141.முத்துத்தெறிக்க


முத்துத் தெறிக்கவள ரிக்குச் சிலைக்கைமதன்
முட்டத் தொடுத்த மலராலே
முத்தத் திருச்சலதி முற்றத் துதித்தியென
முற்பட் டெறிக்கு நிலவாலே
எத்தத் தையர்க்குமித மிக்குப் பெருக்கமணி
இப்பொற் கொடிச்சி தளராதே
எத்திக் குமுற்றபுகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில் வரவேணும்
மெத்தச் சினத்துவட திக்குக் குலச்சிகர
வெற்பைத் தொளைத்த கதிர்வேலா
மெச்சிக் குறத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப் பணைத்த மணிமார்பா
மத்தப் ரமத்தரணி மத்தச் சடைப்பரமர்
சித்தத் தில்வைத்த கழலோனே
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த பெருமாளே.

-141 திருத்தணிகைபதம் பிரித்து உரை


முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன்
முட்ட தொடுத்த மலராலே


முத்து தெறிக்க = (தனக்குள் இருக்கும்) முத்து வெளியே தெறித்து விழும்படியாக வளர் = முற்றி வளர்ந்துள்ள இக்கு =கரும்பை சிலைக் கை = வில்லாகக் கையில் ஏந்திய மதன் =மன்மதன் முட்ட = அடியோடு தொடுத்த = செலுத்திய மலராலே =மலர் அம்புகளாலும்.


முத்த திரு சலதி முற்ற உதி தீ என
முற்பட்டு எறிக்கு(ம்) நிலவாலே


முத்த = முத்துக்களைத் தன் அகத்தே கொண்ட. திரு = அழகியசலதி = கடல் முற்ற உதி = பரப்பிலே உதிக்கின்ற. தீ என =நெருப்பைப் போல முற்பட்டு எறிக்கு(ம்) = எதிர்ப்பட்டு வீசும் நில ஒளியாலும்.


எத்தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி
இ பொன் கொடிச்சி தளராதே


எத் தத்தையர்க்கும் = எந்த கிளி போன்ற பெண்களுக்கும். மிதம் மிக்குப் பெருக்கமணி = அலர் மொழி பேசுவதால் வரும் இன்பம் பெருகிப் பொருந்துவதைக் கண்டும். இப் பொன் கொடிச்சி =இந்தப் பொற் கொடி போன்ற பெண் தளராதே = தளர்ச்சியுறாத வண்ணம்.


எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில்
இற்றை தினத்தில் வர வேணும்


எத் திக்கும் உற்ற = எந்தத் திக்கில் உள்ளவர்களும் புகழ் =புகழ்கின்ற திருத்தணியில் = தணிகையில் இற்றைத் தினத்தில் =இன்றே வர வேணும் = வந்தருள வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மெத்த சினத்து வட திக்கு குல சிகர
வெற்பை தொளைத்த கதிர் வேலா


மெத்த = மிகுதியாக சினத்து = கோபித்து வட திக்கு = வட திசையில் இருந்த குலச் சிகர வெற்பை = சிறந்த சிகரங்களைக் கொண்ட (கிரவுஞ்ச) மலையை தொளைத்த = தொளை செய்தகதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.


மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி
மிக்கு பணைத்த மணி மார்பா


மெச்சி = புகழ்ந்து குறத்தி = குறப் பெண்ணாகிய வள்ளியின்தனம் = கொங்கைகளை இச்சித்து = விரும்பி அணைத்து =அணைத்து உருகி = மனம் உருகி மிக்கு = மிகவும் பணைத்த =பெருமையை அடைந்த மணி மார்பா = அழகிய மார்பனே.


மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர்
சித்தத்தில் வைத்த கழலோனே


மத்த ப்ரமத்தர் = வெறி மிகுத்த பித்தரான (பரமர்) மத்த =ஊமத்தம் பூ அணிந்த சடைப் பரமர் = சடையை உடைய மேலானவர் ஆகிய சிவபெருமான் சித்தத்தில் வைத்த = தமதுஉள்ளத்தில் வைத்துப் போற்றிய கழலோனே = திருவடிகளை உடையவனே


வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை
வெட்டி துணிந்த பெருமாளே.


வட்டத் திரைக் கடலில் = வட்டவடிவுள்ள அலை வீசும் கடலில்மட்டி = (அசுரர்களை) முறித்து அழித்து துணித்த பெருமாளே =வெட்டித் துண்டாக்கிய பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


1.முத்தத் திருச் சலதி முற்ற....
முத்துப் பிறக்கும் இடங்கள் எட்டு என்றும் இருபது என்றும் கூறுவர். இவற்றுள் சிறந்தது கடலாகும்.
நித்தலவாரி முத்து நகைக் கொடி .... திருப்புகழ், ஓலையிட்ட


2.மெச்சிக் குறத்தி தனம் இச்சித்து....
வள்ளியை அணைத்தல் தன் கடமை என அணிந்து மகிழ்ந்தார்.
குறமாதுடன் மால் கடனாம் எனவே அணைமார்பா...திருப்புகழ் , சிவமாதுடனே


1. மத்த ப்ரமத்தர் அணி....
பித்தா பிறை சூடீ ... சம்பந்தர் தேவாரம்
பித்தா பிறை சூடீ பெருமாளே அருளாளா ... சுந்தரர் தேவாரம்