Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    142.வட்டவாட்ட


    வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
    மக்கள்தாய்க் கிழவி பதிநாடு
    வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
    மற்றகூட் டமறி வயலாக
    முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
    முட்டர்பூட் டியெனை யழையாமுன்
    முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
    திக்குராக் கொளிரு கழல்தாராய்
    பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
    பத்தின்வாட் பிடியின் மணவாளா
    பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
    திச்சிதோட் புணர்த மயில்வேளே
    எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி
    யெட்டுமாக் குலைய எறிவேலா
    எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
    டெத்தினார்க் கெளிய பெருமாளே.

    - 142 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை
    மக்கள் தாய் கிழவி பதி நாடு


    வட்ட வாள் தனம் = வட்ட வடிவும் ஒளியும் உள்ள கொங்கையைக் கொண்ட மனைச்சி = மனைவியும். பால் குதலை மக்கள் = (அவள்) பால் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகள் தாய் கிழவி =வயது முதிர்ந்த அன்னை பதி = என் ஊர். நாடு = என் நாடு.


    வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள்
    மற்ற கூட்டம் அறிவு அயலாக


    வைத்த தோட்டம் = எனக்கு உள்ள தோட்டம். மனை =வீடு. அத்தம் = செல்வம். ஈட்டு பொருள் = சம்பாதித்த பொருள். மற்ற கூட்டம் = மற்ற உறவினர் கூட்டம். அறிவு = என் அறிவு (இவை எல்லாம்). அயலாக =என்னை விட்டு நீங்க.


    முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை
    முட்டர் பூட்டி எனை அழையா முன்


    முட்ட = நன்றாக ஓட்டி = ஓட்டி மிக எட்டும் = மிகவும்நெருங்கி வரும் மோட்டு எருமை = பெரிய எருமை மேல் (வரும்) முட்டர்= கால தூதராகிய மூடர்கள் என்னை பூட்டி = (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி. அழையா முன் = பாசக்கயிற்றால் கட்டி என்னை அழைப்பதற்கு முன்.


    முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்)
    குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்


    முத்தி வீட்டை அணுக = (நான்) முத்தி வீட்டை அணுகிச் சேரவும் முத்தராக்க = ஞானியர் போல் என்னை ஆக்கவும் சுருதி = வேதத்தினுள்ளும் குராக்குள் = குரா மலர்களினுள்ளும் ஒளிர் = விளங்குகின்ற இரு கழல் தாராய் = இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக.


    பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர
    இபத்தின் வாள் பிடியின் மணவாளா


    பட்ட(ம்) = (நெற்றிப்) பட்டமும் நால் பெரு = நான்கு பெரிய மருப்பினால் =தந்தங்களும் கர(ம்) = (தொங்கும்) துதிக்கையும் உடைய இபத்தின் = (ஐராவதம் என்னும்)யானை வளர்த்த வாள் = ஒளி பொருந்திய பிடியின் =பெண் யானை போன்ற நடையை உடைய(தேவசேனையின்) மணவாளா = மணவாளனே.


    பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர்
    பதிச்சி தோள் புணர் தணியில் வேளே


    பச்சை வேய்ப் பணவை = பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது இருந்த கொச்சை = இழி குலத்தவளானவேட்டுவர் = வேடர்களுடைய பதிச்சி = ஊரிலிருந்த (வள்ளியின்) தோள் புணர் = தோளை அணைந்த தணியில் வேளே = தணிகை வேளே.


    எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மா திகிரி
    எட்டுமா குலைய எறி வேலா


    எட்டு(ம்) நால் கர= தொங்கும் துதிக்கையை உடையஒருத்தல் = யானைகளும் மாத்திகிரி எட்டும் = பெரிய எட்டு மலைகளும் மாக்குலைய = நடுங்கும் படி எறி வேலா = செலுத்திய வேலனே.


    எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு
    எத்தினார்க்கு எளிய பெருமாளே.


    எத்திடார்க்கு அரிய = (உன்னைப்) போற்றித்துதிக்காதவர்களுக்கு அரிதான முத்த = முத்தனே(பாசங்களை நீக்கியவனே) பாத் தமிழ் கொண்டு =தமிழ்ப் பாக்களால் எத்தினார்க்கு = போற்றுபவர்களுக்கு எளிய பெருமாளே = எளிதான பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    1அறிவு அயலாக....
    புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
    அறிவு அழிந்திட்டு ... சம்பந்தர் தேவாரம்.
    (ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன் .. திருநாவுக்கரசர் தேவாரம்


    2. நாற்பெரு மருப்பினால்....
    இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.


    3. பணவை - பரண். ஒருத்தல் - யானை. அஷ்ட கஜங்கள் : எட்டு திசைகளில் இருக்கும் மலைகளில் வசிக்கும் யானைகள் அஷ்டதிக் கஜங்கள் எனப்படும். திசைக் காவலர்கள் என்றும் சொல்வர்.அவைகள் முறையே, ஐராவதம்( கிழக்கு), புண்டரீகம் ( தென் கிழக்கு), வாமனம் ( தெற்கு), குமுதம் ( தென் மேற்கு), அஞ்சனம் ( மேற்கு), புட்பதந்தம் ( வடமேற்கு) சார்வபௌமம் ( வடக்கு) சுப்ரதிபம் ( வடகிழக்கு)
    புண்டரீகத்தைப் பற்றிய குறிப்பு கந்த புராணத்தில் வருகிறது. சூரபத்மன் தேவலோகத்தை பிடித்தபோது அவனுடைய மந்திரி தர்ம கோபன், இந்த புண்டரீகத்தைப் சிறை பிடித்து, தன்னுடைய ஊராகிய மகேந்திரபுரிக்கு கொண்டு செல்கிறான். வீரபாகுத் தேவர் தூது சென்றபோது, சூர சேனைகளுடன் போரிட்டு, இந்த புண்டரீகத்தை மீட்டு வருகிறார்.


    4.எத்திடார்க்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தி....இந்த அடியை ‘தொக்கறா’என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் காணலாம்.
Working...
X