146.ஈனமிகு


ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.

146 ஆறுதிருப்பதிபதம் பிரித்தல்


ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே
யானும் உனக்கு அடிமை என வகையாக


ஈனம் மிகுத்துள = இழிவு மிகுந்துள்ள
பிறவி அணுகாதே = பிறப்பு என்னை அணுகாத வண்ணம்
யானும் உனக்கு = நானும் உனக்கு
அடிமை என வகையாக=அடிமையாகும் திறத்தைப் பெற்று


ஞான அருள் தனை அருளி வினை தீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஞான அருள் தனை = ஞானம் என்னும் திருவருளை.
அருளி = எனக்கு அருள் புரிந்து.
வினை தீர = என்னுடைய வினைகள் ஒழிய.
நாணம் = நாணம் (என்னும்) விலங்கை.
அகற்றிய = அகற்றுகின்ற (இறந்த காலம், நிகழ் காலப் பொருளில் வந்துள்ளது).
கருணை புரிவாயே = கருணையைத் தந்தருள்க.


தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
சாரதி உத்தமி துணைவ முருகோனே


தான தவத்தினின் = (அன்பர்கள் செய்யும்) தானத்திலும்,தவத்திலும் மிகுதி = மேன்மைப் பகுதியை
பெறுவேனோ = நான் அடையப் பெறுவேனோ
சாரதி உத்தமி = சரசுவதி தேவியாகிய உத்தமிக்குத்
துணைவ =துணை செய்பவனே முருகோனே = முருகனே.


ஆன திருப்பதிகம் அருள் இளையோனே
ஆறு திரு பதியில் வளர் பெருமாளே.


ஆன திருப்பதிகம் அருள் = சிவபெருமானுக்கு உகந்த திருப்
பதிகங்களாகிய தேவாரப் பாக்களை அருளிய
அல்லது
ஆன = உனக்கு உகந்த, உலகத்துக்கு உகந்த, திருப்பதிகம் = பாடல்களை அருள் =பாடும்படி எனக்கு அருளிய
இளையோனே = இளைய சம்பந்த மூர்த்தியே, இளையவனே
ஆறு திருப்பதியில் = ஆறு படை வீடுகளில்
வளர் பெருமாளே = விளங்கும் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


1. ஆன திருப் பதிகம் அருளிய இளையோனே....
வாழ்க அந்தணர் என்ற திருப் பாசுரத்தைப் அருளிய சம்பந்த மூர்த்தியே.


2. ஆறு திருப் பதியில் வளர்...
ஆறு படை வீடு என்ரு கூறாமல் ஆறு திருப்பதி என்று கூறப்பட்டது. ஆறு திருப்பதிகள் திருமுருகாற்றுப் படையில் நக்கீரரால் எடுத்து ஓதப்பட்ட ஆறு தலங்கள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திரு ஆவினன்குடி,திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை. பின்னர் இவை ஆற்றுப்படை வீடு என மருவி அழைக்கப்பட்டன.


சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய திருப்புகழ் அலைகடல்


3. உத்தமி துணைவ...
சகோதர முறை உடையவனே என்றும் கொள்ளலாம்.