பெரியவா சரணம்


கடம் வித்வான் விநாயகராமின் பிள்ளை செல்வகணேஷ் டெல்லியில் ஒரு கச்சேரிக்குக் கஞ்சிரா வாசித்தார்.


செய்தித்தாள்களெல்லாம் அவரைப் பாராட்டி எழுதின. அச் சமயம் சுற்றுப் புறச் சூழல் அமைச்சருக்கு, செல்வகணபதியின் கஞ்சிரா உடும்புத் தோலால் ஆனது என்று தெரிய வர, பிராணிகளைப் பாதுகாப்பதில் குறியாக இருந்த அந்த அமைச்சர், 'உடனே அவரை கைது செய்யுங்கள்!' என்று உத்தரவு இட்டு விட்டார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விநாயகராம் வீட்டில் ஒரே அமர்க்களம். பிள்ளை எங்கோ கச்சேரிக்குப் போயிருந்த சமயம். கஞ்சிராக்கள் காலம் காலமாக இப்படித்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக வக்கீலை அணுகவும் நேரமில்லை.


உடனே, பெரியவாளை நினைத்து அழுது, 'நான் நடந்தே காஞ்சிபுரம் வருகிறேன்... காப்பாத்து' என்று வேண்டிக் கொண்டு அவ்வாறே காஞ்சிபுரம் வரை நடந்து சென்றார்.


தேநீர் பருக ஓரிடத்தில் நின்றார். அங்கே இருந்த ரேடியோவில், சுற்றுப்புற சூழல் அமைச்சராக இருந்தவருக்கு பதவி பறி போன செய்தியைச் சொன்னது.


அது என்னவோ பெரியவாளே வந்து அவருக்கு ஆறுதல் தரவே சொன்னது போல இருந்தது. அதற்கு பிறகு கதை அப்படியே ஒடுங்கி விட்டது.


கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!


பாரதி பாடிய, 'கண்ணன் என் சேவகன்' என்ற பாடலைப் போல , பெரியவா, பக்தர்களுக்கு எத்தனை வகையில் சேவை செய்தார் என்பதை நினைக்க நினைக்க பக்தி மேலிடுகிறது....


காருண்ய ரூபம் பெரியவா சரணம் சரணம்!