்ந்த குறப் பெண் வள்ளியின் கச்சு அடர்ந்த = கச்சு நெருங்கும் சித்ரம் உற்ற = அழகுள்ள. கற்புரத் திருந்த = பச்சைக் கற்பூரம் அணிந்துள்ள தனத்தில் அணைவோனே = கொங்கையில் அணைபவனே.


    கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
    கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே.


    கைத்து = வெறுத்து அரக்கர் = அசுரர்கள் கொத்து உகச் சினந்து =கூட்டம் சிதறுண்டு அழியக் கோபித்து வஜ்ரனுக்கு =வச்சிராயுதத்தை உடைய இந்திரனுக்கு அமைந்த = அவர்கள் இட்ட கைத்து = கை விலங்குகளை ஒழித்து அறிந்து விட்ட பெருமாளே = முறித்தெறிந்த பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    1.புத்தகப் பிதற்றை விட்டு...
    கருங் கடலூடும் கதற்றும் அநேகம்
    கலைக் கடலூடும் சுழலாதே............................................................திருப்புகழ், பெருக்கவுபாய.


    2.தற்பரைக்கு இடப் புறத்தை உற்று அளித்த....


    பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வலம் வந்து தேவியை வலம் வராமல் செல்ல, முனிவர் ஒரு வண்டு உருவம் கொண்டு, இருவர் மத்தியில் நுழைந்து சென்றார். தேவி முனிவர் செய்கைக்குக் காரணம் கேட்க, சிவன் இட்ட சித்தி பெற விரும்புவோர் உன்னையும், முத்தி பெற விரும்புவோர் என்னையும் வழிபடுவர் என்று கூறினார். அதைக் கேட்ட பார்வதி கேதாரம் என்னும் தலத்தில் தவம் புரிந்து, சிவபெருமானுடைய இடது பாகத்தையே தனக்கு இடமாகப் பெற்றார். இதனால் சிவன் அர்த்தநாரீசர் ஆயினார்.
Working...
X